கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரூட்யார்ட் கிப்ளிங்...

 
ரூட்யார்ட் கிப்ளிங்... ஓர் அற்புதமான கதைசொல்லி. இவர் இங்கிலாந்தில் பிறந்தார். அங்கிருந்த ரூட்யார்ட் ஏரியின் அழகில் மயங்கி இவருக்கு அந்த பெயரை வைத்தார்கள் பெற்றோர். பதினேழு வயதில் இந்தியா வந்தார். பத்திரிகைகளில் எண்ணற்ற கதைகள் எழுதினார்.

காடுகள், மலைகள் என பல்வேறு இடங்களில் சுற்றினார். அவர் வெளியிட்ட நூல்களில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும், யானை தாமரைப்பூ ஏந்தி இருப்பதும் இணைந்தே இருக்கும்.

இந்தியாவில் ஸ்வஸ்திக் அதிர்ஷ்டத்தை உணர்த்தியதால் அதை பயன்படுத்தினார். நாஜிக்கள் அதையே முத்திரை ஆக்கியதும் அதை நீக்கி விட்டார்.

ஜங்கிள் புக் மற்றும் தி செகண்ட் ஜங்கிள் புக் இவற்றில் காட்டிலுள்ள மிருகங்கள் மனிதர்களை போலவே பேசி பல அற்புதமான கருத்துக்களை சுவாரஸ்யமாக சொல்லுமாறு வடிவமைத்தார். இந்த புத்தகத்தை சாரணர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பாவல் பயன்படுத்தினார்.

அறிவியல் புனைகதைகளும் எழுதினார். நாவல்களும் எழுதி தள்ளினார். ஒருமுறை இவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிகை தவறாக செய்தி வெளியிட, "நல்லது. உங்கள் சந்தாதாரர் லிஸ்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள்" என பதில் அனுப்பினார்.

முதல் உலகப் போரில் மகன் இறந்த பிறகு உருக்குலைந்து போனார். பின் மீண்டு பல வீரர்களுக்கு நினைவு சின்னம் எழுப்பும் குழுவில் இருந்தார். இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் இவருக்கு இல்லை. தங்களை தாங்களே ஆள தகுதியற்றவர்கள் என்றே சொன்னார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அவரின் நினைவு தினம் இன்று (ஜன.18). அவரின் இஃப் கவிதையின் சில வரிகள்...

f you can dream---and not make dreams your master;
If you can think---and not make thoughts your aim,
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same:.
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build'em up with worn-out tools;

If you can talk with crowds and keep your virtue,
Or walk with Kings---nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
If all men count with you, but none too much:
If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run,
Yours is the Earth and everything that's in it,
And---which is more---you'll be a Man, my son!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...