கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 03.10.2020(சனிக்கிழமை)...


🌹கற்கண்டும் கண்ணாடி துண்டும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும் சாப்பிட்டுப் பார்த்தவுடன்  தான் தெரியும்.

எது இனிக்கும் 

எது கிழிக்கும் என்று அது போல தான் சில உறவுகளும்.!

🌹🌹எந்த மனிதனையும் ஒதுக்கக் கூடாது.ஏனெனில் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும் என்பதால்.!!

🌹🌹🌹பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அழகோ,அறிவோ அல்ல

நாம் பழகும் விதமும் 

பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📚📚கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி கட்டணத் தொகையாக ₹ 303.70 கோடி வழங்கப்பட்டுவிட்டது - 

பள்ளிக்கல்வி துறை 

📚📚செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 

 முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் பயின்ற பள்ளிக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மினி பேருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.  

📚📚இணைய சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இயலாத 52 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

📚📚வாரத்தின் ஆறு நாட்கள் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி இயங்கும். 3 நாட்களுக்கு 9, 11-ம் வகுப்புகளுக்கும், 10,12-ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும் நடக்கும். வருகைப் பதிவேடு கிடையாது. வீட்டருகேயுள்ள பள்ளிக்குச் சென்றும் கூட, பாட சந்தேகங்களுக்கு மாணவ, மாணவிகள் தீர்வு காணலாம் என்று பள்விக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்தார்.

📚📚நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் நேற்று முதல் மத்திய  நீர்வளத்துறை சார்பில் நூறு நாள்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

📚📚ICT விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு

📚📚அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் சோதனை செய்தனர். பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்

📚📚 பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் (SR MAINTENANCE) - பணிப் பதிவேடுகளில் பதிவுகள் செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - சார்ந்து பொதுவான வழிகாட்டி குறிப்புகள்... தமிழில் வெளியிடப்படுகிறது- பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியீடு.

📚📚 தனது பள்ளி கணித ஆசிரியருக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த ஐடிஎப்சி வங்கி தலைவர்.

📚📚தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

📚📚அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

📚📚ஜன. 3ம் தேதி குரூப்-1 முதல்நிலை தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚📚சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு

📚📚துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

📚📚சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 5ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

📚📚வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: விவசாயிகளின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தயார்- அமைச்சர் ராஜ்நாத்சிங்.

📚📚மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாகன ஓட்டிகள், வாகனத்துக்கான அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆவணங்களின், 'டிஜிட்டல்' பிரதிகள் இருந்தால் போதுமானது.

📚📚அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் எல்லையில் ஆக்ரமிப்பு செய்ய சீனா திட்டமிடுவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

📚📚கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிபோர்னியாவில் உள்ள சுறாமீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட் 19 மருந்துக்காக சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக சுமார் 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

📚📚அமெரிக்காவைச் சேர்ந்த 'பெக்டன் டிக்கின்சன் அண்ட் கோ' நிறுவனம், மருத்துவ கருவிகளை உற்பத்திய செய்து விநியோகித்து வருகிறது. இந்நிறுவனம் புதிய கருவி மூலம் 15 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளது.

📚📚கொரோனாவைக் கட்டுப்படுத்திய பின்னர், சீனா 'கோல்டன் வீக்' (golden week) தேசிய விடுமுறையைத் தொடங்குகிறது

📚📚மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டம் மூலம் நடைபெறும் காந்தி ஜெயந்தி கட்டுரை மற்றும் புதிர் போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெறுகிறது.

தமிழ் இல்லாததால் சர்ச்சை.

📚📚அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக இளநிலைப் பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு!

வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர்கூட இந்தாண்டு விண்ணப்பிக்கவில்லை

📚📚ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முதற்கட்ட விசாரணை அறிக்கையின் படி எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் சில அதிகாரிகளை சஸ்பென்ட்.செய்து உ.பி அரசு உத்தரவு.

📚📚ஐபிஎல் 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

📚📚கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று காலை 9 மணி முதல் இம்மாத இறுதி வரை மாநிலம் தழுவிய 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📚📚இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து உலக அளவில் கொரோனா தொற்றால், 1 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்த 3வது நாடு எனும் மோசமான இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

📚📚இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

📚📚சென்னையில் அக்டோபர் 5ம் தேதி முதல் புறநகர் ரயில்சேவை தொடக்கம். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி.

📚📚மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📚📚கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர்.

📚📚2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

📚📚சென்னையில் கொரோனா தொற்று குறைந்தபோது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளே இல்லாமல் இருந்தது. தற்போது நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் புதிதாக 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

📚📚உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,32,712 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,817,852 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,885,375 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,237 (பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📚📚நானும் எனது மனைவியும் நலமுடன் உள்ளோம். எங்கள் உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்போது நாங்கள் இருவரும் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளோம் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

📚📚அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்-2பி நுழைவு இசைவு (விசா) அளிப்பதை நிறுத்தி வைத்து அதிபா் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

📚📚ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள்: பெங்களூரு - ராஜஸ்தான்(3:30PM), கொல்கத்தா - டெல்லி(7:30PM) அணிகள் மோதல்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...