குடும்ப நலத்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “மாணவர்களைப் பரிசோதிக்க ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடும்ப நலத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.