கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>Bob marley - பாப் மார்லி

 
ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) ஒரு யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களில் மிகவும் ஆல்பம்கள் விற்றவர் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் ஆவார்.

உலகெங்கும் இருக்கிற இளைஞர்களைக் கவர்ந்த தலைவர்களில் சே குவேரா. முக்கிய பங்கு வகிக்கிறார் அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு பெயர் பாப் மார்லி சே குவேராவைப்போல துப்பாக்கி ஏந்தி புரட்சி செய்தவரல்ல பாப் மார்லி. கைகளில் அவர் ஏந்தியிருந்தது கிடார். அவர் செய்தது இசை கலகம்.

இளைஞர்களை வசீகரித்து இசை உலகில் இப்போதும் முன்னணியில் நிலைத்து நிற்கும் வரலாறு அவர். 1981ல் மே மாதத்தில் அவர் இறந்தார். முப்பத்தாறு வயதில் புற்றுநோய்க்கு அவர் பலியானபோது உலகமே துடித்துப் போனது. ‘‘இசையின் நல்ல குணம் என்ன தெரியுமா? அது உங்களைத் தாக்கும்போது உங்கள் வலிகளெல்லாம் மறந்து போய்விடும்!’’ என்றார் மார்லி. அதனால் தான் அவருக்கிருந்த புற்றுநோயின் வலி அவருக்குத் தெரியாமல் போய்விட்டது போலும்! ‘‘நான் இறந்தாலும் என் இசை வாழும்’’ என்று அவர் கூறியது பொய்யல்ல.

இப்போதும் கோடிக்கணக்கில் அவரது இசையைத் தாங்கிய குறுந்தகடுகள் விற்றுக் கொண்டிருக்கின்றன. உலகில் எங்கோ இருக்கும் ஜமைக்காவில் பிறந்த பாப் மார்லி பூகோள எல்லைகளைத்தாண்டி, மொழியின் எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டிலும்கூட அதிர்வுகளை எழுப்ப முடிகிறதென்றால் அதுதான் அவரது இசையின் ஆற்றல்.
பாப் மார்லி - இளைஞர்களின் நாயகன். இசை உலகின் சக்ரவர்த்தி - ஒரு புதிய மதத்தை உருவாக்கிய போதகர். ‘உங்கள் வரலாற்றை மட்டுமல்ல உங்கள் விதியையும் மறந்து விடாதீர்கள்!’ என்று அவர் தனது ரசிகர்களிடம் சொன்னார். அது இசை ரசிகர்களுக்காகச் சொன்னது மட்டுமல்ல. விடுதலைக்காகப் போராடும் எல்லோருக்குமே பொருந்தக் கூடியதுதான். விதியைத் தீர்மானித்துக் கொள்ள வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

பாப் மார்லி - ஒரு பெயரல்ல. முழக்கம்!

பாப் மார்லி - ஒரு இசைக் கலைஞன் மட்டுமல்லல்ல. போராளி!

பாப் மார்லி - தனது இசையால் ஒரு உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார். அது

போர்களற்ற உலகம். துயரங்களும், மரணங்களுமற்ற உலகம். அன்பால் ஆன

உலகம். அந்த உலகின் குடிமக்களாக மாற உங்களை அழைக்கிறது இந்தப் புத்தகம்.

இயற் பெயர் - ராபர்ட் நெஸ்டா மார்லி

பிறப்பு - பெப்பிரவரி 6 ௧௯௪௫

இறப்பு - மே 11 ௧௯௮௧

இசை வகை - ரெகே, ஸ்கா, ராக்ஸ்டெடி

தொழில் - இசை எழுத்தாளர், இசைக் கலைஞர்

இசைக்கருவிகள் - கிட்டார், மேளம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...