கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

 


எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாறிவிட்டன - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விதிகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

 இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏற்கனவே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளில் ஓடிபி (OTP) அம்சத்தை கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 18 முதல், எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்கான நேரத்தை நீட்டிப்பதாக வங்கி அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுக்கலாம், எந்தவித சிரமம் இல்லை. 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி (SBI OTP) விதிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் திரும்பப் பெறலாம். அதாவது இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

எஸ்பிஐ (State Bank of India Rules) தனது விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யவும்" என வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

"எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை எஸ்.டி.பி வங்கி 24x7 ஆக நீட்டித்துள்ளது. எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யுங்கள்!" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்தது.

OTP எதற்கு?

முறைக்கேடான பரிவர்த்தனைகளை தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனையின் போது OTP அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP  அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. 

மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் : டிசம்பர் 2025 – ஜனவரி 2026 சிறப்பு முகாம்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள ச...