கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 



பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெண்ணை பார்த்து கண் அடிப்பது, சைகை செய்வது, மற்றும் பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பது போன்ற செயல்கள் பாலியல் தொல்லையின் கீழ் வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் வழக்கொன்றில், இத்தகைய செயல்கள் பாலியல் ரீதியான தொந்தரவு மற்றும் குற்றச் செயலாகக் கருதப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 


2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...