கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஷாஜகான்...

 
ஷாஜகான்... வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார். அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார்; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார்.

ஆசப் கானின் மகளை இவர் மணந்தார். அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார். ஏழு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள். அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம். அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான். கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை, இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார். அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது. தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினங்கள், மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது அது இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தாரா ஷுகோ. ஆனால், தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார். மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது.

இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார்; அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை, நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன் என புலம்பினார்; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள்; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர். அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன். ஒருநாள் காலை அவரின் மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர். இன்று (ஜன.22) ஷாஜகானின் நினைவு தினம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Arittapatti Tungsten Mining Project Abandoned

  அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிடப்பட்டது மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு ...