கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீடு நாயகன் வி.பி.சிங் - நினைவு தின சிறப்பு பகிர்வு (V.P.Singh - Hero of OBC Reservation - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)



 வரலாற்றில் இன்று - நவம்பர் 27 - "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் ஏன் கொண்டாடப்படுகிறார்? - நினைவு தின சிறப்புப் பகிர்வு (Today in History - November 27 - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)...


வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்?


வி.பி.சிங் முதலமைச்சராக இருந்தபோது, தன் சொந்த மாநிலத்தில் கொள்ளைச் சம்பவங்களை ஒழிக்க முடியவில்லை என மனம் வருந்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். இன்றைய சூழலில் அப்படியொரு முதலமைச்சரை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமா? 


முன்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், அப்போதைய பிரபலங்களான திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோர்மீது எழுந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தார். 


ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் எனப் புகார் எழுந்தது. இச்செய்தி பரவலாக ஆரம்பித்தபோது, யாருடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக வி.பி.சிங் இருந்தாரோ, அதைப் பற்றி கவலைப்படாமல் விசாரணைக் கமிட்டிக்கு உத்தரவிட்டார். அதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகூட அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காகவெல்லாம் அவர் சோர்ந்துவிடவில்லை. 


காங்கிரஸுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டார். அப்போது, வலுவாக இருந்த காங்கிரஸை எதிர்க்க வேண்டுமென்றால், சில கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென முடிவுசெய்தார். அதன்படி ஜன் மோர்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து, 1988-ல் ஜனதா தளத்தை உருவாக்கினார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம்செய்தார். 


1989-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார், வி.பி.சிங். தி.மு.க, ஜனதா தளம், தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து, 'தேசிய முன்னணி' என்கிற கூட்டணியை உருவாக்கி, அந்தத் தேர்தலைச் சந்தித்தார். அவருடைய கூட்டணிக் கட்சி 143 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி கட்சி மற்றும் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால், வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். 


வி.பி.சிங்கிடம் உள்ள சிறப்புக் குணமே, யாரிடமும் எதற்காகவும் தன்னை அவர் சமரசம் செய்துகொண்டதில்லை என்பதை அவர் வாழ்க்கைப் பயணத்தைக் கவனித்தாலே புரிந்துவிடும். 


அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறுவதற்காகக் காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா'விருது கொடுத்தார். நாட்டுக்காக மிக முக்கியப் பணிகள் செய்த அம்பேத்கர் போன்றோருக்கே பாரத ரத்னா கொடுக்காதபோது, ஏன் எம்.ஜி.ஆருக்கு இத்தனை அவசரமாக பாரத ரத்னா விருது என காங்கிரஸை விமர்சித்த வி.பி.சிங், தன்னுடைய ஆட்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கினார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம்பெறவும் வைத்தார். 


ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையை, தான் பிரதமராக இருந்தபோது நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார் வி.பி.சிங். காவிரி நதிநீர் பங்கிடுதலில் இனியும் பிரச்னை வரக்கூடாது என்று முதன்முதலில் காவிரி நடுவர் மன்றம் ஆரம்பித்தார். 


இத்தகைய தருணத்தில் வி.பி.சிங்'கிற்கு ஆதரவு கொடுத்ததை அறுவடைசெய்யும் விதமாக, பி.ஜே.பி கட்சி தனது இந்துத்துவா பரவலாக்கத்தை அவர்மூலம் சாத்தியப்படுத்த நினைத்தது. ஆனால் வி.பி.சிங், அதற்கு இசைந்துகொடுக்காததனால் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், வி.பி.சிங் எதற்கும் அஞ்சவில்லை. 


''பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியல் இந்தியாவிடம் இல்லை. அரசாங்கம் அம்மக்களைக் கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும்'' என்றார் அண்ணல் அம்பேத்கர். அவர் கூறி 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற மொரர்ஜி தேசாய், பி.பீ.மண்டல் என்கிறவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் சுமார் இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் மாநில அரசுகளின் உதவியுடன் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. 


ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த அறிக்கையின்படி இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தத் தயங்கியது. ஏறத்தாழ பத்தாண்டுகள் மக்களின் உரிமைகள் கிடப்பில் கிடந்தன. அத்தகையதொரு சூழலில்தான் நீண்டகாலம் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரை செய்ததை, மக்களின் உரிமைக்கான திட்டத்தைத் தைரியமாக அமல்படுத்தினார் வி.பி.சிங். 


வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், இந்தியா முழுக்க பெரிய அளவில் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒருபக்கம் நெருக்கடி அதிகரித்துக்கொண்டுபோனது. மறுபக்கம், காங்கிரஸ் கட்சியும் அவர் ஆட்சியிலிருந்து வெளியேறுவதற்கான வேலையை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது; தனக்கு ஆதரவு வழங்கிய பி.ஜே.பி-யும் தன் பங்குக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்தது. வி.பி.சிங் எதற்கும் அசரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பி.ஜே.பி தலைவர் அத்வானி கைதுசெய்யவும் வாரன்ட் பிறப்பித்தார். இதனால் வெகுண்டெழுந்த பி.ஜே.பி, தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. 


அதற்குப் பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைத்தபோது, வி.பி.சிங் பிரதமர் பதவி வகிக்க வேண்டுமெனத் தலைவர் சிபாரிசு செய்தார்கள். ஆனால், வி.பி.சிங் மறுத்துவிட்டார். சிறுநீரகக் கோளாறு, ரத்தப் புற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வி.பி.சிங், வேறு வழியின்றி பொது வாழ்க்கையில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, நோயினால் அல்லலுற்றார். 2008-ம் ஆண்டு, டெல்லியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்தார். இன்றோடு அவர் இறந்து 14 வருடங்கள் நிறைவுறுகிறது.


ஒரு நல்ல தலைவன் ஆட்சிபுரிந்த காலங்கள் குறைவெனினும், தன் குடிமக்களால் அவன் என்றென்றும் நினைவுகூரப்படுவான் என்பதற்கு நித்திய உதாரணம் வி.பி.சிங்.

நன்றி: விகடன்


இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம் - நவம்பர் 27, 1940


1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.


வி.பி.சிங்



1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.


வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.


அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.


1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.


1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.


இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.


பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.


1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.


பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.


காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.


ராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரசுக்கு எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து பெருந்தன்மையாக வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஜனதா தளத்தின் கட்சிக்குள்ளயே வி.பி.சிங்கின் பிரதமர் பதவிக்கு போட்டியாளராக விளங்கிய தேவிலாலின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர்க்கு பிரதமர் பதவியை தர மறுத்ததை பல கட்சியினருக்கு நடுவே ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. ஏனென்றால் கருத்தொருமித்த பிரதம வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. அவர் காங்கிரசில் பல பதவிகளில் நேர்மையாக செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியின் அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து எதிர்த்த அமைச்சர் வி. பி. சிங்கை பிரதமருக்கான தகுதியுடைய வேட்பாளராக அறிவித்துவிட்டு நாடாளமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய தேவி லால் அமைச்சரவையிலும் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சிக்கு பிறகு இரண்டாவது முறை கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.


டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.


பதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.


பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.


இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.


பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு


இதற்கு முன்பு காங்கிரசின் எமர்ஜென்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சி ஆட்சியில் அக்கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த மண்டல் ஆணைக்குழுவை அவர் பரிந்துரை செய்து நடைமுறை செய்வதுக்குள் கட்சியில் ஏற்பட்ட ஒற்றுமை இல்லாமையால். பிரதமர் தலைமை சரண் சிங் வசம் வந்து விட சிறிது காலத்திலேயே ஜனதா கட்சி ஆட்சி 1980 ஆம் ஆண்டு கவிழ்ந்ததால். 1990ல் 10 வருடங்களுக்கு பிறகு ஜனதா கட்சி நீட்ச்சியாக மாறிய ஜனதா தளம் ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். இத்திட்டமானது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்பு மத்திய அரசாங்கம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும், சாதகமாகவும் இருந்தாலும். உயர் சாதி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லாததால் கடும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வட இந்தியாவில் நகர்புறங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது.


மேலும் இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டு திட்டத்தை வி. பி. சிங் அமல் படுத்த முற்பட்டபோது ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளபடும். என்று கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார். இத்திட்டத்தை அமல் படுத்த கூடாதொன்று அத்வானி தலைமையில் வட இந்தியாவில் பல மதகலவரங்களும், தீ குளிப்பு உயிர் பலி போராட்டங்களும் நடந்தேறியதால். வி.பி.சிங் ஆட்சியை பல எதிர்கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்யப்பட்டதால் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கிரீம் லேயர் முறையில் வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது பல்லாண்டுகளாக மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி என்று கூறினார்' வி.பி.சிங் தனது முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மகிழ்ச்சி தெரிவித்து கொண்டார்.


1989ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.


வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

நன்றி : விக்கிபீடியா...



வி.பி.சிங் வெறும் பெயர் மட்டுமல்ல; இந்திய வரலாற்றின் தொடக்கம்...


வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம்.


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர், வி.பி.சிங். ஆனால், அவரது பிறப்பும் வாழ்வும் நேரெதிரானவை. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.


அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.


எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.



எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.


1980-ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். உத்தரப்பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்ட மக்கள் வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார் வி.பி.சிங். முழுவதுமாக கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததற்குத் தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார்.


அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், அப்போதைய இந்தியா முழுக்க வி.பி.சிங்கின் பெயரை உச்சரிக்க வைத்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் எனப் பலரும் அவரது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. 


அவரின் நேர்மையான செயல்பாடுகள், பல முக்கியப் புள்ளிகளுக்கு அழுத்தம் தரவே, நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வி.பி.சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி. இந்த நேரத்தில், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இம்முறை துறைமாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே வி.பி.சிங், தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும், அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து, 'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் பதவி விலகியதால், அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பைக்கில் பயணம், தலையில் கட்டப்பட்ட துண்டு என மக்களோடு மக்களாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, வெற்றி வி.பி.சிங்கின் வசம் வந்தது. கடும் போட்டிக்கிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியைத் தோற்கடித்தார். அக்டோபர் 11 அன்று 1988-ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சூழலில், வி.பி.சிங் ஒரு முக்கியத் தலைவரானார்.


1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். டிசம்பர் 1, 1989 அன்று, வி.பி.சிங் நாடாளுமன்ற அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்திய அரசியலின் மிகச் சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று. பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.


இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்த செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இடஒதுக்கீடு, வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தொடர்ச்சியாக அத்வானியின் கைது போன்ற சம்பவங்கள் வி.பி.சிங்கின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்தன. பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.



அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 


நன்றி : விகடன்...





ஜூலை 21 - நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969)...

 


ஜூலை 21,

வரலாற்றில் இன்று.


நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969).


வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் ரஷியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்கலனில் பூமியை வலம் வருவது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்கிற வகையில் போட்டியிட்டு சாதனைகள் புரிந்துவந்தனர்.


1961ஆம் ஆண்டு சோவியத் நாட்டை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது. அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே வாரத்தில் ஆலன் ஷப்பெர்ட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டது அமெரிக்கா.


அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1962ஆம் ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். ‘பத்தாண்டிற்குள் நாங்கள் நிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்றார். இதற்கு அப்பல்லோ திட்டம் என்று பெயரிடப்பட்டது.


நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பெற்றோருக்கும், நிலாவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களுக்கும், இது வியப்பாக இருந்தது. நிலாவில் மனிதனால் கால்பதிக்க முடியுமா? என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டனர்.


ஆனால், ஏழே ஆண்டுகளில், நாசா விண்வெளி நிலையம் மனிதனை முதன் முதலில் நிலாவில் கால் பதிக்க வைத்தது உலகத்தையே அதிசயிக்க வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதை காண்பதற்கு கொடுத்து வைக்காமல், அதற்கு முன்பே அதிபர் கென்னடி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


முன்னதாக ஜான் கென்னடியின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிக் கழகம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு செயல் வடிவம் தரத் தொடங்கியது. முதல் இரண்டு ஆண்டுகள், நிலாவில் இறங்குவதற்கு சரியான இடம், குறிப்பாக பள்ளம், மேடுகளற்ற சமதளம், போதுமான சூரிய ஒளி என்று பல காரணிகளைக் கொண்டு தேடினர்.


1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அப்பல்லோ-11 புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து காலை 9.32 மணிக்கு நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைகேல் காலின்ஸ் ஆகியோருடன் விண்கலம் வெற்றிகரமாகக் கிளம்பியது. பன்னிரெண்டு நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டது.


பிறகு, பயணம் மேலும் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் கொலம்பியா விண்கப்பலில் இருந்து பிரிந்து ‘கழுகு’ என்கிற விண்கலத்தின் மூலம் நிலவினை நோக்கி சென்றனர் (அவர்கள் திரும்பி வரும்வரை கொலம்பியா விண்கப்பல் மைகேல் காலின்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது).


நிலவினை நோக்கி செல்லும் இந்த இறுதிக்கட்டப் பயணம் இருப்பதிலேயே மிகச் சிரமம் கொண்டதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் அமைந்தது. விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள், எரிபொருள் பற்றாக்குறையென ஒவ்வொரு நொடியும் ஆபத்து நிறைந்திருந்தது. நிலவை நோக்கிய அந்த கடைசிக் கட்ட பயணத்தின்போது நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தை சாதுரியமாக செலுத்தினார்.


சரியாக மாலை 4:18 மணிக்கு (அமெரிக்க நேரம்), ‘கழுகு நிலவின் தரையை தொட்டுவிட்டது’ என்கிற செய்தி கிடைத்தபோது, நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டானது. ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல் மனிதராக, நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் அமெரிக்க நேரப்படி இரவு 10.56-க்கு தனது இடது காலினை பதித்தார்.


கால் வைக்கும்போது, ‘இந்த சிறு காலடி மனித இனத்தின் பிரமாண்டமான பாய்ச்சல்’ என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஆல்ட்ரின் நிலவில் அடியெடுத்து வைத்தார்.


அமெரிக்க நாட்டு கொடி நாட்டப்பட்டது. தாங்கள் பூமியிலிருந்து வந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கு அமைதி விழைவதாக எழுதப்பட்ட பதாகையை நிலவில் வைத்தனர்.


நள்ளிரவு 11.47 மணிக்கு அமெரிக்க அதிபர் நிக்சன் இவர்களோடு தொலைபேசியில் உரையாடினார். சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி, ஏராளமான கற்களை ஆராய்ச்சிக்காக சேகரித்தனர். புகைப்படங்கள் எடுத்தனர். பூமியைவிட புவி ஈர்ப்பு சக்தி ஆறில் ஒரு பகுதி உள்ளதால், உடல் எடை ஆறில் ஒரு பங்காக இருக்கும்.


பிறகு மீண்டும் கழுகு கலத்திற்கு திரும்பினர். ராக்கெட் உதவியுடன் நிலவின் ஈர்ப்பு சக்தியை எதிர்கொண்டு மேலெழும்பி வானில் உலவும் கொலம்பியாவில் மாலை 5.30 மணிவாக்கில் இணைந்தனர். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இப்பூவுலகை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கினர்.


நான்கு நாட்கள் கழித்து, ஜூலை 24-ந்தேதி பிற்பகல் 12.50 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கலம் பத்திரமாக விழுந்தது. பிறகு, அவர்கள் யு.எஸ்.எஸ். ஹார்னெட் என்கிற கப்பலில் ஏற்றப்பட்டு ஹூஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாரும் நெருங்க முடியாத தனி இடத்தில் 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.


ஒருவேளை ஏதேனும் புதிய கொடிய நுண்ணுயிரிகள் அவர்களிடம் ஒட்டியிருந்தால் அதனை அழிப்பதற்காக இச்செயல்பாடு. பின்னர், நியூயார்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் நிக்ஸன் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968இல் இருந்து டிசம்பர் 1972 வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவில் இருந்து நிலாவுக்கு விண்கலம் அனுப்பியது. 2012இல் நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969இல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.


நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னது போல சிறு காலடி, ஆனால், அதன்பின் ஐம்பது ஆண்டுகளில் மனிதக் குலம் விஞ்ஞானத்தில் பிரமாண்டமான வளர்ச்சி பெற்று விட்டது என்றால் மிகையாகாது.


🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.10.2020 (சனிக்கிழமை)...

🌹உறவுன்னு சொல்லிக்க ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் உணர்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும் . அப்போது தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்..!

