பள்ளிகளை திறந்தால், கொரோனா தொற்று அதிகமாகும் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, வரும், 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன் விபரம்: பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம்.
பெற்றோர் - ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள்பங்கேற்கக் கூடாது. பெற்றோர் என்ற பெயரில், அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில்பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது. எவ்விதமான சமூக அமைப்புகள், அரசியல் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.