கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை, அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள் :
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' முறையில் நடந்து வருகின்றன. எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது.விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...