கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 16.11.2020 (திங்கள்)...

🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.

நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.

அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!

🌹🌹தகுதிக்கு மீறி கடனும் வாங்கக்கூடாது.

யாருக்கும் வாங்கியும் கொடுக்கக்கூடாது.

ஏனெனில் பணம்தான் 

மிகப்பெரிய பகையை உண்டாக்குகிறது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈அரசு ஊழியர், ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் - ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்.

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் - மத்திய அமைச்சருக்கு தி.மு.க. கடிதம்

🌈🌈படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 31 கடைசி நாள்.

🌈🌈வீடு வாங்குவோர், கட்டுமான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - வருமான வரித்துறை அறிவிப்பு

🌈🌈டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

🌈🌈புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சேர்வதற்கு வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌈🌈மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் தொடா்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமா்ப்பிக்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது.

🌈🌈தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிய கல்வி கொள்கையை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்திருக்கிறது

🌈🌈தெலங்கானாவில் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய சொத்து வரியில் 50சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

👉இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கே.டி.ராமாராவ், கொரோனாவைத் தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை கருத்தில் கொண்டு தீபாவளி பரிசாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

👉அரசின் இந்த நடவடிக்கை மூலம் 31லட்சத்து 40ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்றும் அரசுக்கு கூடுதலாக 6ஆயிரத்து 326 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார்.

🌈🌈தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

🌈🌈கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை.. விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2020

🌈🌈மதுரை ராமேஸ்வரம் இடையே சுற்றுலா ஹெலிகாப்டர் போக்குவரத்து டிசம்பர் இறுதிக்குள் துவங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🌈🌈இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

🌈🌈ஜம்மு–கஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று முன் தினம் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் துதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

🌈🌈மதுரையில் ஜவுளிக் கடை தீ விபத்து; கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு: இருவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி.

🌈🌈தீபாவளி விடுமுறை: உதகையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள்; இ-பாஸ் முறை ரத்து செய்யபட்டு இ-REGISTRATION முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

🌈🌈காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்; பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா.

🌈🌈தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் காலைமுதலே விட்டு விட்டு பெய்யும் கனமழை

🌈🌈அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனைக்கான காலக்கெடு 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் டிக்டோக் விற்பனைக்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🌈🌈தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கனமழை தொடரும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

🌈🌈ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

🌈🌈மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

கோவிட்-19 பாதிப்பை அடுத்து, இந்த ஆண்டு பக்தர்கள் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

🌈🌈பிரிட்டனில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

👉பிரிட்டன் சாலைகளை நாள்தோறும் ஆக்கிரமிக்கும் லட்சக்கணக்கான பெட்ரோல், டீசல் வாகனங்களால் அங்கு காற்று மாசு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

👉இதனையடுத்து 2040ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்க கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

👉பின்னர் அந்த முடிவு 2035ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது.

👉இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது 2030ஆம் ஆண்டு முதலே, பிரிட்டனில், பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

🌈🌈வரும் டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகர் மோன்செப் சுலோய், அடுத்த ஆண்டு, ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டரை கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கி உள்ள இரண்டு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதி அடுத்த மாதம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...