கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெரியார் பல்கலை தொலைநிலை கல்வியில் "பகீர்' முறைகேடு:மூடி மறைக்க போராடும் சிண்டிகேட் உறுப்பினர்கள்

பெரியார் பல்கலையில், 33 தொலைநிலைக் கல்வி மையங்கள், அனுமதி கடிதம் பெறாமலேயே, மாணவர் சேர்க்கை நடத்தியுள்ள, "பகீர்' முறைகேடு வெளியாகி உள்ளது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், இவைகளுக்கு முன் தேதியிட்டு அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருவது, பல்கலை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பல கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம், பெரியார் பல்கலையின் சார்பில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படுகின்றன. இதற்காக, 300க்கும் மேற்பட்ட படிப்பு மையங்கள், தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், 2011ம் ஆண்டில், புதிதாக படிப்பு மையம் அமைக்க, ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 60க்கும் மேற்பட்ட படிப்பு மையங்களில் நேரடி ஆய்வு நடத்தி, அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனுமதி நிறுத்தி வைப்பு:
ஆனால் அப்போது, "டெக்' அப்ரூவல் பெறாமல், புதிய படிப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அப்படிப்பு மையங்களுக்கு அனுமதி கடிதம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தொலைநிலைக் கல்விக்கு, டெக் அப்ரூவல் இன்னமும் பெறப்படாமல் உள்ளதால், இம்மையங்களுக்கு இதுவரை அனுமதி கடிதம் வழங்கப்படவில்லை.ஆனால், இம்மையங்களில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதியது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பல்கலை நிர்வாகம், தீவிர ஆய்வு நடத்த, இதுபோல் அனுமதி கடிதம் பெறாமலேயே, மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளதாக, 33 தேர்வு மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், 4,500 மாணவர்களும் சேர்க்கப்பட்டு, தேர்வும் எழுதியுள்ளது, உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொலைநிலைக் கல்விக்கென, இயக்குனர் தலைமையில், தனிப்பிரிவு, பல்கலையில் செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தகவல்கள், இங்கு பதியப்படுகின்றன. இங்கிருந்து தேர்வாணையத்துக்கு தரும் மாணவர் சேர்க்கை பட்டியலை அடிப்படையாக வைத்தே, தொலைநிலைக் கல்வி தேர்வு நடத்தப்படுகிறது.

தன்னிச்சையாக, "கோட்' எண்:
கடந்த ஆண்டு இயக்குனராக இருந்த குணசேகரன் மற்றும் அலுவலர்கள், அனுமதி பெறாத மையங்களுக்கும் தன்னிச்சையாக, "சென்டர் கோடு எண்' கொடுத்து, அம்மைய மாணவர்களையும், அனுமதி பெற்ற மையங்களின் மாணவர் பட்டியலுடன் முறைகேடாக இணைத்துள்ளனர். இதனால் போலி படிப்பு மையம் இம்மாணவர்களுக்கு தேர்வு நடத்தியதும், அதில் பலருக்கு சான்றிதழ் வழங்கிய கொடுமையும், பல்கலை நிர்வாகத்துக்கு தெரியாமலேயே நடந்துள்ளது.ஆனால் அதற்குள், "மோப்பம்' பிடித்த பல சிண்டிகேட் உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் போலி படிப்பு மையங்களிடம், தனித்தனியே பேரம் பேசி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதில் பலமாக கவனிக்கப்பட்டவர்கள், "மாணவர் நலன் கருதி' என்ற, "பொதுநல' நோக்கத்துடன், இப்படிப்பு மையங்களுக்கு, முன்தேதியிட்டு, அனுமதி கடிதம் வழங்க வேண்டும் எனவும், நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதன் உச்சகட்டமாக, செப், 21ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், "முன் தேதியிட்டு அனுமதி கடிதம் வழங்கலாம்' என, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.தமிழக அரசின் உத்தரவை மீறும், முறைகேடான இத்தீர்மானத்தை அமல்படுத்த, துணைவேந்தர் உள்ளிட்டோர் தயக்கம் காட்டி வரும் நிலையில், இவற்றை உடனடியாக அமல்படுத்தியே தீரவேண்டும் என, சிண்டிகேட் உறுப்பினர்களில் சிலர் அடம்பிடித்துவருகின்றனர்.ஊழலை தடுக்க வேண்டிய அமைப்பான சிண்டிகேட் உறுப்பினர்களே, அதற்கு துணைபோவது பல்கலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் :
தமிழக அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜா கூறியதாவது:உரிய அனுமதி கடிதம் பெறாமல், மாணவர் சேர்க்கையை படிப்புமையங்கள் நடத்தியது சட்டப்படி குற்றம். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைக்கே பல்கலை பரிந்துரைக்கலாம்.அப்போதைய தொலைநிலைக் கல்வி இயக்குனர் குணசேகரன் மற்றும் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் துணையோடு தான், இந்த முறைகேடு நடந்துள்ளது. படிப்பு மையம் மற்றும், "ஆப் கேம்பஸ் புரோகிராம்'களை, பல்கலையின் அனுமதி பெறாமல் நடத்த துணைபோன அலுவலர்கள் மீதும், கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றை செய்யாமல், முறைகேடுக்கு துணை போக, பல சிண்டிகேட் உறுப்பினர்கள் தயாராக இருப்பதும், சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு ஆதரவாக தீர்மானம் இயற்றியிருப்பதும், வெட்கக் கேடான செயல்.
இதற்காக அம்மையங்களில், பல கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இத்தீர்மானத்தை ரத்து செய்வதுடன், ஊழலுக்கு துணைபோகும் சிண்டிகேட் உறுப்பினர்களையும், பதவியில் இருந்து நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

