கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 25.10.2020 (ஞாயிறு)...

 🌹பயணத்தை அனுபவிக்க வேண்டுமானால் சுமைகளை குறைவாக எடுத்துச் செல்லவேண்டும். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.!

🌹🌹நம்பி வந்தவர்களையும், நம்பிக்கை தந்தவர்களையும் வாழ்நாளில் மறக்கக் கூடாது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💐💐கரூர், மதுரை, குமரி, திருவாரூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சி, தருமபுரி ஆட்சியர் இடமாற்றம்

👉கரூர்- மலர்விழி, 

👉மதுரை- அன்பழகன், 

👉திருவாரூர்-சாந்தா, 

👉குமரி- அரவிந்த்

👉பெரம்பலூர் - வெங்கட பிரியா, 

👉தருமபுரி- கார்த்திகா, 

👉காஞ்சி- மகேஸ்வரி,   

👉திருவள்ளூர்-பொன்னையா நியமனம்

💐💐சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

💐💐 ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

💐💐வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

💐💐ஜனவரி மாதம் ஒரு முக்கிய அறிவிப்பு வரும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

💐💐Whatsapp: தனி நபரையோ அல்லது குழுவையோ 1 ஆண்டுக்கு MUTE செய்வதற்கு பதில், இனி நிரந்தரமாக MUTE செய்யலாம். வாட்சப் நிறுவனம் அறிவிப்பு

💐💐3 நாட்கள் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

💐💐" கற்போம் எழுதுவோம் " - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

💐💐ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு சலுகை : வட்டியில் குறிப்பிட்ட தொகையை திரும்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு

💐💐சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய புதிய தொழில் நுட்பம் - சிபிஎஸ்இ

💐💐தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பு கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்வு     

💐💐கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும்

👉நன்றி: அக் 24,2020 தினமலர்.

🌹👉சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

👉கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

👉அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

💐💐அரசியல் ஆதாயத்துக்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்!

பெண்களை இழிவுபடுத்தியது மனுதர்ம நூலா? திருமாவளவனா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!.

மனுதர்ம நூலில் சொன்னதையே தாம் மேற்கோளிட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்; பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்யும் வரை போராட்டம் தொடரும்!

திருமாவளவன்.

💐💐ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் 

தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுனரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும், ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் 

வைகோ

💐💐பண்டிகை காலத்திலும் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்து உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

💐💐திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிக்கிறேன்

திருமாவளவன் பெண்களை மதிக்கக்கூடியவர்,பண்பானவர்

மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டி

💐💐ஒவ்வொரு சமூகத்துக்கும் பார்த்து பார்த்து சலுகை கொடுத்தது திமுக ஆட்சி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

👉நாமக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் காணொலி மூலம் பேசிய ஸ்டாலின், உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டார். மேலும் மத்திய மாநில அரசுகள் சலுகைகளை தடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எப்பாடு பட்டாவது சமூக நீதியை நிலை நாட்டுவோம் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

👉மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு - காவல்துறைக்கு திமுக  கண்டனம்.

திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்?

திருமாவளவன் மீது வழக்கு- காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை.

பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசினார்.

திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்

ஸ்டாலின்.

👉நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மரபுகளை மீறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஆளுநர் இதில் தாமதிக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்றும் அவர் வினவியுள்ளார். மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

👉கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை: ஸ்டாலின்

7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார் என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறி இருக்கிறது. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது திமுகவின் கொள்கை என குறிப்பிட்டுள்ளார்                                                    

👉7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி,  ஆளுநர் மாளிகை முன்பு நேற்று திமுக ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின் பங்கேற்பு

👉பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தையும் இன்னும் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.

💐💐கொரோனா குறித்த எச்சரிக்கையை ஜன.11ம் தேதியே இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது - 

ஆர்.டி.ஐ.யில் தகவல்                                                                                                  

💐💐மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்தவுடன் நலமுடன் இருக்கும் கபில்தேவ் புகைப்படம் வெளியீடு.

💐💐அழகப்பா பல்கலை.,யில் Distance Education-ல் பயில விரும்புவோர் வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

74 வகையான UG, PG, Diploma & Certificate படிப்புகளில் சேர alagappauniversity.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

💐💐வரும் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை 

தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

💐💐மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் 

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் அறிவுறுத்தல் 

💐💐தனிநபர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம். 

தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்ய ஜனவரி 31 வரை அவகாசம்

-மத்திய நேரடி வரிகள் வாரியம்

💐💐7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்த உடன் மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும். 

- அமைச்சர் ஜெயக்குமார்

💐💐நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப இன்டர்போல் நடவடிக்கை என தகவல்.

ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பினால் குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது.

💐💐மொபைல் இண்டெர்நெட் வேகம் குறித்து 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 131வது இடம். இதுகுறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மொபைல் இணையதள வேகம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

💐💐நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு, இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

💐💐தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ₹6,000 கோடியை மத்திய அரசு கடன் வாங்கி வழங்கியுள்ளது. 

💐💐மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு.

💐💐எதிர்காலத்தில் ரஷ்ய, சீன படைகள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாபெரும் சக்தியாக மாறும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

💐💐கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசலினை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு பலியான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி செவிலியரின் கணவர் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

💐💐01.01.2021 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் மட்டுமே அரசு பணி வேலை நாட்கள் என்பதற்கான அரசாணை வெளியீடு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns