கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"கல்வி ஆளுமைத்திறனை மேம்படுத்த வேண்டும்' : கவர்னர் ரோசய்யா அறிவுரை

"கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்,'' என தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 51ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் சந்தீப் சக்கரவர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார்

இவ்விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவது: ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றுவதற்குரிய அடித்தளத்தை உருவாக்குவதுடன்; நாட்டை காப்பாற்ற, வெளிநாட்டவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. ராணுவம் நம்நாட்டின் பெருமைக்குரிய அடையாளம். இதை உங்களிடம் பார்க்கிறேன். அணிவகுப்பு மரியாதை மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது என்பது மாணவர்களை நல்ல வழியில், சரியான திசையில் வழிகாட்டி செல்வதேயாகும். தேசிய பாதுகாப்பு கழகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதில், 24 சைனிக் பள்ளிகளில், நான்கு பள்ளிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதில், அமராவதி நகர் சைனிக் பள்ளியும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில், 500 மாணவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது. மாணவர்கள் லட்சியத்தை வகுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு கவர்னர் ரோசய்யா பேசினார். முன்னதாக "விஜயந்தா டேங்க்' கை பள்ளிக்கு கவர்னர் அர்ப்பணித்தார். தொடர்ந்து மாணவர்களது அணிவகுப்பு மரியாதை மற்றும் சிலம்பம், களரி, கராத்தே உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...