கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வீரதீர செயல்களுக்கான விருது: தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் உட்பட 22 பேர் தேர்வு

தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட, நாடு முழுவதும், 22 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கலான சூழ்நிலைகளில், தைரியமாக செயல்பட்டு, சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, ஆண்டு தோறும், வீரதீர செயல்களுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட, 22 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருது பெறுவோரில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த, ராம்தின் தாராவுக்கு, அவனின் இறப்புக்குப் பின், இந்த விருது வழங்கப்படுகிறது. தண்ணீரில் மூழ்கிய தன் நண்பனை காப்பாற்றுவதற்காக, உயிரை விட்ட, 15 வயது சிறுவன் இவன்.
விருது பெறும் குழந்தைகளில், நான்கு பேர் சிறுமிகள். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளில் மிகவும் இளையவன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கொரவுன்கம்மா. தன் வீடு தீப்பிடித்த போது, தைரியமாக செயல்பட்டு, தங்கையை காப்பாற்றியவன் இவன்.
விருது பெறும் குழந்தைகளின் பெயர் விபரங்களை, இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் பொது செயலர், கஸ்தூரி மொகாபத்ரா நேற்று அறிவித்தார். பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, இந்த 22 பேரையும் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியின் போது, குழந்தைகளுக்கு இந்த விருதுகளை பிரதமர் மன்மோகன் சிங் வழங்குவார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 New Income Tax Rates

    Budget Update: 2025-2026 புதிய வருமான வரி விகிதங்கள் வரம்பு 2025-2026 New Income Tax Rates • ₹0- 4 Lakh : NIL • ₹4 Lakh - ₹8 Lakh : 5% •...