கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 06.11.2020 (வெள்ளி)...

🌹இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால், வாழ்வில் பல வலிகள் இல்லாமல் போய் விடும்.!

🌹🌹எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே

நீங்கள் விலகி நின்றாலும் உங்களை தேடி வருவார்கள்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘CA தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: ICAI உச்ச நீதிமன்றத்தில் தகவல்

📕📘தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்ட முடிவுகளை அன்றே அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

📕📘பெற்றோர்களின் கருத்துகள் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

📕📘கல்வி சார்பான தகவல்களை வழங்குவதற்காக 51 - தொலைக்காட்சி சேனல்கள் - மத்திய அரசுடன் பிரசார் பாரதி ஒப்பந்தம்

📕📘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் மத்திய மந்திரி தகவல்

📕📘8 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC இணையதளம் புதிய பொலிவுடன், புதிய தகவல்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

📕📘பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘7.5% உள் ஒதுக்கீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

📕📘சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📕📘7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே கருணை காட்டுகிறது. தமிழக அமைச்சரவை முன்பே தீமானம் நிறைவேற்றிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

📕📘பேரறிவாளன் கருணை மனு மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதிப்பது பற்றி உச்சநீதிமன்றம் அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளது.

கருணை மனு மீது முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி 2 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த மறுநாளே ஆளுநர் டெல்லி பயணம் சென்றுள்ளார்.

📕📘கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. நேரு வழக்கு

தனி மனித இடைவெளி காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது - தமிழக அரசு தகவல்

👉டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளி 

பின்பற்றப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி.

👉குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் 

நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? - நீதிமன்றம் கேள்வி

👉எம்.எல்.ஏ. நேரு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

📕📘இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல்.:பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு.

📕📘Ministry of Finance தமிழகத்துக்கு ரூ.161.5 கோடியை விடுவித்தது மத்திய அரசு                   

👉15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு ரூ.161.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு 7,419.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு ரூ.90.5 கோடி, கோவை ரூ.45 கோடி, மதுரை ரூ.15.5 கோடி, திருச்சி ரூ.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

📕📘உலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு இந்தியாவே சிறந்த தேர்வாக இருக்கும் என உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களுடனான காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்வது சுலபம், முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

📕📘ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

அரசுடைமையாக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டு விட்டதாக அரசு கூறியதால் சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

📕📘பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், பொதுத்துறை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

📕📘10-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும், திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். புதிய படங்களை ரிலீஸ் செய்த பிறகு விபிஎஃப் கட்டணங்களை விதித்துக் கொள்ளலாம் என்பது அரசின் கருத்து என கூறினார்.

📕📘பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக அமித்ஷா, ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

📕📘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது.

👉மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 41,269 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 12,099 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.

📕📘தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து 7,370 மேல்நிலைப் பள்ளிகள், 5330 உயர்நிலைப் பள்ளிகள் என 12,700 பள்ளிகளில் வரும் 9ம் தேதி கருத்துக் கேட்கவும், அதனை கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

📕📘மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு 

📕📘ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

📕📘எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பில் சேரும்போது, கல்லுாரியின் ஆண்டு கட்டணத்தை பார்த்து தேர்ந்தெடுக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. கட்டண விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

📕📘புதுசா பழசா? ஓய்வூதியத் திட்ட குளறுபடி ஓயவில்லை மவுனம் காக்கும் வல்லுநர் குழு- புதிய திட்டத்தில் செலவுதான் அதிகம் தான் - நாளிதழ் செய்தி 

📕📘அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும்  பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு  செய்து முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

📕📘அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் இனவெறி கொள்கையே அவரின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்ததாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

📕📘பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் நவம்பர் 30ம் தேதி வரை மூடப்படும்

- மேற்கு வங்க அரசு

📕📘தமிழ்நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையாவுடன் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் கலந்தாலோசனை 

- ஆளுநர் மாளிகை

📕📘தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு:

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்

தீபாவளி அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவு படி பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு.

📕📘பள்ளிகள் திறப்பு குறித்து 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்

கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் அறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்

பெற்றோர்கள், மாணவர்கள்  தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும்

அதிகமான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து கருத்து கேட்க வேண்டும்- பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு 

பள்ளிகளில் சுத்தம் செய்யவும்,  கிருமி நாசினிக்கும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை- ஆசிரியர்கள்

6000 அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கிருமி நாசினிகள் எங்கே? என்றும் ஆசிரியர்கள் கேள்வி

📕📘அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டதையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பானவர்களை குற்றவாளியாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

📕📘ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுதலை செய்ய ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை.இந்தியா ஜனநாயக நாடு.யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

-முதல்வர் பழனிசாமி.

📕📘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். -எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்

📕📘இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை; கொரோனா பரவல் காரணமாக விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவிப்பு

📕📘என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் விஜய் அறிக்கை

📕📘உயர் சாதி ஏழைகள் (EWS) போட்டியாளர்களுக்கு காவல்துறை ஆட்சேர்ப்பில் ஐந்து ஆண்டு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும் - ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்.

📕📘பல்கலைக்கழகம், கல்லூரிகளை மீண்டும் திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது UGC.                                                             📕📘UG படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை வெளியீடு.

📕📘அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் / முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

📕📘மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம்.

📕📘ஒரே ஆண்டில் 2 அல்லது 3 பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க இயலாது -இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ்மொழி சார்ந்தவை எனும்போது சமஸ்கிருதம் அறிந்தவர்கள் அதிகளவில் பணி அமர்த்தப்படுவது ஏன்?"

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

📕📘"அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு" - அமைச்சர் செங்கோட்டையன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...