கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அனைத்து பள்ளிகளிலும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க உத்தரவு...

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து வகை பள்ளிகளில் ( Govt . , Aided , Unaided ) Online Entry , புதிய பதிவேற்றம் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை புதுபித்தல் சார்ந்து EMIS-- ல் மேற்கொள்ளப்பட வேண்டிய கீழ்கண்ட பணிகளை முறையாக செயல்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் விவரம் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையும் , புதிய பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மாணவர்கள் விவரங்கள் சரியானவை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* ஆதார் எண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் EMIS- ல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

* புதியதாக ஒரு மாணவன் EMIS- ல் பதிவேற்றம் செய்வதற்கு முன் வேறுப் பள்ளி ( அ ) Common Pool- ல் மாணவர் விவரம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே , புதிய மாணவர் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

* Double Entry மாணவர் விவரங்களில் Duplicate Entry மாணவர்களை கண்டறிந்து Common Pool -க்கு அனுப்பிவிடுதல் வேண்டும்.

* RTE- ன் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் . தனியார் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் விவரங்கள் முறையாக EMIS- ல் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

* தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கினால் , அவ் ஆசிரியர் விவரம் EMIS- ல் நீக்கப்பட்ட பின்பு புதிய நியமன ஆசிரியர் விவரம் உள்ளீடு செய்யப்பட்டதை , ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

* OSC NRSTC மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்தல் ( Tagging ) 

* IE ( Category wise ) மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்து , சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

• UDISE + -6ů Infra Structure ( CAL , Toilets , Classrooms , Land Details , Building , Drinking Water , Ramp , Compound Wall , Electrification ) , Training Details தவறுதலின்றி சரியான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தல் மற்றும் மேற்கண்ட விவரங்கள் மாற்றங்கள் இருப்பின் அவ்வப்போது பதிவுகளை புதுப்பித்தல் செய்ய வேண்டும்.

* அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் பதிவு செய்தல்.

* குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் EMIS - 60 முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் சார்ந்த விவரங்கள் அந்தந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உட்கூறு சார்ந்த விவரங்கள் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.

மேற்காண் அனைத்து அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை EMIS- ல் முறையாக தொடர்ந்து கண்காணித்து எவ்வித தொய்வின்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார மைய (பொ) மேற்பார்வையாளர் , கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...