தமிழக சட்டசபை தேர்தலுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன மேற்பார்வையிடவும், இதை கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் சம்பந்தமான பணிகளுக்கும் சிறப்பு தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலும் ஓட்டுச்சாவடியின் தலைமை மற்றும் இதர அலுவலர் பணிகளில் ஆசிரியர்களேஈடுபடுத்தப்படுவர்.
ஊதியத்தின் அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது ஆசிரியர்கள் பெறும் ஊதியம், புகைப்படம், வாக்காளர் பட்டியலின் பாக எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதை கண்காணிக்க கல்வித்துறை சார்பில் தொகுதிக்கு முதன்முறையாக ஒரு அதிகாரி நியமனம். செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முந்தைய தேர்தல்களில் தாசில்தாரே பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.