கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 18.11.2020 (புதன்)...

🌹பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட 

உண்மையாய் இருங்கள் 

அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது 

அதிக ஆழமானது.!

🌹🌹மனசு சரியில்லை நான் அப்புறம் பேசுகிறேன் எனும் உறவை விட 

மனசு சரியில்லை அதனால்தான் உன்கிட்ட

பேசுகிறேன் எனும் உறவே வலிமையானது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

👉மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர்  விஜய்பாஸ்கர் 16 ஆம் தேதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் அதனை தொடர்ந்து 7.5% இட ஒதுக்கீடு பெற்ற அரசுப்பள்ளி  மாணவர்களுக்கும் கலந்தாய்வு  நடைபெறுகிறது.  ஒரு நாளைக்கு 500  மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.    

மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி மற்றும் நேரம் குறுந்தகவல், இணையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி:கட்-ஆப் 80 முதல் 90 மதிப்பெண்கள் வரை உயர்வு.

🍒🍒எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களுக்கு தனித்தேர்வு கூடாது: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்.                                                                 

🍒🍒10 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு 11ஆம் வகுப்பு சேர்க்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

🍒🍒கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் ஒன்றிய அளவில் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் பயிற்சியை DEO,BEO,உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வையிடுதல் சார்பு - செயல்முறைகள் நாள்: 17.11.2020

🍒🍒அரசு பணியாளர், மற்றும் ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடக்கம்

🍒🍒சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு செல்வதற்கு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு

🍒🍒ஓய்வூதியம் பற்றி அறிக்கை சமர்ப்பித்து 10 மாதமாகியும் வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை இல்லை - பரிதவிப்பில் அரசு ஊழியர்கள்

🍒🍒10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது

🍒🍒பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.

🍒🍒இன்று நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒2020-2021 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

🍒🍒எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் புதுவை இடஒதுக்கீட்டில் சேர இருப்பிட சான்றிதழ் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

🍒🍒தமிழகத்தில் தொடர்மழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்: அரசு அறிவிப்பு

🍒🍒கோவிட்-19 தொற்றுக்கான கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்கவிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

🍒🍒தமிழகத்தில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் மூன்று நாட்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டு பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

🍒🍒தமிழகத்தில் கனமழை தொடருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

🍒🍒ரஷ்யா சார்பில் நடத்தப்படும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி காணொளி காட்சி மூலம் நேற்று பங்கேற்றார்.

🍒🍒மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 50 நாட்களாக பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில்வேக்கு சரக்கு வருவாயில் ஆயிரத்து 670கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

🍒🍒வடக்கு அரபிக்கடல் பகுதியில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்க கடற்படைகள் இணைந்து நடத்தும்  கடற்படை கூட்டு பயிற்சி நேற்று முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

🍒🍒நடிகர் சோனு சூட் பஞ்சாப் மாநில அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

🍒🍒பழனியில் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் உரிமையாளர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்தது காவல்துறை.                                                         👉துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சுப்பிரமணி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

🍒🍒வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில்  அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

🍒🍒கொரோனாவை தடுப்பூசியால் மட்டும் தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு.

🍒🍒கொரோனா பரவலைத் தொடர்ந்து அமெரிக்க கல்வி நிறுவனங்களில், வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ளது.

🍒🍒உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி வெனிசுலாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றுள்ளது.

🍒🍒அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

🍒🍒அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரங்களுடன் ஆணையத்தில் யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம்;  

உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.

விசாரணை ஆணைய அதிகாரி கலையரசன்

🍒🍒நீட் தேர்வை ரத்து செய்க!

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் 

-ஸ்டாலின்

🍒🍒தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 22ம் தேதிக்கு பதில் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                  கொரோனா அச்சுறுத்தலால் வாக்கு எண்ணிக்கை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் அறிவித்துள்ளார்.

🍒🍒அரசுப் பள்ளிகளில் மடிக்கணினிகள் திருட்டைத் தடுக்க சிறப்புக்குழு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒ஆன்லைன் வகுப்பால் அதிகரித்த கண் நோய்;

கவனிக்காமல் விட்டால் பார்வை பறிபோகும் அபாயம்' - கண் சிகிச்சை நிபுணர்         

 🍒🍒உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவு.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்- பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு & கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி :

👉பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை 

( பள்ளி திறப்பதற்கு முன் ) :

👉1.பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும்.

👉2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


🌹பள்ளிகள் திறந்த பின்:


👉1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

👉2.மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது .அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

👉3.பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

👉4.கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...