கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.10.2020 (புதன்)...

 🌹திரும்பிப் பார்க்க வைக்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப நினைக்க வைக்கும் குணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்.!

🌹🌹அவரவர் உடலின் அழகை கண்ணாடி காட்டுவது போல அவரவரின் உள்ளத்தின் அழகை அவரவரின் சொல்லும் செயலுமே வெளிப்படுத்துகிறது.

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📚📚10,11,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2020 - தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு. 10-ஆம் ,12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் 28.10.2020 இன்று வெளியிடப்படும். 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை 29.10.2020 வெளியிடப்படும் என அறிவிப்பு. 

📚📚கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் 3 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் திட்டம் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

📚📚ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத்திட கோரிக்கை.

📚📚மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ''இந்தியா முழுவதும் மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்று தங்களின் மாற்றுத்திறனை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிச் சான்றிதழைப் பெறுவோர், மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டைப் (PwD reservation) பெற முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

📚📚குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

📚📚அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

📚📚புதுவையில் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு அரசு ஊழியர்க ளுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது 

📚📚சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது’ என, லண்டன் அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்த ஆய்வு 35 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

📚📚முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நவம்பர் 15ம் தேதி வரை https:/nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

📚📚புதிதாக தொடங்கிய அரசு கலைக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மாணவர்கள் அச்சம்

📚📚"இராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியிருக்கும் செயலினை வன்மையாக கண்டிக்கிறேன்" - ஓ.பன்னீர்செல்வம்

📚📚தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக சார்பில் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க, மத்திய பாஜக அரசு துணைபோகக்கூடாது. மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

📚📚தமிழகத்தில் 7.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

📚📚மன்னார் வளைகுடாவில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுவரை இலங்கை தூதரை அழைத்து கூட இந்தியா எச்சரித்தது இல்லை, மேலும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

📚📚புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

📚📚கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு 

நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📚📚உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📚📚ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு 

- மத்திய அரசு

 📚📚ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்

📚📚பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் 

- ஜெயக்குமார்

📚📚அரசு துறைகளில் ஆரம்பநிலை பணியாளர்களை நியமனம் செய்வதில் எந்த தடையும்  இல்லை.

கொரோனா காலத்தில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் அதில் திருத்தம் மேற்கொண்டு புதிய அரசாணை வெளியீடு.

📚📚Facebook இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் ராஜினாமா.

📚📚அரசாணை எண்:382, நாள்:-24-10-2020, கூடுதல் பணிநியமத்திற்கு (Creation of New Posts) மட்டுமே தடை - ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தடை இல்லை அரசாணையில் திருத்தம்.

📚📚ஊக்க ஊதிய உயர்வு - செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் - M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் - உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதிக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல்  பெற்றிருக்க வேண்டும் - திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர்.

📚📚தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந. க. எண் : 012636/இ1/2020 நாள்:23.10.2020 ன் படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது - விபரங்கள் வழங்கும்போது 10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து, வட்டார கல்வி அலுவலர்களிடமிருந்து உரிய உத்தரவு பெற்று, பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களின் விபரங்களையும், தற்போது நிதித்துறை ஒப்புதல் பெற அனுப்புவதைத் தவிர்க்க - வட்டார கல்வி அலுவலர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க ஆவன செய்ய வேண்டுதல் மற்றும் 10.03.2020 க்கு முன்னரே ஊக்க ஊதியம் பெற உத்தரவுகள் பெற்றவர்களுக்கு உரிய பணப் பயன்கள் கருவூலகத்தில் பெற்று வழங்க ஆவன செய்ய வேண்டுதல்- சார்பு

📚📚கால்நடை மருத்துவ துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚📚நவ.15 கடைசி நாள்: பல் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

📚📚தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி - சட்ட பல்கலை பதில் தர உத்தரவு.

📚📚போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் 20 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.                                                                         

 📚📚பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.பில்., பகுதிநேர படிப்பானது யுஜிசி அங்கீகாரம் பெற்றது. இது தொலைநிலை கல்வியின் கீழ் வராது - பதிவாளரின் கடிதம்.

