கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசுப் பள்ளி கட்டடத்துக்கு வா்ணம் பூச கூலித் தொழிலாளி ரூ. 25ஆயிரம் நிதியுதவி...

 


குஜிலியம்பாறை அருகே அரசுத் தொடக்கப் பள்ளி கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணிக்கு கூலித் தொழிலாளி ஒருவர் ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள இரா.கொல்லப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 32 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இரா.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வெ.முருகன், பள்ளிக் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியை இரா. கமலா கூறியதாவது: தள ஓடு (டைல்ஸ்)பதிக்கும் கூலித் தொழிலாளியாக இருந்தபோதிலும், இந்த பள்ளிக்கு பல்வேறு வகையிலும் வெ.முருகன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது மாணவர்களுக்கு பரிசு வழங்கும் பொறுப்பினை முருகன் ஏற்றுக் கொள்வார். தற்போது பள்ளிக் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்கு ரூ. 25ஆயிரம் வழங்கியுள்ளார் என்றார். இதுகுறித்து முருகன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் கிடைக்கும் கூலியில் ரூ.100 முதல் 200 வரை பள்ளிக் கூட பங்களிப்பாக ஒதுக்கி வைத்துவிடுவேன் அந்தப் பணத்தில் தான் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பேன். கடந்த 6 மாதங்களாக பள்ளிக் கூடம் நடைபெறாத நிலையில், 10 ஆண்டு கால கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்காக சேமிப்புத் தொகையை செலவிட்டுள்ளேன் என்றார். அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு ரூ. 25ஆயிரம் நிதி உதவி அளித்த முருகனுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் வீ.சந்தியா உள்ளிட்ட அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...