கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்

 

EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்


EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,


பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class மாற்றுச் சான்றிதழ் (TC) களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes

1. Primary school - 5 std

2. Middle Schools - 8 Std

3. High Schools - 10 std

4. Higher Secondary schools - 10 and 12 std


* Note: Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Cycle Entry, Textbook, uniform, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ள வேண்டும்.


For TC reset (Too many attempts exceeded) - Please contact BRTE


Regarding Promotion


* Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


* குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


* குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( School -> Class and Section).



 * குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


* குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


Promotion work


* Point to be noted: 01


Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


* Primary School -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Middle School -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* High School -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Higher secondary School - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


* Note: Higher secondary school - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


* Steps to be Followed after Promotion Process


* Promotion முடித்த பின்


* Step 1


* School -> Class and Section பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் Delete செய்ய வேண்டும்.


* Step : 2


* School -> Class and Section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


EMISல் Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்

 

EMIS Websiteல் Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


3 things to keep in mind before starting student's promotion work on EMIS website


* குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


* குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( *School -> Class and Section*).


 * குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


* குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் *"Student is Promoted to the Next class ?"* என்ற களத்தில் *Discontinued* என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


* Promotion work


* Point to be noted: 01


Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


*Primary School* -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Middle School* -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*High School* -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Higher secondary School* - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


*Note:* Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


*Steps to be Followed after Promotion Process*


*Promotion முடித்த பின்* 


* Step 1


*School -> Class and Section* பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் *Delete* செய்ய வேண்டும்.


* Step : 2

*School -> Class and Section* பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


 நன்றி!!


Student TC & Promotion modules, Annual marks entry - State EMIS Team Message



EMIS - Student TC module, Promotion module and Entry of annual marks - State Team Message 


 Dear Sir / Madam, 


🌾 Student Promotion module will be enabled by Friday (09.05.2025).                   


🌾 TC module is on, schools can generate TC  


🌾 Please ensure entry of annual marks in EMIS before promoting the profiles  ( as per the instructions of DEOs concerned)


Thank you.




EMIS TC GENERATION REGARDING

                                                                                          Hi all,

Good Evening,


TC module is live now!! Please start generating the TC          

                                                                                                                                                                                                                                                                              STATE EMIS TEAM


STUDENTS TC Genaration Process

 

மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் முன் EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


STUDENTS TC Genaration Process in EMIS Website 


Tasks to be completed on the EMIS website before issuing students' Transfer Certificates


STUDENTS TC GENARATION REGARDING..


1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE  mark entry, 7.5% Verification (school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 


2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.


3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* . மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.


4. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 


        (Primary - வகுப்பு 5

          Middle  - வகுப்பு 8

          High school -வகுப்பு 10  

          HR sec - 10  & 12 

 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common poolக்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.


 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.


5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5, Middle -8 , High -10, Hr sec -12) மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 


6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 


7. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்  மூலம் தகவல் தெரிவிக்கவும்.


மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



வகுப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் EMIS TC தயார் செய்ய அங்க அடையாள விவரங்கள்

 

 

வகுப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் TC தயார் செய்ய அங்க அடையாள விவரங்கள்


EMIS ONLINE TRANSFER CERTIFICATE SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK


(உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்)



1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்

 A mole on the left palm


2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead


3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்

 A mole on the index finger


4.இடது முட்டியில் ஒரு தழும்பு

A scar on the left knee


5.வலது கணுக்காலில் ஒரு வடு

 A scar in the right ankle


6.வலது முழங்கையில் ஒரு வடு

 A scar in the right elbow


7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்

 A mole on the left thumb


8.வலது தொடையில் ஒரு தழும்பு

 A scar on the right thigh


9.வலது கன்னத்தில் ஒரு மச்சம்

 A mole On the right cheek


10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்

A mole on the left shoulder


11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு

 A scar on the right eyebrow


12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear


குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.🙏🙏



Parts of the body to write the identification marks in TC


A  Mole on the right side of the Nose. - மூக்கின் வலதுபுறம் ஒரு மச்சம். 

