கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.12.2020 (ஞாயிறு)...

🌹அடிபடும் போது தான்

நிதானம் வருகிறது.

வாகனத்திலும் சரி 

வாழ்க்கையிலும் சரி.!

🌹🌹நிம்மதி வேண்டுமெனில் 

சில நேரங்களில் குருடாகவும்,

பல நேரங்களில் செவிடாகவும் இருக்க வேண்டும்.!!

🌹🌹🌹பணம் இன்று வரும் நாளை வந்த வழி சென்றுவிடும். 

ஆனால் பாசம் என்றும் நிலையானது.

எனவே பணத்துக்காக பாசத்தை விற்று விடக்கூடாது மீண்டும்  கிடைப்பது கடினம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                              

📕📘தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📕📘வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்

📕📘6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

📕📘NTSE தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 

📕📘மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு (G.O.No 125 dated 16.12.2020) 

📕📘ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவக்கம். முதற்கட்டமாக, மாணவர்களை கையாள்வது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி துவங்கியுள்ளது. 

📕📘உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியர்களுக்கு AICTE சார்பில்  விருது  அறிவித்துள்ளது.

📕📘2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

📕📘1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

📕📘தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் தேதி 24.5.2021 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

📕📘புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய ஆரம்பப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு - சட்டப் பல்கலைக்கழகம்

📕📘கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வியை எளிதாக்கும் வகையில்,அரசு பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 1,75,443 மாணவர்களுக்கு பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரண்டாம் கட்டமாக 80,000 பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

📕📘அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தீர்ப்பு  வழங்கியுள்ளது                                                                        

 📕📘தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பவர்கள், தாங்களாகவே மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

📕📘இந்தியாவில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.

📕📘G.O 185- DATE -15.12.2020- பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு - நாள்: 15.12.2020

📕📘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் வெளியீடு 

📕📘பொருளாதாரத்தில் முன்னேற கல்வியால் தான் முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

📕📘''பள்ளிகள் திறப்பை விட, மாணவர்களின் உயிர் தான் முக்கியம்'' - அமைச்சர் செங்கோட்டையன்

📕📘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜன.4-ல் இலவச JEE தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

📕📘ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

📕📘கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய போகிறேன் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்

📕📘ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று அரசால் நிராகரிக்கப்பட்ட வெயிட்டேஜ் முறையினால் 2013 ஆம் ஆண்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பாதிக்கப்பட்ட நபர்கள் முதல்வரை சந்திக்க சேலம் வருகை

👉2013ஆம் ஆண்டுஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீட்டின் முன்பு நீண்ட வரிசையில் மனு கொடுக்ப்பதற்கு 300க்கும் மேற்பட்டோர்  காத்திருப்பு. 

📕📘கால்நடைகளுக்கான கொட்டகைகள் அமைக்க 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

📕📘கொரோனா கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது - நடிகர் விவேக்

📕📘தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்

தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

📕📘தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

📕📘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், வரும் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை சமர்பிக்க உத்தரவு; பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

📕📘கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📕📘டெல்லியில்  புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும்  விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் 10 பேர் டெல்லி புறப்பட்டு சென்றனர்

📕📘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்களோடுதான் அதிமுக கூட்டணி அமைக்கும்

- செல்லூர் ராஜு

📕📘பொங்கல் பரிசு அறிவித்தது சுயநலம் அல்ல, கடந்த ஆண்டு மக்கள் நன்றாக இருந்ததால் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தோம், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.2,500 தருவதாக அறிவித்துள்ளோம்.

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் முதல்வர் பழனிசாமி பதில்..

📕📘அதிகமாக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.

மருத்துவ விடுப்பு, கொரோனா விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுக்கும் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை.

-கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை.

📕📘வேதியியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

📕📘இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் இந்திய திரைப்படங்களின் பட்டியலை தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்டுள்ளார்.

இதில் அசுரன், தேன் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் உட்பட 23 இந்திய மொழிகளின் திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.                                                                                                   

📕📘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை தவறாக வழிநடத்தாதீர்; எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்.

📕📘மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 25ஆம் நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்.

📕📘சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் நாளை  சென்னை வருகை.

📕📘சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  

📕📘தெலுங்குதேசம் முன்னாள் எம்.பி. ஒருவரை நிர்வாகியாகக் கொண்ட, டிரான்ஸ்ட்ராய் என்ற நிறுவனம் கனரா வங்கிகளில் 7 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

📕📘தைத்திருநாளை சிறப்பாக கொண்டாட இந்த ஆண்டு ரூ.1000 என்பதை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வருகிற 2021 ஜனவரி 4 முதல் இந்த தொகை வழங்கப்படும் 

👉பொங்கல் பரிசு

ஒரு கிலோ அரிசி 

ஒரு முழு கரும்பு 

ஒரு கிலோ சர்க்கரை 

திராட்சை, வெல்லம்.. 

👉2 கோடியே 6 லட்சம் அட்டைதார்ர்களுக்கு வழங்கப்படும்

-முதல்வர் அறிவிப்பு

📕📘தமிழகத்தில் தற்போது தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது

இங்குள்ள தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது - திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின்             

📕📘தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயநலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா?" - மு.க.ஸ்டாலின்

📕📘மினி கிளினிக்குகள் கவுண்டமணி வாழைப்பழம் காமெடி போல இருக்கிறது- ஸ்டாலின் பேச்சு*

ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம் என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்*

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை மினி கிளினிக்கிற்கு நியமித்து பெயிண்ட் அடித்துள்ளார் முதல்வர்                       

 📕📘"புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணத்தை வழங்காமல் பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவித்திருப்பது சட்டமன்ற தேர்தலுக்காக" - முத்தரசன்

📕📘தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும் தங்களது சார்பில் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. 

 இந்த நிலையில், தமிழக அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், 

 தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது. 

 தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் அவரது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு நியமிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளது. 

 தமிழகம் உள்பட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...