கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 04.11.2020(புதன்)...

 🌹நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள் தான், வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியை மனதில் வளர்க்கின்றது.!

🌹🌹அனைவரையும் சிரிக்க வைத்து ரசித்தவன் நான்... ஆனால் என்னையும் அழ வைத்து பார்த்தது சந்தர்ப்பமும், சூழ்நிலையும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💐💐7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்! மருத்துவக் கல்வி  இயக்குநரகம் அறிவிப்பு.

💐💐அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டண விவரம் வெளியீடு

💐💐வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

💐💐மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு -நேற்று முதல் 12-ம் தேதி வரை விண்ணபிக்கலாம். 16-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு.

💐💐தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்கள் அறிவிப்பு

💐💐01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் - அரசாணை வெளியீடு G.O.No.386, Dated: 02-11-2020

💐💐தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 14,757 பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு.

💐💐பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை.

9 முதல் 12ம் வகுப்பு வரை நவ.16 முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஆலோசனை நடைபெற்றது.

💐💐10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டகுரூப்-4 பணியில் 2 பிஎச்.டி. பட்டதாரிகள், 123 எம்.ஃபில். பட்டதாரிகள் சேர்ந்திருப்பது தகவல் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

💐💐UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும் என  வெ.இறையன்பு I.A.S. அறிவிப்பு.

💐💐பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும் இது சரியான தருணம் இல்லை என்றும் கருத்துக்கள் எழுவதால் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியததாகவும் கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

💐💐வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம். நவமபர் 21,22 மற்றும் டிசம்பர் 12,13

💐💐அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது, கலங்கும் பேராசிரியர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை

💐💐தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு முன்தாக மேற்கொண்டவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  அதிகாரிகளுடன் ஆலோசனை - நாளிதழ் செய்தி

💐💐ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்- 20.10.2020 வெளியிடப்பட்டுள்ளது

💐💐ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

💐💐நீட் தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: உள் ஒதுக்கீட்டால் நெகிழ்ந்த மாணவி

💐💐புதிய கல்வி கொள்கை:  பல்கலைகள் அவசரம் காட்டக்கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ்

💐💐மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம்: பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்படுத்த கோரிக்கை

💐💐எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவ.18 முதல் தொடக்கம்.

💐💐மருந்துகளை இலவசமாக பெறலாம் மத்திய அரசின் 'இ-சஞ்சீவனி' திட்டத்தில் ஆலோசனை பெறுவதில் தமிழகம் முதலிடம் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

💐💐பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவ 18 ஆம் தேதி தொடங்கும் JEE / NEET இலவச பயிற்சி வகுப்பில் சேர 14,975 மாணவர்கள் பதிவு.

💐💐புதிய பாடப்பிரிவுகள் தொடங்க ஆலோசனை வழங்க ஏ பி சி ஈ அறிவுறுத்தல் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க கல்வி நிறுவனங்கள் ஆலோசனை வழங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.

💐💐மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவியரிடம், தாலி, மெட்டியை அகற்றும்படி நிர்ப்பந்திப்பதற்கு, தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

💐💐பீகார் 2-ம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் நேற்று 5 மணி நிலவரப்படி 53.51% வாக்குகள் பதிவாகியுள்ளது.பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

💐💐பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

💐💐அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதுவரை இல்லாத அளவு 10 கோடி பேர் வாக்களித்தனர். அமெரிக்காவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10 கோடி 47 சதவீதம் ஆகும்.

💐💐ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 9,22,166 பேர் இருக்கிறார்கள். அவர்கள் இனி ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம்

💐💐சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை 

மக்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இருக்கும்.

மூன்றாவது அணிக்கான தகுதி மநீமவிற்கு வந்து விட்டது -கமல்ஹாசன்.

💐💐ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

💐💐பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க 2 ஆண்டுகளாக ஆளுநர் தாமதிப்பது ஏன்?  தமிழக அரசு அவருக்கு ஆலோசனை வழங்கக்கூடாதா? - உச்சநீதிமன்றம்

 💐💐நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம் - மு.க.ஸ்டாலின்

💐💐முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும்.

💐💐அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கூறிய நிலையில் தமிழக அரசு அமைத்த குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணியை கொண்ட தமிழக குழு கடிதம்.

துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என தகவல்.

💐💐இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது.

💐💐கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

💐💐பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி நவம்பர் 7 முதல் 30ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்க @moefcc  சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

💐💐ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் இன்னும் 30 ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💐💐தமிழகத்தில் இன்று முதல் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

💐💐பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீயை விட கடந்த மாதம் ஏற்பட்ட தீ  இருமடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...