கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 04.12.2020 (வெள்ளி)...

 🌹வாழ்க்கையில் தடுமாற்றம் வரலாம் ஆனால் உங்கள் மனம் தடுமாறினால்,உங்கள் வாழ்க்கையையே தடம் மாற்றிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

🌹🌹பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்க்கலாம்,ஆனால் உங்கள் உழைப்பு தெரியாமல் வளர்க்காதீர்கள்.!!

🌹🌹🌹பிரியமானவர்கள் ஒருபோதும் நம்மை காயப்படுத்தமாட்டார்கள் என்று நம்ப வேண்டாம்.சிலசமயம் எதிரியை விட மோசமாக காயப்படுத்தி விடுவார்கள்.!!! 

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀பொறியியல் மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏஐசிடிஇ  வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

🎀🎀பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம்

🎀🎀தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி- 01.01.2019 -   அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டமை - பணிவரன்முறை செய்தல்-  விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்

🎀🎀நெட், ஸ்லெட்டில் தேர்ச்சி பெற்று உரிய தகுதி இருந்தும் யூஜிசி நிர்ணயித்த ஊதியம் கிடைக்கவில்லை - அரசு, தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் வேதனை.

🎀🎀 2021 பொதுத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது; எழுத்துபூர்வமாகவே நடைபெறும் - சிபிஎஸ்இ

🎀🎀ஆவின் நிறுவனத்தில் 20 காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி: 8th, 12th, ITI, Any Degree - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020

🎀🎀கனரா வங்கியில் காலியாக உள்ள 220 அலுவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-12-2020.

🎀🎀இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் டாப் -10 காவல் நிலையங்கள். தமிழகத்தில் சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு 2ம் இடம். மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு

🎀🎀டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டிச.5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 

🎀🎀சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகள் பதவியேற்றனர்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

🎀🎀தமிழில் குடமுழுக்கு நடத்தாவிடில் கோவில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை

🎀🎀அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா?

தென்காசி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி.                                                        

 🎀🎀Engineering-ல் அரியர் வைத்துள்ளவர்கள் அதை தற்போதைய செமஸ்டரில் எழுத விரும்பினால், வரும் 10-ம் தேதிக்குள்ளாக பதிவு செய்ய வேண்டும்.

-அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🎀🎀2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் வருகின்ற டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு வெளியாகும். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவது நிச்சயம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

👉ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார். ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

🎀🎀நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் இன்னொரு முகமாக இயங்குவார் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்பதன் மூலம் வலதுசாரி அரசியல்வாதியாக கட்டிக்கொள்ள ரஜினி விரும்புகிறார்என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நியமனம் மூலம் ரஜினி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது என திருமா கூறியுள்ளார்.

🎀🎀சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ம் தேதியன்று விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

🎀🎀இந்தியாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது -  உலக சுகாதார மையம் பாராட்டு.

🎀🎀ஜம்மு-காஷ்மீர் தொடர்பான தவறான வரைபடத்தை காட்டும் இணைப்பை உடனடியாக நீக்குமாறு, விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

🎀🎀தீவிரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் சர்வதேச ஒருங்கிணைப்பால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் - ஐநா வில் இந்தியா வலியுறுத்தல்.

🎀🎀கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் - ஜப்பான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.

🎀🎀ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவு. ஆசிரியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், புதின் தெரிவித்துள்ளார்.

🎀🎀மாடர்னா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு டிசம்பர் 17ந் தேதிக்குப் பிறகு, அமெரிக்கா அனுமதி வழங்கும் என அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.

🎀🎀93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀2024ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

🎀🎀தமிழக வீரர் நடராஜனின் கதை அனைவருக்குமே முன் மாதிரி என ஹர்திக் பாண்ட்யா புகழாரம் சூட்டி உள்ளார்.

🎀🎀புரெவி புயலின் காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

1.தூத்துக்குடி

2.திருநெல்வேலி

3.கன்னியாகுமரி

4.இராமநாதபுரம்

5.தென்காசி

6.விருதுநகர்                                                          

🎀🎀2021ஆம் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளைத்  (10-ஆம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) திறக்கக்கோரி  அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது

🎀🎀காலியாக உள்ள 1500  முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர்களை   விரைந்து நியமிக்க பள்ளி கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம். 

🎀🎀எல்ஐசி நிறுவனத்தின் பொன்விழா கல்வி உதவித் தொகைதிட்டம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்

🎀🎀மத்திய அரசு ஊழியர்களுக்கு 24% அகவிலைப்படி உயர்ந்தது என்று பரவும் தகவல் வெறும் வதந்தியே என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🎀🎀தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு 20-பேர் வீதம் தொழில்நுட்ப களப்பணிக்கு அறிவியல், கணித பட்டதாரி ஆசிரியர்கள் 640 பேர் தேர்வு 

🎀🎀தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும்' என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து, இந்த தொகை வழங்கப்படும். ஆண்டு அடிப்படை ஊதியம் மட்டும், 7.20 லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களின் பிள்ளைகள், படிப்பு உதவி தொகை பெறலாம். இதற்கு, ஜன., 31க்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...