A  Scar on the left Knee.- இடது முழங்காலில் ஒரு தழும்பு.


Below - கீழே .

Above - மேலே.

Near - அருகில் .

Left side - இடது புறம் .

Right side - வலதுபுறம் .

Back of the - பின்புறம் .

Forehead - நெற்றி .

Temple - நெற்றிப்பொட்டு.

Eye brow - கண் புருவம். 

Eye lid - கண் இமை .

Eye ball - கண் மணி .

Ear- காது.

Back of the Ear - காதின் பின்புறம் .

Cheek - கன்னம்.

Lower lip - கீழ் உதடு .

Upper lip - மேல் உதடு .

Chin - முகவாய்க்கட்டை.( வாயின் கீழ் பகுதி)

Jaw - தாடை ( கன்னத்தின் கீழ் பகுதி)

Neck - கழுத்து .

Nape - பின் கழுத்து .

Shoulder - தோள்பட்டை. 

Upper arm - மேல் கை.

Elbow - முழங்கை. 

Fore arm - கீழ் கை.(முன்னங்கை)

Wrist - மணிக்கட்டு.

Palm - உள்ளங்கை.

Back of the Palm - புறங்கை.( பின்னங்கை)

Thumb - கை கட்டைவிரல்.

Index finger - சுட்டுவிரல்.

Middle finger - நடுவிரல்.

Ring finger - மோதிர விரல்.

Little finger - சுண்டுவிரல்.

Fist - கை முட்டி.

Knuckle - விரல் மூட்டு.

Calf - கெண்டைக்கால்.

Shin - முன்னங்கால்.

Ankle - கணுக்கால்.

Foot - மேல்பாதம்.

Sole - அடிப்பாதம்/ உள்ளங்கால்.

Heel - குதிக்கால்.

Big / First Toe - கால் கட்டைவிரல். (பெருவிரல்)

Second Toe - கால் இரண்டாம் விரல்.

Middle/ Third Toe - கால் நடுவிரல்.

Fourth Toe - கால் நான்காவது விரல்.

Little/ Fifth Toe - கால் சிறு விரல்.


EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

 

 

EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு


கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்' இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - DSE Proceedings, Dated : 01-04-2025

 

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம், நாள் : 01-04-2025


Tasks to be completed by Headmasters and teachers within one week of the completion of the examinations - Letter from the Director of School Education, Date: 01-04-2025


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS - மாணவர்களின் Duplicate Entry - உரிய காரணத்துடன் Common Poolக்கு அனுப்பும் முறை

 

EMIS - மாணவர்களின் Duplicate Entry - உரிய காரணத்துடன் Common Poolக்கு அனுப்பும் முறை


EMIS - Video Manual for student moving to the Common Pool with the reason of Duplicate Entry




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


2025-2026 - Student Admission in Government Schools - Details & Guidelines Required for Registration on EMIS Website

 

2025-2026 ஆம் ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - EMIS வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள் & வழிகாட்டு நெறிமுறைகள்


2025-2026 - Student Admission in Government Schools - Details & Guidelines Required for Registration on EMIS Website











Instructions (வழிகாட்டு நெறிமுறைகள்)

This application form is only for the students under the following criterias

Students from Anganwadi

Students from Private schools (Pre KG - XII)

Students from other States/Countries

Direct New Admission


Note

This application form is not applicable for Transferred/promoted students from Government/Aided schools


இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்

சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்

பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்

புதிய நேரடி மாணவர் சேர்க்கை


குறிப்பு

முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது




2025-2026 - Application Form for Student Admission - EMIS Website



2025-2026 - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் - EMIS வலைதளம்


2025-2026 - Application Form for Student Admission - EMIS Website 


அனைவருக்கும் வணக்கம் ! 


2025-2026 ஆம்  கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது .  அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . 


மேலும் ,   விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான  வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும் .  


முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது .


இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்


அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்


சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்


பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்


புதிய நேரடி மாணவர் சேர்க்கை


குறிப்பு

முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Temporary removal of admission form from EMIS website

 

 EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.




