கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 03.12.2020 (வியாழன்)...

 🌹எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கின்றோமோ அங்கே தான் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்.!

🌹🌹பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல,

மெளனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல.!!

🌹🌹🌹நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவது இல்லை.

நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி- அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான விவரப் பட்டியல் அனுப்பக் கோருதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.                                                               நாள்.2 .12.2020.                                                                                   

📕📘தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

📕📘சான்றிதழ்களில் சந்தேகம், 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து                

📕📘"Quality Components  programme"- என்ற தலைப்பில் களப்பணிக்காக,  மாவட்டங்களில் ஆசிரியர்களை தேர்வு  செய்வதற்கான வழிமுறைகள் (Teachers Exchange Programme)

மாநில திட்ட இயக்கம் -ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 28/11/2020

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு களப்பணிக்காக ஓர் ஆசிரியருக்கு 3000/- வீதம் ஒதுக்கீடு

📕📘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர் , தீயணைப்பாளர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான எழுத்து தேர்வு டிச-13 ல் நடைபெற உள்ளது.

📕📘 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

📕📘 நிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

📕📘3 வேளாண் சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என டெல்லியில் விவசாயிகள் பேட்டியளித்தனர். எனவே தவறினால் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் எனவும் கூறியுள்ளனர்

📕📘7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சீட் கிடைத்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார்.

👉கள்ளக்குறிச்சி மதுமிதா, சென்னையை சேர்ந்த இந்துஜா, காவியா, கோபிநாத், உமாதேவி, காயத்திரி ஆகியோருக்கு சென்னையில் திமுக சார்பில் மருத்துவ படிப்பிற்க்கான உதவித்தொகையை ஸ்டாலின் வழங்கினார்

📕📘7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் ஏற்பாடு செய்துள்ளதாக  ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

👉சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.

📕📘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சி தான் தமிழ்நாட்டின் மீட்சியாக அமைய முடியும் என கீ.வீரமணி கூறினார். மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்மையான திராவிடர் ஆட்சி அமைய அனைவரும் உழைப்போம் என கூறினார்.

📕📘அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

உச்சநீதிமன்றம்

📕📘சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு.

📕📘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு.

📕📘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

📕📘கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📕📘கடந்த 19 ஆண்டுகளில் இந்தியா, மலேரியா நோயை பெருமளவு குறைத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.                                                                                       

📕📘கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

📕📘ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2020-2021ம் கல்வி ஆண்டில் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொள்ளுதல் குறித்த இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

📕📘கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு

ஃபைசர் - பயோடெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரிட்டனில் கிடைக்கும்.

📕📘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. 

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

📕📘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாகத் திறக்க வேண்டுமென்ற ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

📕📘கொல்கத்தா போலீசார் ஜுலை 2017 ஆம் ஆண்டு கர்ணணை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைத்தனர். ஆனால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அவதூறு பேச்சுக்கு கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.                                                                         

📕📘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 2-1 கணக்கில் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது

📕📘கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது  தேவாலயங்களில் வழங்கப்படும் புனித அப்பம், நீர் உள்ளிட்டவற்றை தனித்தனி குவளைகளில் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு

📕📘டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்கள் என எல்.முருகன் கூறுவது வேதனை அளிக்கிறது; குளிரிலும், வெயிலிலும் போராடும் விவசாயிகளை அவமதிப்பது மனிதாபிமானமற்றது 

- கனிமொழி எம்.பி.,

📕📘ஆசிரியர் நல தேசிய நிதியம்-தமிழ்நாடு-தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘2003 -2004 தொகுப்பூதிய நியமனம்-பணியில் சேர்ந்த தேதி முதல் பணி வரன்முறை செய்ய முடியாது -பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘டெல்லியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

நாளிதழ் செய்தி

📕📘குடியிருப்புகளின் அடிப்படையில் புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை & தரம் உயர்வு பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  உத்தரவு

📕📘கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

📕📘5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் மாநில திட்ட  இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: டிச.10 கடைசித் தேதி- உயர் கல்வித்துறை அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...