கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிசீல்டு மருந்தைச் சோதனைக்குச் செலுத்தியதில் கடும் பக்கவிளைவு - ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்...

 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியைச் சோதனை முறையில் போட்டுக்கொண்டவர் கடுமையான பக்க விளைவுக்கு ஆளானதாகக் கூறி 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 40 வயதானவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தான கோவிசீல்டைச் சோதனை முறையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடலில் செலுத்திக் கொண்டார்.

அதன்பின் 14 நாட்களுக்குக் கடுமையான தலைவலி இருந்ததாகவும், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குப் பக்க விளைவு ஏற்பட்டதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாயை 2 வாரங்களில் வழங்கவும், கோவிசீல்டு மருந்தை மேற்கொண்டு சோதிக்கத் தடை விதிக்கவும் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Grama Sabha Meeting on 01-11-2025

    கிராம சபைக் கூட்டம் உள்ளாட்சிகள் தினம் 01-11-2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதம்,...