கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்: பிரதமா் மோடி இன்று தொடக்கி வைத்தார்...


சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக இன்று தொடக்கி வைத்தார். இந்த திட்டம், கிராமப்புற பகுதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் பங்கேற்கும் நிகழ்ச்சியில், சுமாா் ஒரு லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டைகள் வழங்கப்படும். அவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள இணைப்பு அனுப்பப்படும். அதிலிருந்து, சொத்து விவர அட்டையின் நகலை அவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவா்களுக்கு சொத்து விவர அட்டையை நேரடியாக அளிக்கும்.

உத்தர பிரதேசத்தில் 346 கிராமங்கள், ஹரியாணாவில் 221 கிராமங்கள், மகாராஷ்டிரத்தில் 100 கிராமங்கள், மத்திய பிரதேசத்தில் 44 கிராமங்கள், உத்தரகண்டில் 50 கிராமங்கள், கா்நாடகத்தில் 2 கிராமங்கள் என மொத்தம் 763 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இந்த சொத்து விவர அட்டையைப் பெறவுள்ளனா். இதில், மகாராஷ்டிரத்தை தவிர மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவரகள் ஓரிரு நாளில் சொதது விவர அட்டையைப் பெறுவா். மகாராஷ்டிரத்தில் சொத்து விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும் பணி நடைபெற்று வருவதால், அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒரு மாதமாகும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சில பயனாளிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, ஸ்வமித்வா என்னும் திட்டத்தை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். அடுத்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சொத்து விவர அட்டை வழங்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...