🌹🌹சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள். உங்கள் கஷ்டங்களை மட்டும் இல்லை. உங்களை கலங்க வைத்தவர்களையும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑கால்நடைத் துறையில் 1154 மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு - அமைச்சர் தகவல்

⛑⛑கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு

⛑⛑MBBS அகில இந்திய கலந்தாய்வு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்குகிறது.

⛑⛑இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு.

⛑⛑TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

⛑⛑பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு

⛑⛑சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளிகள் மூலமாக மாணவர்கள் எவ்வாறு பெறுவது? முழுமையான விவரம் ( விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி 31.10.2020)

⛑⛑பொதுப்பணித்துறையில் பணி... Diplomo & Engineering மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க  வேண்டிய கடைசி  7.11.2020.                           

⛑⛑உதவிப் பேராசிரியர், நூலகர் பணியிடங்களுக்கு நெட், செட் தேர்ச்சித் தகுதியை நிர்ணயிக்க வலியுறுத்தல்

⛑⛑அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் -சீமான் 

⛑⛑மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்.

⛑⛑TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணைகளின் தொகுப்பு  ( 2003 முதல் 2017 வரை ) வெளியிடப்பட்டுள்ளது.

⛑⛑தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது - நாளிதழ் செய்தி 

⛑⛑Para Medical Education  4 ஆண்டு மருத்துவப் படிப்பு - 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் ஆரம்பிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

⛑⛑உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் குறித்து  பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை வழங்கியுள்ளது. 

⛑⛑தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகம் அமல்படுத்தாத சூழ்நிலையில், துணைவேந்தர்களுக்கு நேரடியாக யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. மாநிலப் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், இது மாநில உரிமையில் தலையிடும் செயல் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விமர்சித்துள்ளது. 

⛑⛑முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம் 

⛑⛑தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்   தெரிவித்துள்ளார்.

⛑⛑தூத்துக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது                                

⛑⛑ ஊக்க ஊதிய பெறாத ஆசிரியர்களின் விவரங்களை 31.10.2020க்குள் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

⛑⛑நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 27.10.2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - கரூர் முதன்மைக் கல்வி அலுவலர்.

⛑⛑ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்" -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

⛑⛑விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திடுக

- மு.க.ஸ்டாலின்

⛑⛑மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ்.

⛑⛑உதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் அடங்கிய உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களின் மூலச் சான்றிதழ்களை அக்.27-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த கூறிப்பாணை மற்றும் இ-சேவை மையங்களின் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

⛑⛑சென்னையில் தீபாவளியை பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 மாநகரப் பேருந்துகள் இயக்கம்;

தி.நகர்., பெசன்ட் நகர், பிராட்வே, வள்ளலார் நகர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட 25 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

⛑⛑எந்த சூழ்நிலையிலும் "தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.

⛑⛑ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசை குறை கூறுவது பாமக.நிறுவனர் ராமதாசுக்கு வழக்கமான ஒன்று தான் : அமைச்சர் கடம்பூர்ராஜு

⛑⛑10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்:-

👉தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேர்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது                                                     ⛑⛑தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள் துவங்கும்.

முதல்வரிடம் நடத்திய ஆலோசனைக்கு பின் கர்நாடகா துணை முதல்வர் அஷ்வத் நாராயணன் அறிவிப்பு.

⛑⛑தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கவுண்டமணி புகார்

⛑⛑புதிய மின் இணைப்புக்கு கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

⛑⛑கேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப் படுகிறது.

இது மக்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். உணவக உரிமையாளர்கள்  இதுபோன்ற விலை உயர்வால் நஷ்டம் அடைவார்கள் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

⛑⛑நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசனை நடைபெறுகிறது. அமைச்சர்களிடமும் 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 

ஆளுநர் பன்வரிலால் புரோஹித்

⛑⛑ஊரடங்கால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்து வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.                  

⛑⛑அதிமுக எடுக்கும் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்யலாம், தமிழக முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தான் முடிவு செய்யும் 

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

⛑⛑பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்

 - பிரதமர் நரேந்திர மோடி

⛑⛑மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி தொடர்பாக வெளியான தகவல் போலியானது- சி.பி.எஸ்.இ. விளக்கம்

⛑⛑விலை அதிகரிப்பை தொடர்ந்து மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் வெங்காயம் கையிருப்பு வைத்திருக்க மத்திய அரசு கட்டுப்பாடு.                                                                 

 ⛑⛑கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது; தமிழக உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு

⛑⛑பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே போதுமானது- உச்சநீதிமன்றம்.

⛑⛑பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதால் பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

⛑⛑தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

⛑⛑அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு ஆனால் சீனா மீது நடவடிக்கை- ட்ரம்ப் எச்சரிக்கை.

⛑⛑நியூசிலாந்து நாடாளுமன்றத் தோதலில் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து அவா் 2-ஆவது முறையாக பிரதமராகிறாா்.                                     ⛑⛑ஹெச்1பி நுழைவு இசைவின் (விசா) கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ளும் நபா்களுக்கு 'பிசினஸ்' ரக நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

⛑⛑புதுவையில் இலவச இணைய வழிக் கல்வி சேவையைப் பெற 10, 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பொதுத் தேர்வு வரை இம்மாணவர்களுக்கு  உதவவும் திட்டமிட்டுள்ளனர்.  

⛑⛑மருத்துவக் கலந்தாய்வில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

⛑⛑கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி: டெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது. 

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர்.