12 apps from EMIS to APPA - Teachers Suffering by Phone and Hand - Daily News



 எமிஸ் முதல் அப்பா வரை மொத்தம் 12 செயலிகள் - போனும், கையுமாக ஆசிரியர்கள் அவதி - நாளிதழ் செய்தி 


A total of 12 apps from EMIS to APPA - Teachers Suffering by Phone and Hand - Daily News


கல்வித்துறையில் கற்பித்தலை தவிர ஆசிரியர்களிடம் என்ன வேலை வாங்குவது, தனியார் நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து என்னென்ன ஒப்பந்தங்களை வாரி வழங்கி, ஒதுக்கப்பட்ட நிதியை கரைப்பது என்ற மனநிலை தான் தற்போது மேலோங்கி கிடக்கிறது. வேறு எந்த துறையிலும் இல்லாத அளவில் இத்துறையில் தான் தனியார்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் (ஸ்கீம்ஸ்) அதிக எண்ணிக்கையில் நடைமுறையில் உள்ளது.


குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என இத்துறையின் ஒட்டுமொத்த தகவல்களும் இடம் பெற்றுள்ள 'எமிஸ்' சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை உட்பட நாள் ஒன்றுக்கு 120க்கும் மேற்பட்ட பதிவேற்றங்கள் இத்தளத்தில் தினம் பதிவிடப்பட்டு வருகின்றன.


காலை வருகை பதிவை மேற்கொள்வதற்கு வசதியாக ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியில் 'டி.என்.எஸ்.இ.டி., வருகை பதிவு' ஆப் ஐ பதிவிறக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பின் டி.என்.எஸ்.இ.டி., ஸ்கூல், டி.என்.எஸ்.இ.டி., பேரன்ஸ், டி.என்.எஸ்.இ.டி., ஸ்டாப், எஸ்.எம்.சி., வருகை பதிவு, எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி, டோபோக்கோ மானிட்டரிங், மதிய உணவு, காலை உணவு, மணற்கேணி என அடுத்தடுத்து 11 'ஆப்'களை ஆசிரியர்கள் தங்கள் அலைபேசிகளில் தற்போது வரை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.


இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'அப்பா' (அனைத்து பிள்ளைகள் பேரன்ட்ஸ் டிச்சர்ஸ் அசோசியேஷன்) என்ற 'ஆப்'ஐ 12வதாக அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ஆப்களையும் கண்காணிப்பதற்குள் ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.



இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:


கற்பித்தலை தாண்டி இதுபோன்ற டேட்டா கலெக் ஷன் வேலைகளை தான் ஆசிரியர்கள் பிரதானமாக செய்துகொண்டுள்ளோம். மிகச் சிலரே அட்வான்ஸ் மாடல் அலைபேசிகளை வைத்துள்ளனர். 80 சதவீதம் ஆசிரியர்கள் சுமார் ரகங்களை தான் வைத்துள்ளனர். ஏற்கனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், வர்த்தக, வங்கி ரீதியாக பல சொந்த தேவைக்காக பல ஆப்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம்.


அவற்றோடு கல்வித்துறை ஆப்களையும் பராமரிப்பது சவாலாக உள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 1 ஜி.பி., ரேம் கொண்ட 'டேப்' வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்பேஸ்' பிரச்னையால் அதில் இதுபோன்ற ஆப்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 'டேட்டா' தீர்ந்துவிடுவதால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. செலவு எங்கள் தலையில் விழுகிறது. மாணவர்களுக்கான கற்பித்தல் நேரம் பாதிக்காத வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



EMIS New Update - Scholarship Details for Students

 

EMIS New Update - மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விவரங்கள்


