கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர் : தற்காலிக அட்டவணையும் தயார்

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஆண்டுதோறும், மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். முந்தைய தேர்வு, மார்ச், 8ல் துவங்கி, 30 வரை நடந்தது. வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, மும்முரமாக செய்து வருகிறது.
தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் தர வேண்டும் என, ஏற்கனவே, தேர்வுத்துறை கூறியிருந்தது.

கூடுதலாக 46 ஆயிரம் பேர் : அதன்படி, மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் பெறப்பட்டு, தற்போது, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, எட்டு லட்சம் மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வை, கூடுதலாக 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கி விடும். அதற்கு, இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, செய்முறை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, பதிவெண்கள் வழங்க வேண்டும். இதே எண்களைத் தான், எழுத்து தேர்விலும், மாணவ, மாணவியர் பயன்படுத்துவர். எனவே, ஜனவரியில், பொங்கல் பண்டிகை முடிந்ததும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பதிவெண்கள் விவரம், அந்தந்த பள்ளிகளில் அறிவிக்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வில், நான்கு லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தற்காலிக அட்டவணை : இதற்கிடையே, தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை, தமிழக அரசின் பார்வைக்கு, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. மார்ச் 1 அல்லது 4 ல் இருந்து, தேர்வை துவக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என, கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர்.
அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால், திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும். அதன்பின், மீண்டும் அரசின் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வமாக, மாணவ, மாணவியருக்கு அறிவிக்கப்படும். மார்ச் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதால், இந்த தேதியில் இருந்து துவங்கும் அட்டவணை இறுதியாவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

10ம் வகுப்பு நிலை என்ன? : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள்தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி'க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி, முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், "சிடி'க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20 தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட "சிடி'க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி'க்கள் தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன. மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும்போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...