கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உங்கள் படத்துடன் தபால் தலைமகா கும்பமேளாவில் அறிமுகம்

அழகிய பின்னணியில், உங்கள் படத்துடன், தபால் தலைகள் வெளியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மகா கும்பமேளாவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கால மாற்றத்திற்கு ஏற்ப, தபால் துறையும் பல்வேறு நவீன யுக்திகளை பின்பற்றி வருகிறது. பாரம்பரிய தபால் தலைகளுடன், மணம் வீசும் தபால் தலைகளை அறிமுகப்படுத்திய தபால் துறை, இப்போது, தனிநபர்களின் உருவங்களுடன் தபால் தலை
வெளியிட முன்வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரில், கங்கை நதிக்கரையில் நடந்து வரும், "மகா கும்பமேளா' நிகழ்ச்சியில், "மை ஸ்டாம்ப்' என்ற புதிய தபால் தலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சேவையை பெற விரும்புபவர், தன் புகைப்படத்துடன், 300 ரூபாய் செலுத்தினால் போதும்; அவர் படத்துடன், 12 தபால் தலைகள் வழங்கப்படும். கையில் போட்டோ கொண்டு வராவிட்டாலும், அங்கேயே போட்டோ எடுத்து, ஸ்டாம்ப் வழங்க கூட, தபால் துறை தயாராக உள்ளது.வெறும் போட்டோ மட்டுமின்றி, போட்டோவின் பின்னணியில், உங்களின் நட்சத்திர ராசி படம், அழகிய காட்சிகள் போன்றவை இடம் பெற வேண்டுமென்றாலும், அதற்கும் சரி சொல்கிறது தபால் துறை.உதாரணமாக, சிம்ம ராசிக்காரர் ஒருவர், தன் படத்துடன் சிம்ம ராசி படம் இடம்பெற வேண்டும் என, விரும்பினால், பின்னணியில் சிங்கம் படத்துடன், அந்த நபரின் படமும், தபால் தலையாக தயாரித்து தரப்படும்.விருப்பமானவர்களுக்கு கடிதங்கள் அனுப்பும் போது, உங்கள் படத்துடன் கூடிய தபால் தலையை ஒட்டி அனுப்பி, அவர்களை அன்பு அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம்.
உலக நாடுகள் பலவற்றிலும் இந்த முறை பல ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் திரளுவதால், இத்திட்டத்திற்கு விளம்பரம் நன்கு கிடைக்கும் என்பதால், "மை ஸ்டாம்ப்' முறை அங்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக, தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025

    உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025  👉 இன்று 14.07.2025 BE online General & 7.5 Quota Counselling தொடங்குகிறது. 👉 General Ran...