⛑⛑சூரரைப்போற்று திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 23.10.2020 (வெள்ளி)...

🌹சண்டையில் ஒருவர் தான் வெல்ல முடியும்.

சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்.!

🌹🌹வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதி இருந்தால் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழலாம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈இனி மாநில மொழிகளிலும் JEE தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்..

ஜேஇஇ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

👉கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி அடைவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க முடியும். இத்தேர்வு தற்போது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது.

👉இதற்கிடையே மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜேஇஇ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜேஇஇ  மெயின் தேர்வுகள் இனிக் கூடுதலாக மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

👉இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஜேஇஇ மெயின் தேர்வுகள் வருங்காலத்தில் மாநில மொழிகளில் நடத்தப்படும். மாநிலப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரப் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

👉ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை அனுமதிக்கும் மாநிலக் கல்லூரிகளும் இதன்கீழ் இணைத்துக் கொள்ளப்படும்.

👉தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) ஜேஇஇ தேர்வுகளைக் கூடுதல் மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

🌈🌈உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை வெளியீடு.

🌈🌈முதல் முறையாக எம்.பில் , பிஎச்.டி. படிப்புகளுக்கு அக். 27 - ல் நுழைவுத் தேர்வை இணைய வழியில் நடத்துக்கிறது பாரதியார் பல்கலைக்கழகம்

🌈🌈G.O -414 - para Medical Education 4 ஆண்டு மருத்துவப் படிப்பு - 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் ஆரம்பிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

🌈🌈கீழ்நிலை பதவியில் இளையவராக இருந்தாலும் மேல்நிலைபதவியில் மூத்தவராகி ஊதிய இழப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யலாம். ஆனால் மேல்நிலைப்பதவியில் ஒப்பீடு செய்யப்படும் இளையவரைவிட ஒரு போதும் குறைவான சம்பளம் மேல்நிலைப்பதவியில் மூத்தவராக கருதப்படுபவர் பெற்றிருக்கக்கூடாது.

🌈🌈உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதியம் பெறாதவர்கள்- விவரங்கள் திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.நாள்: 22.10.2020

🌈🌈SSA , RMSA - தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயர்வினை வழங்க கோரிக்கை

🌈🌈TNPSC - குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு.

🌈🌈அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு

🌈🌈எந்த வித கல்லூரி படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது : மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்.

🌈🌈தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🌈🌈இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சலிங்கில் 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை: தமிழகம் முழுவதும் நி்ர்வாகி்கள் அதிர்ச்சி

🌈🌈சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஒட்டிகள் அவதிப்படுவதுடன், பல இடங்களில் வாகனங்கள் மிதக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது. ஜூலையில் தண்ணீரே தேங்காது என மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், தேங்கும் தண்ணீர்

🌈🌈மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம்

36 நாட்களாக இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

வரும் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஸ்டாலின் தலைமையில் போராட்டம்

🌈🌈7.5 % இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை 

- பன்வாரிலால் புரோஹித்

🌈🌈பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துதல் - பல்கலைக்கழக மானியக் குழு கடிதம்  வெளியீடு.

🌈🌈 பள்ளிக் கல்வி - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

🌈🌈5-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா" என்னும் தலைப்பில் நடத்தும் நிகழ்நிலை வினாடி வினா(Online Quiz). பதிவு செய்து கொள்ள கடைசி தேதி:   23-10-2020

🌈🌈கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.பில்., பி.எச்டி., படிப்புகளுக்கு இணையவழி நுழைவுத்தேர்வு 27-10-2020 அன்று நடைபெறுகிறது.

🌈🌈ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test) வெற்றி பெற்றவர்களின் சான்றிதழின் (TET Pass Certificate) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தகவல் தெரிவித்தல் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளரின் சுற்றறிக்கை வெளியீடு.

🌈🌈சொன்னாலும் கண்டுகொள்வதில்லை, செய்யவும் மறுக்கிறார்  

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் 

முதல்வர் பழனிச்சாமி அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டு

🌈🌈தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

🌈🌈தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் (அக்.23) பதிவு செய்யலாம்.

🌈🌈🌈வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்!

வெங்காயம் விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹👉புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகள் அறிவிப்பு:                      1. கள்ளக்குறிச்சி,

2. உளுந்தூர்பேட்டை,

3. ரிஷிவந்தியம்,

4. சங்காரபுரம்

-----------------------------------------------------

🌹👉புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. சோழிங்கநல்லூர்

2. பல்லாவரம்

3. தாம்பரம்

4. செங்கல்பட்டு

5. திருப்போரூர்

6. செய்யூர்

7. மதுராந்தகம்

----------------------------------------------------

🌹👉புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. சங்கரன்கோவில்

2. வாசுதேவநல்லூர்

3. கடையநல்லூர்

4. தென்காசி

5. ஆலங்குளம்             

-------------------------------------------------------

🌹👉புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. உளுந்தூர்பேட்டை

2. ரிஷிவந்தியம்

3. சங்கராபுரம்

4. கள்ளக்குறிச்சி 

-------------------------------------------------------------

🌹👉புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. அரக்கோணம்

2. சோளிங்கர்

3. ராணிப்பேட்டை

4. ஆற்காடு

---------------------------------------------

🌹👉புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. வாணியம்பாடி

2. ஆம்பூர்

3. ஜோலார்பேட்டை

4. திருப்பத்தூர்.

-------------------------------------------------------

🌈🌈விஜயதசமி நாளன்று ( 26.10.2020 ) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு..

விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். எனவே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ( 26.10.2020 விஜயதசமி நாளன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தல் சார்பாக கீழ்கண்ட அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

👉அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அறியும் வண்ணம் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும் , பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும் , பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5 . வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் . அங்கன்வாடியில் பயிலும் 5. வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

👉பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள 5. வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.10.2020 (வியாழக்கிழமை)...

🌹தேவை இல்லாமல் பேசுவதை விட

அமைதியாகவே இருந்து விடலாம்

நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.!

🌹🌹கடந்து வந்த பாதையை திரும்பி ஒருமுறை பார்த்தேன் 

அதில் வலிகளை தந்தவர்களை விட 

வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்களே அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹வாழ்த்துக்கள்🌹

திரைப்பட இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு " படத்திற்கு மத்திய அரசின்  தேசிய விருது கிடைத்துள்ளது.

இதன் மூலம் தேசிய விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது !எங்கள் இயக்குனர், நன்பர், பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்                      📕📘பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம் 

👉ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம்.

👉பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனராக நியமனம்

👉திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி உயர்வு.

📕📘 5-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா" என்னும் தலைப்பில் நடத்தும் நிகழ்நிலை வினாடி வினா(Online Quiz). பதிவு செய்து கொள்ள கடைசி தேதி: 23-10-2020

📕📘கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி., படிப்புகளுக்கு இணையவழி நுழைவுத்தேர்வு 27-10-2020 அன்று நடைபெறுகிறது.

📕📘 DSE Proceedings - 10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

📕📘பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துதல் - பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் வெளியீடு.

📕📘பள்ளிக் கல்வி - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

📕📘பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2020ஆம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்த நிபந்தனைகளோடு அனுமதி & உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகையினை ECS மூலமாகவே வழங்க வேண்டும் - பதிவாளர் சுற்றறிக்கை வெளியீடு.

📕📘 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வில் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் நெல்லை ஆசிரியை மாநில அளவில் முதலிடம்.

📕📘NEET தேர்வு முடிவுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை: தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம்

📕📘DSE - பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத் தொகை திட்டம் (Special Incentive) - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள், சமூகநலத்துறை மற்றும் கள்ளர்(ம) சீர்மரபினர் நலத்தறை பள்ளிகள் - 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு | பயிலும் மாணவ/மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத் தொகை தொகை வழங்குதல் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்-தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பள்ளிக்கல்வி - அரசு, நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல்-சார்ந்து - தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. நாள்:21.10.2020

📕📘பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கு முழு அதிகாரம் - சென்னை உயர் நீதிமன்றம்.                                   

📕📘ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு:-

👉ஒற்றைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும், இரட்டை படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும். அதுவும் காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

📕📘சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற பார்வையற்ற மதுரைப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுப்பு: மத்திய அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்:-

👉சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பணி ஒதுக்கீட்டுப் பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி (25). இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. 2019-ல் 4-வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்கு ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரண சுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ''ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பூரணசுந்தரி கூறியிருந்தார்.

இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டனர்.

பின்னர், 2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து 25.09.2020-ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்குத் தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது.              

 📕📘அரசுபள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்டநிபுணர்-களிடம்  ஆலோசனை கேட்டுள்ளார் ஆளுநர்.

📕📘தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த முடிவெடுக்க வரும் 28 ஆம் தேதி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை

📕📘மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகரும்

📕📘அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் திரு ஜோ பிடன் ஆகியோருடைய இறுதி கட்ட விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

📕📘இனி TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு:

👉தேசிய ஆசிரியர் கல்விக் குழும பொதுக்குழு அதிகாரிகளின் (General body of NCTE) கூட்டம், டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

👉இக்கூட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் திருத்தம் செய்து, ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அதற்கான சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

👉இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் டெட் தேர்வை எழுதுவோருக்கு மட்டுமே ஆயுள் சான்றிதழ் என்றும், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி, பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

👉தமிழ்நாட்டில் 80,000 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📕📘ஒத்த செருப்பு சைஸ்-7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

📕📘நீட்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம்; தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது

- அமைச்சர் செங்கோட்டையன்

📕📘கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை கட்டாயமல்ல

 - சுகாதாரத்துறை அமைச்சகம்

📕📘மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்

👉மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஸ்டாலின் கடிதம்

👉7.5% உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் - ஸ்டாலின்

📕📘30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஓப்புதல்.

📕📘நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏதுவாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள UGC உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். 

📕📘நடிகர் விஜய்சேதுபதி இன் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது. இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு.

📕📘மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம்  மாநிலங்களில் பெய்த மழையே வெங்காயத்தின் விலை உயர்விற்கு காரணம்  

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இறக்குமதியை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.        -மத்திய அரசு                                                                                                     📕📘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. 

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது. 

📕📘தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இரண்டு ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது 3 ஆண்டாகவோ, அல்லது நிரந்தரமாகவோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . 

📕📘இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. 

📕📘மாற்றுப்  பணியில் பணி புரியும் அனைத்துவகை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கன்னியாகுமரி மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

📕📘ஆந்திராவில் (Andhra Pradesh) பள்ளிகள் நவம்பர் 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

📕📘பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத் பேரவை கூட்டம் நடத்த நிபந்தனைகளோடு அனுமதி - & உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகையினை ECS மூலமாகவே வழங்க வேண்டும் சென்னை  துணைப்பதிவாளர் சுற்றறிக்கை

📕📘வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

👉வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்துள்ளார்.                  

 📕📘தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம்.

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம் கடிதம்.

📕📘2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளியில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றது எப்படி?, ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் மருத்துவக்கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கை என்று தெரிவித்துள்ளார்.                                                                             

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 21.10.2020 (புதன்கிழமை)

 🌹நமக்கு வலிப்பது போன்றே  மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே  நமக்கு தோன்றாது.!

🌹🌹உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இருப்போம். இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இருங்கள்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                🍒🍒பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 23.10.2020 முதல் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு 22.10.2020 வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு

🍒🍒பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை

🍒🍒முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் தாயார் படத்திற்கு மலர்தூவியும் வைகோ மரியாதை செலுத்தினார்.

🍒🍒முதல்வர் தாயார் மறைவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, திருமாவளவன் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.                                             🍒🍒பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வேளாண் மசோதா நகலை தர வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை இயற்ற பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது.

🍒🍒நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல, மிகுந்த ஆபத்தானதும் கூட. மேலும் பெண்கள், குழந்தைகளை மிரட்டுவது தான் கோழைகளுக்கு கிடைத்த ஓரே ஆயுதம் என அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்கள்:

800 பட விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன

ஆபாச விமர்சனங்களை உலவவிட்டவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்.

🍒🍒நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடி மறைத்ததுபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசு ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

🍒🍒உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநிலஅரசின் அதிகாரங்களையும், அரசு டாக்டர்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில்தான் மத்தியஅரசு செயல்படுகிறது.            - பாமக நிறுவனர் ராமதாஸ்

🍒🍒அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு விதிகளின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை - 1 / சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

🍒🍒பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்🍒🍒 TNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு.

🍒🍒சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

🍒🍒மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு - குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்.  

 🍒🍒யுஜிசி நெட் தேர்வு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

🍒🍒கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை - ரிசர்வ் வங்கி                                                                       

🍒🍒ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

🍒🍒குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

🍒🍒சென்னையில் இன்று முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்கப்படும் 

- தமிழக அரசு அறிவிப்பு

🍒🍒தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் மனு. 

அரசு திரையரங்கை திறந்தாலும், படத்தை கொடுக்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் போர்கொடி

🍒🍒மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்த முதல்வருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்தார

🍒🍒சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு

கொரோனா சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால் குமரன் சில்க்ஸ் கடை மீது நடவடிக்கை.

🍒🍒ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன்  உள்ளிட்ட அமைச்சர்கள் சந்திப்பு..

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை.

🍒🍒7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி: அமைச்சர் ஜெயகுமார்

🍒🍒Engineering படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் இரு கட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் 21,422 இடங்களே நிரம்பி உள்ளன.

விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலி.

🍒🍒வேளாண் சட்டத்தை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கு சட்ட விபரம் தெரியவில்லை:

🍒🍒கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு அக்.20 முதல் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.10.2020 (செவ்வாய்க்கிழமை)...

🌹நம்மை தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்கு நாம் எதைச் செய்தாலும் அனைத்தும் தப்பாகவே தெரியும்.!

🌹🌹எதையும் சாதாரணமாகவே எடுத்துக்கிற மனசு இருந்தா உலகத்தில நம்மள விட சந்தோஷமானவங்க யாரும் இருக்க மாட்டாங்க.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🌈🌈அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

👉தனி இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் வெறும் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு.

👉500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 4 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

👉அரசு பள்ளி மாணவர்கள் 1615 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி.

👉வாசுகி - 580, சக்திவேல் - 552, நவீன்குமார் - 527 , ஹரீஸ்  - 502 மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.

👉மற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் மிக மிக குறைவு - மருத்துவ கல்வி வட்டாரங்கள்.

👉ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் தான் மருத்துவ படிப்பில் சேரும் நிலை உள்ளது.

👉7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் இந்த நிலை மாறும் என எதிர்பார்ப்பு.

👉“ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், வேடிக்கை பார்ப்பதும் துரோகம்" என ஸ்டாலின் கூறியுள்ளார்.

👉7.5 % தனி இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க ராமதாஸ் கோரிக்கை.

🌈🌈நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு.

👉முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி துவங்கும் எனவும் அறிவிப்பு.

(ஏற்கனவே முதலாமாண்டு வகுப்புகள் நவ.1ல், துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.)

🌈🌈பள்ளிக்கல்வி - வழக்கு - அசல் மனு O.A.No.119/2014 - சுற்றுச்சுழல் பாதுகாத்தல் காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்த அறிவுரை வழங்கியது- 2019-2020 ஆம் கல்வியாண்டில் புத்தக வங்கியில் பாடப்புத்தகம் பெறுவது – சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🌈🌈இந்தியாவை உயர்கல்வியின் உலகளாவிய மையமாக மாற்ற முயற்சி: மைசூர் பல்கலை. நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரை

🌈🌈அரசு நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.31ம் தேதி கடைசி நாள்                                               

🌈🌈ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் சங்கம் கண்டனம்

🌈🌈மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்று மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது: தேவையான இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

🌈🌈முரளிதரன் கோரிக்கையை ஏற்று 800ல் இருந்து விலகினார் விஜய் சேதுபதி

🌈🌈அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வேண்டாம் என்ற முடிவை தமிழக அரசு மறுபரீசிலனை செய்யவேண்டும் என்று அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

🌈🌈முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.

முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்குச் சென்றனனனர்.

🌈🌈நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய ஜனநாயகம் மிகவும் நெருக்கடி மிக்க தருணத்தில் சிக்கியுள்ளது எனவும் சோனியா கூறினார். பொருளாதார மந்தநிலை, பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிலவுகின்றது என தெரிவித்தார்.

