கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பயோடெக்னாலஜி படிப்பவர்கள் இனி மருத்துவ படிப்பிலும் சேரலாம்!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், மேல்நிலைப் பிரிவில், இக்கல்வியாண்டு முதல் பயோடெக்னாலஜி படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய 2 படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னர், அவர்கள், பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்திய மருத்துவக் கவுன்சில், 2013-14ம் ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, NEET என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, MCI அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, ஒரு மாணவர், பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர்தொழில்நுட்பம்(Biotechnology) மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை, கட்டாயம் படித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில், கூட்டாக 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதைத்தவிர, NEET தேர்விலும், மெரிட் பட்டியலில் வர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த புதிய அறிவிப்பின் மூலமாக, பள்ளிகளில், பயோடெக்னாலஜி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறையால், பல பள்ளிகளில், பயோடெக்னாலஜி துறையில், கொள்ளளவு எண்ணிக்கையை விட, குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் கற்கிறார்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government / Government aided schools Admission will start from tomorrow (01-03-2025)

  நாளை (01-03-2025) முதல் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்... Admission to Government / Government aided schools ...