கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு...

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்களான, ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள்களில் 10,500 ரூபாய் உயர்த்தி அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ள கர்நாடக அரசை போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், அரசு நிர்வாகத்தில் மறு நியமனம் செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இது தொடர்பான பலன்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர். 

தமிழக அரசின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களிடமும், அரசு மருத்துவர்களிடமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர் சங்கத்தினர் "கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால் எங்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தை ஏற்க மறுத்து வருகிறார் முதலமைச்சர். அதேபோல எங்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு பலன்களை நிறுத்திவிட்டது தமிழக அரசு. இப்படிப்பட்ட சூழலில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவது துரதிஷ்டவசமானது' என்றனர்.

 நம்மிடம் பேசிய அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியான டாக்டர். பெருமாள்பிள்ளை அரசின் கோரிக்கையை ஏற்று எங்களின் ஊதிய கோரிக்கை போராட்டத்தை வாபஸ் பெற்று ஒரு வருடம் கடந்து போன நிலையிலும் கோரிக்கையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சூழலிலும் முதல்வர், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எங்களின் ஊதிய பிரச்சினையை தீர்க்க மனம் வரவில்லை. தமிழகத்தில்தான் கொரானா தடுப்பு பணிகள் மிக சிறப்பாக இருப்பதால், மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் விவரங்களை பின்பற்ற வேண்டும் என ஐ சி எம் ஆர் நிறுவனம் தெரிவிக்கிறது. குணமடைந்தவரின் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. வெறும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களை வைத்தே இதனை சாதித்து இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புதான். சுகாதாரத்துறை செயல்பாடுகளில் 25வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியமும், ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தமிழக அரசு மட்டும் எங்களை துச்சமாக நினைக்கிறது. இத்தனைக்கும் அரசாணை எண் 354ன் படி அமல்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். நிதி நெருக்கடியிலும் ஐஏஎஸ்-ன் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் போது எங்களுக்கான ஊதிய விஷயத்தில் மட்டும் அரசு பாராமுகம் காட்டலாமா? மக்களின் நோய் தீர்க்கும் பணியை அர்ப்பணிப்புடன் செய்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தில் 30 சதவீதம் குறைத்து இருப்பதை என்னவென்று சொல்வது? அதிகாரிகளுக்கு செய்தது போலவே எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும். இல்லையெனில் மீண்டும் நாங்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை' என்றார் ஆதங்கத்துடன்.

 இதுகுறித்து சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது "கொரானா தடுப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். அரசு மருத்துவர்கள் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் அரசுக்கு தெரியும். விரைவில் நல்லது நடக்கும். அதே சமயம் அரசின் நிதி நிலைமைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார், சூழலை விளக்கியபடி...

நன்றி: நக்கீரன், 2020 நவம்பர் 25-27, இதழ் பக்க எண்:36,37...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...