கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 25.09.2020(வெள்ளிக்கிழமை)


🌹🌹யாரும் ஆரம்பத்தில் இருப்பது போல் கடைசி வரைக்கும் இருப்பதில்லை.!!

🌹🌹🌹பேசுவதற்கு நேரமில்லாமல் அல்ல

பேசுவதற்கு விருப்பம் இல்லாமல் தான் பல உறவுகள் நேரமில்லை என்று காரணம் சொல்லி விலகி போகிறார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

👉விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் - தமிழக அரசு அறிவிப்பு.

👉அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி - தலைமைச்செயலாளர்.

👉10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தலைமைச் செயலாளர்.

🎀🎀 2006ஆம் கல்வி ஆண்டில் M.Phil., சேர்க்கை பெற்று Arrear வைத்து 2008ல் தேர்ச்சி பெற்றாலும் (2007-2008லிருந்து தொலைநிலைக்கல்வியில் M.Phil., படிக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை) ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்புடையது என திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 09.09.2020

🎀🎀 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1.10.2020 முதல் 50 விழுக்காடு மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்தல்  தொடர்பாக  கிருஷ்ணகிரி DEO அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு... (காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை:3162)

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

🎀🎀சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவைகள் துவங்க

உள்ளதாக தகவல். கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன்

ரயில்களை இயக்க நடவடிக்கை

🎀🎀தேசிய சில்லறை வா்த்தகக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

🎀🎀அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்திய வம்சாவளியினா் உறுதுணையாக இருந்ததாக ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

🎀🎀கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பாலானவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

🎀🎀அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டு வேகமாக முன்னேறி வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

🎀🎀ஏப்ரல் மாதத்திற்குள் 700 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமான சிடிசியின் தலைவர் ராபர்ட் ரெட்பீல்டு தெரிவித்துள்ளார்.

🎀🎀2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக தமிழக காங்கிரஸ் பாடுபடும் 

ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்க, வரும் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும்

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

🎀🎀தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது

இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்                                                               🎀🎀கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்படுவதாக முதல்வரை பாராட்டும் நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது ஏன்?

கொரோனா பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வை பிரதமர் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அதிமுக அரசை பாஜக அரசு பாராட்டியது அரசியல் ரீதியான கட்டாயம் என நினைக்கத் தோன்றுகிறது.

கொரோனா பாதிப்பு உண்மைகளை தமிழக அரசு திரித்து மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறதா?

அரசின் கொரோனா தோல்வி, பொருளாதார பின்னடைவு போன்றவற்றை பிரதமர் தெரிந்துகொள்ள வேண்டும்.

மு.க.ஸ்டாலின்

🎀🎀புதிய வேளாண் சட்டங்களை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

விவசாயிகளின் உரிமைகளை தட்டிப் பறிக்கக்கூடிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

🎀🎀விஜயகாந்த் நலம்பெற்று பொதுப்பணியில் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் 

மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

🎀🎀தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

👉கொரோனோ அறிகுறி தென்பட்ட நிலையில் உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது விஜயகாந்த் தற்போது பூரண நலத்துடன் உள்ளார்.

-  தேமுதிக தலைமை கழகம்.

 🎀🎀சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த திமுக எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

🎀🎀தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தம்மை பற்றி விவரங்களை வழங்கக் கூடாது 

சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பெங்களுருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி கேள்வி கேட்ட நிலையில் கடிதம்

 - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

🎀🎀இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தேடல் & மீட்பு சேவைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) உறுப்பு நாடுகளுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து.

🎀🎀செப்.29 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

செப்.30 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் நிறைவடையும் நிலையில், முதல்வர் ஆலோசனை

🎀🎀சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை - சென்னை மாநகராட்சி 

மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு.

🎀🎀சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

 செப்.27 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது 

- தெற்கு ரயில்வே அறிவிப்பு

🎀🎀தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்கத் தயார். 

- குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

🎀🎀பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை

- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

🎀🎀கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண செலவு

👉மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொள்முதல்

- ரூ.830.60 கோடி

👉மருத்துவ கட்டுமானப்பணிகள் - ரூ.147.10 கோடி

👉புதிய மருத்துவ பணியாளர்கள் சம்பளம்- ரூ.384.44 கோடி

👉கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை- ரூ.358.53 கோடி

👉மருத்துவமனை தனிமைப்படுத்துதல் செலவினம்- ரூ. 262.25 கோடி

👉வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம்

-ரூ.143.62 கோடி

👉பொது விநியோகத்திட்டம் - ரூ.1727.41 கோடி

👉ரொக்க நிவாரணம் - ரூ.3168.64 கோடி

👉கொரோனா சிறப்பு ஊரக நிதி உதவி தொகுப்பு

திட்டம் - ரூ.300 கோடி

👉மொத்தம் - ரூ. 7322.59 கோடி

- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

🎀🎀பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

🎀🎀திரும்பி வா... எழுந்து வா.. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக தொடரும் பிரார்த்தனை

🎀🎀ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

🎀🎀அரசாணை 37 - நாள் 10. 03. 2020 - உயர் கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - கருவூல ஆணையரகத்தின் பதில்

🎀🎀சென்னையில் ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

🎀🎀அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🎀🎀G.O 37 - உயர் கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை. ஆசிரியர்களுக்கு பொருந்துமா என அரசிடம் தெளிவுரை கேட்கப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் 

🎀🎀CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - ஆணையர் கடிதம் 

🎀🎀வருமான வரி கணக்கு தாக்கல் நவம்பர் 30-ந் தேதியுடன் நிறைவு - அதிகாரிகள் தகவல் 

🎀🎀எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

🎀🎀நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும் என கல்வியாளர்கள் கருத்து -  பத்திரிகை செய்தி

🎀🎀உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீதக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது

🎀🎀பள்ளிக் கல்வி - NMMS தேர்வு - 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

🎀🎀ஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள் வெளியீடு

🎀🎀கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். - நாளிதழ் செய்தி

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀


🎀🎀கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

👉நேற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  5692 

சென்னையில் -1089

👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  - 563691

சென்னையில்-159683

👉நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  5470 

சென்னையில் -1005 

👉நேற்று வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  - 508210

சென்னையில்-146634

👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  66 

சென்னையில்- 14

👉நேற்று வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -    9076

சென்னையில்  - 3111 

👉நேற்று வரை  கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில் - 46405 

சென்னையில் -9938

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...