 STUDENTS SCHOLARSHIP DETAILS IS NEW UPDATE IN EMIS WEBPORTAL NOW



EMIS Website

|

School Login

|

Student

|

Student Details

|

Student Scholarship Details

|

Choose Column

|

Rural Girls Incentive MBC/DNC /

ADW Rural Girls incentive /

ADW and Tribal welfare pre matric /

Minority Rural Girls Incentive

|

Verify Bank Account Seeding Details & Aadhar eKYC


Uploading of data on EMIS website - Reducing Data Entry activities - Joint Proceedings of DSE, DEE and DPS

 

 EMIS இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்தல் - பணிகள் குறைப்பு நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


பள்ளிக்கல்வித்துறை - EMIS இணையத்தில் தரவுகளை உள்ளீடு செய்தல் மறு ஆய்வு மற்றும் குறைப்பு நடவடிக்கை சார்ந்து  இயக்குநர்கள் இணை செயல்முறைகள் வெளியீடு


Uploading of data on EMIS website - Reducing Data Entry activities - Joint Proceedings of Directors of School Education, Elementary Education and Private Schools



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இருந்து தினமும் அதிகளவிலான தகவல்களை மாணவர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் தாம் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாகவும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர். இதற்கு தீர்வுக்காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி கூறியிருந்தார்.இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள்:கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவு பதிவு செய்வதையும், மதிப்பிடுவதற்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு தற்போதுள்ள தரவு பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு EMIS-இல் தரவுகளை பதிவு செய்யும் பணியினை எளிதாக்கவும், நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பள்ளிகள் அளவில் விபரங்களை பதிவு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில் அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே பராமரிக்கும் வகையிலும், தரவு பதிவுச் செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.


பள்ளிக்கல்வித் துறையின் கடிதம் ஆசிரியர்களுக்கான பயிற்சியின்போது அவர்களின் தரவு பதிவை குறைப்பதற்காக பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன.


ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும்.


நிதிப் பதிவு, நிறுவனப் பதிவு , பள்ளி நன்கொடைப் பதிவு, தகவல் தொடர்புப் பதிவு. மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள் போன்றவை பதிவு செய்வது நீக்கப்பட்டுள்ளது.


நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் பயன்படுத்தி உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக இருப்பு ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.


வாசிப்பு இயக்கம்:எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை.


கலைத் திருவிழா:


வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.


தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள்:


தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள் கேள்விவாரியான தரவு உள்ளீடு செய்வதை விடுத்து, மாணவர் வாரியான மதிப்பெண்கள் மட்டுமே உள்ளீடு செய்யப்படல் வேண்டும்.


SA கேள்விகள் வாரியாக மதிப்பெண்கள் கைப்பேசி அல்லது இணையதளங்களின் மூலம் பதிவிட்டால் போதுமானது.


விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்:


பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட ஒட்டுமொத்தமாக விநியோகிக்கப்பட்ட இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.


குழுக்கள் மற்றும் மன்றங்கள்:


அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.பணியாளர்கள் பதிவேடு, ஓய்வூதியங்கள் மற்றும் IFHRMS உடன் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும்.கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும்


ICT மற்றும் இணைய வசதி சார்ந்த விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வகைப் பதிவுகள் மேற்கொள்வது குறைக்கப்படுகிறது.பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே, தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை.இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக பதிவு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிகோலும். அதே நேரத்தில் இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Method of entering BSNL internet connection phone number in EMIS website



 BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை பள்ளியின் EMIS Login  வாயிலாக உள்ளீடு செய்யும் முறை


Method of entering internet connection phone number provided by BSNL company through EMIS Login of school


அனைத்து  வட்டார வள மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் வட்டார வளமைய ஆசிரியப்பயிற்றுனர்களின்  கவனத்திற்கு,


  அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் எந்த ஒரு நிறுவனம் மூலமாகவும் BSNL இணைய இணைப்பு பெற்று பயன்பாட்டில் இருந்தால் அந்த இணைய இணைப்பிற்காக BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை மட்டும் எந்த பிழையும் இன்றி தங்கள் பள்ளியின் EMIS Login  வாயிலாக உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .


இந்த இணைய இணைப்பு தொலைபேசி எண் BSNL வழங்கும் Invoice Bill - இல் குறிப்பிடப்பட்டிருக்கும். 


 தற்போதைய நிலையில் BSLN இணைய இணைப்பு பெற்று செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மட்டும்  இந்த தகவலை வழங்கினால் போதுமானது.


மேல் குறிப்பிட்ட இந்த தகவலை தங்கள் பள்ளியில் 13.01.2025 மதியம் 2.00 மணிக்குள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 


Available in school login . 


Under schools menu --> tech --> Internet connection BSNL.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Reducing Data Entry Workload of HMs and Teachers in EMIS - SPD Proceedings

 

EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


குறிப்பிடப்பட்டுள்ள EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள்


Samagra Shiksha - Recommendations for Reducing Data Entry Workload of Headmasters and Teachers in the EMIS Module - SPD Proceedings


சமக்ரா சிக்ஷா - EMISல் தரவு நுழைவு பணிச்சுமையை குறைப்பதற்கான பரிந்துரைகள்- தொடர்பாக.


EMISல் தரவு உள்ளீடு பணிச்சுமையை குறைப்பதற்காக 28.02.2025க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படவுள்ள பணிகளின் விவரம் - SPD செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Samagra Shiksha

State Project Directorate, Chennai -600 006


From

State Project Director (FAC),

Samagra Shiksha,

State Project Directorate,

Chennai - 600 006.


To

1. The Director, School Education.

2. The Director, Elementary Education.

3. The Director, Private Schools.


RC. No.477/ C1 /EMIS/SS/2024-1, dated:30.12.2024


Sub

Samagra Shiksha - Recommendations for Reducing Data Entry Workload in the EMIS Module- regarding.

Ref: EMIS module review by Secretary, School Education Department meeting held on 6.12.2024


With reference cited, a committee was constituted to evaluate current data entry processes and propose solutions aimed at reducing the workload of Headmasters and teachers.


The following modules are removed / reduction in the data entry of Teacher Professional Development (TPD) - In Person, Atal Lab, Register Module (Finance Register, Establishment Register, School Donor Register,Communication Register, Petitions and Proceedings Register, Scholarships and Student Incentives Register, Teacher Timetable, Monthly Reports, and EB Details for Schools), Student-Level Data Entry for Schemes and Reading Program (Vaasippu Iyakkam), Library Module, Kalai Thiruvizha, Formative and Summative Assessments (FA & SA), Schemes and Textbooks, House System and Clubs, IFHRMS and Employee Data, Potential Dropout Tracking,Timetable Management, Digital Infrastructure, School Profile Module, Hitech Lab Assessment and Health Screening Questionnaire.


The proposed changes are expected to be integrated into the EMIS module and made effective for teachers and Headmasters by 28th February 2025.


This letter should be communicated to your subordinate officers


immediately for further action.

For State Project Director (FAC)


Copy to:

The Secretary, School Education Department, Chénnai -9


Rc.No. 001151/F /Sa/2025, dated: 06.01.25


EMIS technical Issues fixed

 

 

சரி செய்யப்பட்டுள்ள EMIS தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த தகவல்கள்


EMIS technical Issues fixed :

1. Able to enter BSNL number. 

2. OTC file upload issue has been fixed. 

3. Loading issue in the home page has been fixed. 


All the queries in the group related to technical difficulties have been addressed for the day. 


 Thank you.


EMIS New Update - Students Bank Account Details - State EMIS Team தகவல்

 EMIS New Update - Students Bank Account Details - State EMIS Team தகவல் 



👆👆👆👆👆


EMIS NEW UPDATE


  Students Bank Account Edit Option now Enabled


Dear team,


Edit option is enabled for student bank account. 

 All bank accounts are unfreezed. Any changes to be made to student bank account details can be done now. 


Thank you.


STATE EMIS TEAM 


மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் திருத்துவதற்கான வாய்ப்பு இப்போது இயக்கப்பட்டுள்ளது


 அன்புள்ள குழுவினரே, மாணவர் வங்கிக் கணக்கிற்குத் திருத்த விருப்பம் இயக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படவில்லை. மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இப்போது செய்யலாம். 


நன்றி. 


மாநில EMIS குழு


EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி

EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி


EMIS இணையதளத்தில்  Individual ID & Password பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே LMS இணையதளத்திற்கு செல்வதற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது


1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் EMIS INDIVIDUAL ID & PASSWORD பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே Go To LMS இணையதளத்திற்கு செல்வதற்கு OPTION கொடுக்கப்பட்டுள்ளது.



 

👇👇👇


https://youtu.be/bi6L4EGViuo?si=GB3IQEmXxVoPehsC



How to take CwSN Training Course in LMS through EMIS Website 


EMIS இணையதளம் மூலம் LMS இல் CwSN பயிற்சியை மேற்கொள்ளும் முறை





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



☘️  IE BASELINE ASSESSMENT - 2024-25 ☘️

******************************

🟣 நாள் : 14.12.24 முதல் ஆரம்பம்  IE Baseline assessment .


🔅 இணையவழி பயிற்சி - 1 முதல்12 ம் வகுப்பு வரை  கையாளும் ஆசிரியர்கள்.


🔅இணையவழி பயிற்சியில் இணைய வேண்டிய இணைப்பு

https://lms.tnsed.com/login/


🔅மேற்கண்ட இணைப்பில் ஆசிரியர்கள் தங்களுடைய EMIS ID மற்றும் password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்


🔅பயிற்சி ஏழு கட்டகங்களைக்கொண்டது.


🔅 *ஒவ்வொரு கட்டகத்திலும் முன் திறனறி மதிப்பீடு,பாடப்பொருள்,பின் திறனறி மதிப்பீடு இறுதியில் பின்னூட்ட வினாக்கள் இடம் பெறும்.


🔅கட்டகங்களில் இடம்பெற்றுள்ள வினாடி வினாக்கள்,பின்னூட்ட படிவங்கள் பூர்த்தி செய்த பின்னரே பயிற்சி நிறைவு செய்த்தாகக் கருதப்படும்


🔅பயிற்சியை நிறைவு செய்ய எடுத்து கொண்ட கால அளவை கணக்கில் கொண்டு சான்றிதழ் உருவாகும்.அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Learner Management System (LMS) - E-learning - Tips for logging in and completing training



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்


Learner Management System (LMS) - E-training - Tips for logging in and completing training



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி

உள்நுழைதலும் பயிற்சியை முடித்தலும் சார்ந்த குறிப்புகள்


1. LMS தளத்தினுள் நுழைதல் 

LMS தளத்தினுள் நுழைய https://lms.tnsed.com/login/ என்னும் இணைப்பைப் பயன்படுத்துக.

உங்களுடைய EMIS பயனர் அடையாள எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழைக. 


2. பயிற்சியின் கட்டமைப்பு

பயிற்சியானது, ஏழு கட்டகங்களைக் கொண்டது. 

ஒவ்வொரு கட்டகத்திலும் முன்-திறனறி மதிப்பீடு, பயிற்சிக்கான பாடப்பொருள், பின்-திறனறி மதிப்பீடு ஆகியவை உள்ளன. 

ஏழு கட்டகங்களின் இறுதியிலும் இடம்பெற்றுள்ள பின்னூட்டத்திற்கான வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். 


3. கட்டகத்தின் படிநிலை வளர்ச்சி

பயிற்சியின் ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்தைய பகுதியை நிறைவு செய்த பின்னரே, தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் கட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


4. கட்டகத்தை நிறைவுசெய்வதற்கான அளவுகோல்கள்

கட்டகங்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பகுதிகள், வினாடிவினாக்கள், பின்னூட்டப் படிவங்கள் ஆகியவற்றை முழுமையாக முடித்தபின்னரே பயிற்சியை நிறைவு செய்ததாகக் கருதப்படும்.


5. சான்றிதழ்

பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவையும் கணக்கில்கொண்டு, பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் உருவாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...