போலி தேர்வு மையங்கள் :
அனுமதி கடிதம் பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்திய போலி தேர்வு மையங்களும், முறைகேடாக வழங்கப்பட்ட சென்டர் கோடு எண்கள் விபரம்:
1. பாட்னா, ஆம்பிஷன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலாஜி, 1703
2. கொல்கத்தா, அட்டிட்யூட் மேனேஜ்மென்ட் அகடாமி, 1704
3. வாழப்பாடி, குரு ராகவேந்திரா காலேஜ் ஆப் டிஸ்டன்ஸ், 1706
4. பேளூர், எம்.ஆர்., ஸ்டடி சென்டர், 1707
5. கும்பகோணம், ஸ்ரீமயூரா ஸ்டடி சென்டர், 1710
6. ஆந்திரா, சித்திப்பேட், விஜயா சாய் எஜுகேஷனல் அகடாமி, 1712
7. குண்டூர், எஸ்.எம்.எஸ்., எஜுகேஷனல் சொஸைட்டி, 1715
8. ஹைதராபாத், நிலா எஜுகேஷனல் அகடாமி, 1716
9. வாரங்கல், நேரு எஜுகேஷனல் அகடாமி, 1718
10. ஜே.எஸ்.ஆர்., ஆன்லைன் சென்டர், 1727
11. புனே, ஸ்வாமி சமரத்எஜுகேஷன், 1729
12. பலூர்கட், ரபிந்திரா கரஸ்பாண்டன்ஸ் இன்ஸ்டிட்யூட், 1731
13. டார்ஜிலிங், கலீம்பாங் ஹிமாலயா எஜு கேர் இன்ஸ்ட்யூஷன், 1732
14. தனே, ஸ்ரீபாலாஜி எஜுகேஷன், 1735
15. தேனி, ஐ-வின் டெக்னாலஜி டீம், 1736
16. கொச்சி, ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், 1737
17. ஒரிஸா, பலசூர், பியார் அன்னப்பூர்ணா டாக்கீஸ், 1738
18. கோட்டக்கல், எஜு-வின் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் சென்டர், 1739
19. பாலக்காடு, டிசோன் டிஸ்டான்ஸ் எஜுகேஷன், 1741
20. ஹைதராபாத், ஜானவி காலேஜ் ஆப் ஐ.டி.,- 1742,
21. திருச்சி, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஜப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், 1743
22. கொல்கத்தா, இன்ஸ்டிட்யூட் ஆப் அப்ளைடு சயின்ஸ், 1745
23. டார்ஜிலிங், நார்த் பெங்கால், சென்ட்ரல் காலேஜ் ஆப் ஹையர் எஜுகேசன் சொசைட்டி, 1747
24. திருவண்ணாமலை, ஸ்ரீவெங்கடேஸ்வரா எஜுகேஷனல் கல்சுரல் ட்ரஸ்ட், 1749
25. கண்ணூர், புரொபஷனல் ஸ்டடி சென்டர், 1751
26. காசர்கோடு, ஸ்காலர் காலேஜ், 1752
27. ஆமதாபாத், சன்யாக் இன்ஸ்டிட்யூட் ஆப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன், 1753
28. திருச்சூர், எய்ம்ஸ் டிஸ்டான்ஸ் எஜுகேஷன், 1754
29. துர்காபூர், ஸ்கூல் ஆப் சயின்ஸ் அண்டு மேனேஜ்மென்ட், 1756
30. மேடாக், ஓரியண்ட் எஜுகேஷனல் அகடாமி, 1757
31. சேலம், அன்னை அகடாமி, 1758
32. ஆந்திரா, ஸ்ரீ வைஷ்ணவி காலேஜ் ஆப் ஹையர் எஜுகேஷன், 1759
33. ஹைதராபாத், எஸ்.ஆர்.கே., காலேஜ் ஆப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன், 1762

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...