கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 19.11.2020 (வியாழன்)...

🌹மீண்டும் ஒருமுறை பிறப்போமா என்பதும் உறுதியில்லை

நாளை என்பதும் நம் கையில் இல்லை இருக்கும் வரை அனைவரிடமும் அன்பாய், நட்பாய் இருப்போம்.!

🌹🌹கொஞ்சம் சாமார்த்தியம் 

கொஞ்சம் நடிப்பு 

கொஞ்சம் பொய்

கொஞ்சம் உண்மை இருந்தா தான் இந்த உலகத்துல வாழ முடியும்.

நேர்மை எல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑பள்ளிக் கல்வி - மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளம் (Ramp) மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

⛑⛑அர்ச்சகரின் மகன் ஒருவர், தான் படிக்கும் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுப்பதில்லை என்றுக் கூறி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

⛑⛑கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது , அரியர் தேர்வுகளை நடத்த வேண்டும்  

- உயர்நீதிமன்றத்தில் UGC தகவல்

⛑⛑சசிகலா வந்தால் கட்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது 

- எடப்பாடி பழனிசாமி

⛑⛑VPF கட்டண பிரச்சனையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

⛑⛑தமிழக முதல்வர் 7.5 ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்ஸில் சேர்ந்த 18 அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்தார் மற்றும் அவர்களுக்கு ஸ்டெதாஸ்கோப் & ஏப்ரனை வழங்கி அவர்களுக்கு ஒதுக்கீடு உத்தரவுகளை வழங்கினார். 

⛑⛑மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.

⛑⛑தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

⛑⛑ஜோ பைடனை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி;கொரோனா நிலவரம், பருவநிலை மாற்றம் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்.

⛑⛑லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் ரூ.25000 வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி.

⛑⛑கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகஅரசு அமைத்த கல்வியாளர் குழு சமர்ப்பித்த 2வது கட்ட அறிக்கையின்படி தமிழகஅரசு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட வாய்ப்பு  உள்ளதாகவும், மேலும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக விவாதித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

⛑⛑ஒடிஷாவில் மாவோயிட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் அனைத்து வீடுகளுக்கும், இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என, முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

⛑⛑சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் 20ம் தேதி ஆலோசனை கூட்டம்

⛑⛑விண்வெளியில் சுற்றி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கப்பலில் இருந்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.

⛑⛑பாகிஸ்தான் ராணுவத்தில் சிலர் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது ஊரறிந்த ரகசியம் - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா.

⛑⛑ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து பகுதியளவு அமெரிக்கப் படைகள் வாபஸ்- அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்.

⛑⛑இந்தியாவில் நடைபெற இருந்த  17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் ரத்து.

⛑⛑இன்றே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்"

👉மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

👉ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவிப்பு

👉வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்

👉வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு எனத் தகவல்

👉கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை

⛑⛑இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இதுவரை உச்சத்தில் இருந்தது கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

👉ராகுல்காந்தி இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-  

👉'நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை. 

 👉நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

⛑⛑பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எளிமை, நேர்மையை கடைபிடித்த முகமது இஸ்மாயிலின் மறைவு பொதுவாழ்வுக் களத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

⛑⛑தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி

⛑⛑அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 - பணியிடங்கள் தோற்றுவித்தது - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1ஆக தரம் உயர்த்துதல் - ஆணை வழங்குதல் - குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் - நாள் 18.11.20

⛑⛑அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம்.இந்த நாள்(நேற்று) எனக்கு மகிழ்ச்சியான நாள் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்

👉313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

⛑⛑தொழில்நுட்ப மாணவர்கள் வருகின்ற நவ30.க்குள் முன் தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு                                                            ⛑⛑நடப்பு கல்வி ஆண்டுக்கான மீதமுள்ள கட்டணத்தை பிப்.,28-க்குள் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

⛑⛑பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடி நிவாரணம் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

⛑⛑கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி: நவ. 21, 22-இல் எழுத்துத் தேர்வு                                                                        

⛑⛑புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் - 21 மாதத்தில் கட்டி முடிக்க டாடா நிறுவனம் திட்டம்.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

👉கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.                                                   👉இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தற்போது தான் கட்டுக்குள் இருக்கிறது, அடுத்து எப்போது வேண்டுமானாலும் கொரோனா இரண்டாம் அலை வீசும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை திறக்காமல் இருக்கிறோம்.

👉பள்ளிகளைத் திறக்க மேலும் காலதாமதம் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

👉கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து, தாமதமாக மாணவர்சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவும் கைவிடப்பட்டது. 

👉இதனிடையே, ஆன்லைன் வகுப்புகள் மூலம் குறைந்த அளவிலேயே பாடம் நடத்தப்படுவதால் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 60% பாடப்பகுதிகளில் இருந்தே பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.  

👉நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் இந்த முறையும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.   

 👉இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையனிடம், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...