📚📚நாடு முழுவதும் உள்ள நான்காயிரம் ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு தடை மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவு.

📚📚2021 ஜூன் மாதம் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்.

📚📚அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - ஒப்புதல் கிடைக்கும் வரை போராட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

📚📚கொரோனா பொது முடக்கம் காரணமாக பட்டாசு விற்பனை இந்த ஆண்டு 50 சதவீதம் வரை குறைந்திருப்பதாக சிவகாசி விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் பட்டாசு உற்பத்தி மையமான சிவகாசியில் 3,000-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே விற்பனை துவங்கியதையும் வியாபாரிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர். 

 இந்த ஆண்டை பொறுத்தவரை சிறுவர்களுக்காக , ஜீபூம்பா, பாப் ஸ்டார், பின்ஜோர் கிரீன் போன்ற ரகங்களும் வானில் வர்ண ஜாலங்களைக் காட்டும் லவ்டோஸ், பிங் பாங், கிராக்லிங் கூல், செவன்அப், சில்வர் கூல் போன்ற புதிய பேன்ஸி ரக பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். 

 வாடிக்கையாளர்களின் சுமை கருதி இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை உயர்த்தப்படவில்லை என்ற போதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை 50 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

 எனினும் இனி வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என காத்திருப்பதாகவும் விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

📚📚எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகள் வரும் 2-ஆம் தேதி வரை இணையம் மூலம் பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த விவரங்கள் வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது                                                                                        

   📚📚பீகாரின் தற்போதைய அரசு தனது பாதையிலிருந்து தவறிவிட்டது; தொழிலாளர்கள் உதவியின்றி தவிக்கின்றனர், இளைஞர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்; பீகாரை வலுவாக கட்டமைக்கும் வலிமை, திறமை காங்கிரசுக்கு உள்ளது! - சோனியா காந்தி

📚📚SAJKS ஆட்சேர்ப்பு- இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என திட்டவட்டமாக அறிவித்த பாஜக அரசு- வைகோ கண்டனம்

📚📚அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனியே தலைமைதாங்கி வழிநடத்த வாய்ப்பு 

சிஎஸ்கே அணியின் சிஇஓ பேட்டி

📚📚புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வெளிப்புற சிகிச்சை வரும் 28ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

இணையதளம் வழியாக அல்லது, ஹலோ ஜிப்மர் செயலி மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்ற பின்பு சிகிச்சை பெறலாம்.

📚📚கலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில் இன்ஜினியரிங்கில் 75% இடங்கள் காலி: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

📚📚அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடரும் இழுபறி: உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிப்பால் மாணவர்கள் தவிப்பு

📚📚கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடக்கம்

📚📚அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு நேரடியாக மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

📚📚MDS படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு நவம்பர் 15 வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 31-ல் முடிவுகள் வெளியாகும்.

- தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.

📚📚இந்திய-சீன பதட்டங்களுக்கு மத்தியில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெறுகிறது.

📚📚அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது 

- தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

📚📚வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்

📚📚இந்தியர்கள் அனைவரும் இனி ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கலாம். புதிய ஜம்மு-காஷ்மீர் நில சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்.                                                

📚📚இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய உதவும் அமெரிக்காவின் ராணுவ செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்கள் போன்றவை இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது.

📚📚அரசுப்பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

📚📚வங்கியில் கடன் பெற்றவா்களிடமிருந்து வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் திருப்பி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📚📚தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 3,700 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தமிழக தீயணைப்புத்துறை அனுமதி அளித்துள்ளது.

📚📚வாரிசு அரசியல் மூலமாக பல தலைமுறைகளுக்கு ஊழல் வளர்த்த முறைக்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

📚📚தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

📚📚இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அமெரிக்காவிடம் வலியுறுத்தியது.

📚📚அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி பாரெட் (48) பதவியேற்றாா். சா்ச்சைக்குரிய அவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடா்ந்து, அவா் அந்த பதவியை ஏற்றுக்கொண்டாா்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...