கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இரண்டு மாதம் தள்ளிப்போகிறதா? 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..?

 10ம் வகுப்பு மற்றும் 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 2 மாதங்கள் தள்ளிவைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனாத் தொற்றால் 2019 – 20ஆம் கல்வி ஆண்டு பிற்பகுதியில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியாத சூழலால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றன.. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை எல்லாம் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.  இந்நிலையில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலையுள்ளது. மேலும் உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை போன்ற அனைத்து துறைகளுக்கும் +2 பாடங்களே அடிப்படையாக இருந்து வருகிறது என்பதால் அந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் மாணவர்களுக்கு பல்வேறு திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் இதன் காரணமாக 10 மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கலாமா?? என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு “நீட், ஜே.இ.இ., நாட்டா, கியூசெட்” என்று பல நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. நேரடியாக நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என என்.டி.ஏ. இன்னும் முடிவு செய்யாத நிலையில் நுழைவு தேர்வுகளின் தேதிகள் தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க முடியும். இது குறித்து தமிழக கல்வி அதிகாரிகள் என்.டி.ஏ.விடம் ஆலோசனை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Transfer Counseling for BEOs held on today

  வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு Transfer Counseling for Block Education Officers held today, May 16th வட்டாரக் க...