கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அலெக்ஸாண்ட்ரா ஸ்காட்...

 
அலெக்ஸாண்ட்ரா ஸ்காட் என்கிற தன்னம்பிக்கை சுட்டி பிறந்த தினம் இன்று (ஜன.18). காரணம்… 'Neurobalstoma’ என்கிற ஒரு வகையான நரம்புப் புற்றுநோய் அவளை ஒரு வயதில் தாக்கியது. மற்றவர்களின் உதவி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. நகரவே முடியாது. வலி பின்னி எடுக்கும். அவளின் தாய், தந்தையிடம் எப்போதும் உற்சாகமாகப் பேசியபடியே இருக்கும் அவளுக்கு, உடம்பு முழுவதும் ஊசிகள் போடப்பட்டன. பல இடங்களில் கத்தியால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அப்போது எல்லாம், எல்லை இல்லாத மன தைரியம் காட்டிய அந்தச் சுட்டிக்கு, ஒரு சிந்தனை தோன்றியது.

அவளுக்கு எலுமிச்சை ஜூஸ் என்றால் அப்படி ஒரு விருப்பம். ‘தனக்கு செலவு செய்ய பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், இதேபோல் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு நாம் உதவ என்ன செய்யலாம்?' என யோசித்தாள். தன் பெற்றோரை ஒரு எலுமிச்சை ஜூஸ் கடை ஆரம்பித்துத் தரச் சொன்னாள். அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுட்டிகளுக்குப் பயன்படுத்தப் போவதாக அறிவித்தாள்.

இதை மாதிரியாக கொண்டு பல்வேறு கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம், ஒரு வருடத்தில் பத்து லட்சம் டாலர் பணம் திரண்டது. அதைப் பார்க்க அலெக்ஸாண்ட்ரா உயிருடன் இல்லை. எட்டு வயதில் இறந்துவிட்டாள். ஆனால், அவளின் அந்த எலுமிச்சை ஜூஸ் கடைகளில் வரும் வருமானம் இன்றும் கேன்சரால் வாடும் சுட்டிகளுக்கு ஆதரவு தருகின்றது. அந்த அற்புத தேவதையை அன்போடு நினைவுகூர்வோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்:மருந்து கு...