🌈🌈தேர்தல் ரீதியான முக்கிய பணி                   

🌹👉வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்புமுகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.

🌹👉சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020  மற்றும்

டிசம்பர் மாதம்

5.12.2020 ,6.12.2020 ,12.12.2020  ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்து வரும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் இரண்டிலும் அனைவரும் வாக்களிக்கலாம்.

🌈🌈பழைய அரசாணையை காரணம் காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காததால், பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி 

🌈🌈TRB மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை தேவை இல்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாளிதழ்  செய்தி

🌈🌈பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என  கல்வித்துறைக்கு கோரிக்கை 

🌈🌈தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களில் 3,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டம்.  தேர்வாணையம் மூலம் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை.

🌈🌈நவம்பரில் சிஎஸ்ஐஆர் , யுஜிசி ' நெட் ' தேர்வுகள்  - தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள  அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

🌈🌈ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

🌈🌈பிரபல சினிமா பைரஸி தளமான தமிழ்ராக்கர்ஸ் #Tamilrockers நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு.

🌈🌈ஆவணங்களில் மாற்றம் செய்ய தாசில்தார், நிலஅளவையர், சார் பதிவாளர்கள் லஞ்சம் பெறுகின்றனர்

ஊழல் தடுப்பு பிரிவினர் விழிப்போடு இருந்தால் ஊழல் அதிகாரிகள் சொத்து வெளிச்சத்திற்கு வரும்

லஞ்சம் பெற வருவாய், பத்திரப்பதிவு அதிகாரிகளுடன் மற்ற அரசு அதிகாரிகள் போட்டா போட்டி- உயர்நீதிமன்ற கிளை

🌈🌈அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

🌈🌈சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

🌈🌈அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று ஒருபோதும் கூறவில்லை  மத்திய அரசு விளக்கம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு.. 19.10.2020 (திங்கட்கிழமை)...

🌹நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.!

🌹🌹வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை ஆனால் 

ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையயே மாற்றிவிடும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                  

📕📘இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

📕📘2வது முறையாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது: செங்கோட்டையன்.                                                          

📕📘தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்

📕📘பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்:-

👉கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொளப்பலூர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது தொடர்பான கேள்விக்கு, பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்                                                                        📕📘டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது-குரூப்-4, விஏஓ தேர்வு, குரூப்- 2 தேர்வில் முறைகேடு - சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

📕📘அனைத்து அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் - பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று இருப்பு வைக்க வேண்டும். அரசு உத்தரவு 

(நாளிதழ் செய்தி)

📕📘தமிழகத்தில் 15 மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2  தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை, தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

📕📘அண்ணா பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்படப்பட்ட நிலையில், ஆன்லைன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி  வைப்பு 

📕📘தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு                                                                         

📕📘 ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள பண்டிகை கால ஏழு சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

📕📘அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய அரசாணை ஆசிரியர், மருத்துவர்களுக்கு பொருந்தும்: தலைமை செயலாளர் விளக்கம்.

📕📘2020 ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இந்த குறியீட்டில், நேபாளம் (73), பாகிஸ்தான் (88), பங்களாதேஷ் (75), இந்தோனேசியா (70) ஆகியவற்றுக்கு பின்னால் இந்தியா இடம்பெற்றுள்ளது. மொத்த 107 நாடுகளில், ருவாண்டா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லைபீரியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) உள்ளிட்ட நாடுகள் உட்பட இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே மோசமானவை.

📕📘அனைத்து மக்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசியை வழங்குவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பண்டிகைக்காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்கும்படியும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

📕📘திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிதியை அரசுகளின் பத்திரங்களில் முதலீடு செய்யும் தேவஸ்தான முடிவுக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

📕📘கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிவிசி பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது..       

 📕📘தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பிரச்சாரத்தில் கூறியளளார்.                

 📕📘அமெரிக்காவில் ஹெச் 1பி விசா கட்டணம் நாளை முதல் 1,440 டாலரில் இருந்து 2,500 டாலராக உயர்வு

📕📘தமிழகத்தில் உரிய வேலைத் திட்டங்களை ஏற்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என ஸ்டாலின் கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டங்களை கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்க வேண்டும். உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படியில் முதல்வர் பழனிசாமி எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலிறுதியுள்ளார்.

📕📘3 நாள் பயணமாக நாளை ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு செல்லும் ராகுல் சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்திலும் ராகுல் பங்கேற்கிறார்                                                                               

📕📘கல்வி கொள்கை பற்றிய கருத்துக்கள் தெரிவிக்க கால அவகாசம் அக் . 31 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

📕📘ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்க இயலாவிட்டாலும் , ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பழைய சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் சங்கங்கள்  கண்டனம் 

📕📘நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர். சீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் தேர்வு எழுதிய கோவை  மாணவர் மனோஜ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார் 

📕📘மத்திய அரசு ஊழியர்களைப்போல் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளி  சங்கம் கோரிக்கை. 

📕📘அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் 

📕📘நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 

 முதல் முறை தோல்வியுற்று 2-ம் முறை நீட் தேர்வு எழுதுபவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

📕📘DSE PROCEEDINGS: பள்ளிக் கல்வி - பள்ளிகளில் புத்தக வங்கி (Book Bank) 

தொடங்கி, 2019-20க்கான பழைய பாடப் புத்தகங்களை மாணவர்களிடமிருந்து பெற்று 

புத்தக வங்கியில் பராமரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு                                            

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns