கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் கார்டாக மாற்ற 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

 தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட கடந்த ஆண்டு நவம்பரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதில் ஏராளமானவர்கள் அரிசி அட்டைகளாக மாற்றிக்கொண்டனர். அதன்பிறகு சில வாரங்கள் காலநீடிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ளார். 

அதில்  கூறியிருப்பதாவது:-

பொது வினியோக திட்டத்தில் தற்பொழுது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர், கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து, இன்று (நேற்று) முதல் வருகிற 20-ந் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்க்கரை விருப்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய ரேஷன் கார்டாக மாற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டை நகல் எடுத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...