கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.12.2020 (செவ்வாய்)...

 🌹வீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது நிதானமாக இருங்கள். கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!

🌹🌹நம்மை புரிந்து கொள்ளாத இடத்தில் நாம் ஒவ்வொன்றுக்கும்

கொடுக்கும் விளக்கம் அர்த்தம் அற்றதே.

எனவே மெளனமாக இருந்துவிடுவதே சிறந்தது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈M.Phil, Ph.D ஆய்வாளர்களின் உதவித்தொகை தாமதம் குறித்த புகாருக்கு யுஜிசி விளக்கம் : 

சரியான விவரங்களை டிச.10-ம் தேதிக்குள் nspugc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தல். 

🌈🌈பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் - தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

🌈🌈ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது EL கழிக்கப் பட வேண்டும் - CM CELL Reply.

🌈🌈கல்லூரி/பல்கலைக்கழகங்கள் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7ம் தேதி முதல் துவங்க அனுமதி

மருத்துவ கல்லூரிகள் 7ம் தேதி முதலும், புதிய மாணவர்களுக்கு 1.2.2021 முதல் அனுமதி

🌈🌈நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் 

- நடிகர் ரஜினிகாந்த்

🌈🌈வரும் டிசம்பர் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது

கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை தகவல்

🌈🌈🌈புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சட்டப்பாதுகாப்பை அளிக்கிறது 

மத்திய அரசின் திட்டங்கள் பற்றி மக்களிடையே எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன

-பிரதமர் மோடி

🌈🌈தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு 

2 நாட்களில் நல்ல அறிவிப்பு வரும் என்று அரசுத்தரப்பு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தகவல்

🌈🌈ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🌈🌈மாடர்னா தடுப்பூசி 100 சதவிகிதம் பலன் தருகிறது: தயாரிப்பு நிறுவனம்

🌈🌈மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் வகையில் 16 கோடி ரூபாய்க்கான சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியீடு.

🌈🌈ஜனவரி முதல் சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் இயக்கப்படும் 9-வது நகரம் சென்னை ஆகும். 

🌈🌈வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் கடுமையாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்.

🌈🌈இன்று முதல் 3 நாட்கள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. 

🌈🌈அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜோ பைடன் திட்டம்.

🌈🌈வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருகின்றன

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

🌈🌈ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

👉கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க உத்தரவு.

🌈🌈விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க மத்திய அரசு முயற்சி: உதயநிதி ஸ்டாலின்

🌈🌈தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்

🌈🌈புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்

தமிழக அரசு

🌈🌈சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிக்க வேண்டாம்

பொறியியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்து விடும் என்பதால் அனுமதி கூடாது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை                                 

🌈🌈ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்

வசூலித்த கட்டணங்களை 4 வாரங்களில் அண்ணா பல்கலை.க்கு செலுத்த கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு                                                               

🌈🌈ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியானதால் அண்ணா பல்கலை. உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

🌈🌈மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை - ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் - ரஜினிகாந்த்

🌈🌈பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் வந்தால் 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கு எண்: W.P.NO.11144 Of 2020, Date: 15/09/2020

🌈🌈உயர் கல்வி படித்து,  பணக்கார நாடுகளுக்கு இடம்பெயர்வோர் பட்டியலில்  இந்தியர்கள் தான்  முதலிடம்

🌈🌈மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே -உயர் நீதிமன்ற மதுரை கிளை

 🌈🌈இன்றுஉருவாகிறது ‘புரெவி’ புயல் டிச.2,3,4-ல் தமிழகத்தில் அதீத கனமழை -வானிலை ஆய்வு மையம்

🌈🌈தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா: உயர் நீதிமன்ற கிளை கேள்வி

🌈🌈முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

🌈🌈மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் தங்களது பணியை முறையாக செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளுடன் 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது

👉கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளநிலை வகுப்புகள் தொடங்கும்

👉மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் 7ஆம் தேதி முதல் தொடங்கும்

👉மருத்துவப் படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்

👉விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

👉14.12.2020 முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்

👉பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி

 👉கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்

👉கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்

👉நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்

👉சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி

🌈🌈பள்ளி திறக்கப்படாததால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை இல்லை என்று திட்டவட்டமாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து பள்ளிகளையும் விரைவாக திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை.

🌈🌈பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளில் பாதகமான தீர்ப்புகள் -அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என  கல்வித்துறை எச்சரிக்கை 

🌈🌈கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது - தடுப்பு மருந்து எதுவும் தேவையில்லை என அறிவியல் வல்லுனர் கருத்து - நாளிதழ் செய்தி 

🌈🌈ஆசிரியர்கள் நியமனம் - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🌈🌈மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா இணைந்து ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு நடத்தும்  தேசிய அளவிலான அறிவியல் திறனறித்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு.

🌈🌈நீட் பயிற்சி பெற ஆர்வம் : மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 

🌈🌈தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு நான்கு நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

🌈🌈சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள், நாடு முழுவதும் உள்ள ஏதேனும் 4 தோ்வு மையங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

🌈🌈தமிழ்நாடு காவல்துறை தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. 

🌈🌈ஒத்திவைக்கப்பட்ட நெட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு, சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...