கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்...

 தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு திட்டம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன், அவர்கள் குறிப்பிடும் தேதியில் பத்திரம் பதிய பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பத்திரம் பதிவு செய்தவுடன் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக 70 % ஆவணங்கள் மட்டுமே திருப்பி தரப்பட்டன. ஆனால், 30% ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்தவுடன் அவை திருப்பி தருவதில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சீராய்வுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஐஜி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திரம் பதிவு செய்த அன்றே பத்திரத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சங்கர் தினமும் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். ஆவணங்களை திருப்ப ஒப்படைப்பதை கம்ப்யூட்டரில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கண்காணித்து உரிய உத்தரவுகளை வழங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.11.2020) பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கக்கூடிய 15,433 ஆவணங்களில் 14,591 ஆவணங்கள் அன்றைய தினமேதிரும்ப வழங்கப்பட்டன. இது பதிவு செய்த ஆவணங்களில் 94 % ஆகும். இதன் மூலம் பொதுமக்கள் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணங்கள் திரும்ப பெற வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் சங்கர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Unit 5 - February 3rd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

  4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு5 – பிப்ரவரி 4வது வாரம் (Term 3 - Unit 5 - February 3rd Week - Les...