கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே 7.5% இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

 அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பும், பிற வகுப்புகளை அரசுப் பள்ளியிலும் பயின்ற மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சலுகையை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

தஞ்சை நாவக்கொல்லையைச் சேர்ந்த அறிவழகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”என் மகள் அரிவிக்கா, நாவக்கொல்லை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக என் மனைவியின் ஊரான புன்னவாசலில் குடியேறினோம். அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அரிவிக்கா 6-ம் வகுப்பு படித்தார். பின்னர் மீண்டும் நாவக்கொல்லையில் குடியேறினோம். 7 முதல் 12-ம் வகுப்பு வரை அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்றார்.

பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், 12-ம் வகுப்பில் 453 மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதலிடத்தையும் பிடித்தார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை எழுதி 270 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சலுகையை என் மகளுக்கு வழங்கினால் மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, என் மகள் அரசுப் பள்ளியில் பயின்றவர் எனக் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு சலுகைப் பட்டியலில் என் மகள் பெயரைச் சேர்க்கவும், அதுவரை ஒரு மருத்துவ இடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், ”மனுதாரரின் மகள் 6-ம் வகுப்பு தவிர பிற வகுப்புகளை அரசுப் பள்ளியில் பயின்றுள்ளார். இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுச் சலுகைக்கான தகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை. இதனால் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine   புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிரு...