கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.12.2020 (ஞாயிறு)...

 


🌹வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் 

அனைவரின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.!

🌹🌹பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும்

வேண்டாத விஷயத்தில் கவனம் செலுத்தாமலும்

தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தாலே போதும்

நம் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.!!

🌹🌹🌹கோபம் வரக்கூடாது என்று எவ்வளவு தான் மன கட்டுப் பாட்டுடன் இருந்தாலும்

ஒரு சிலரின் செயலைப் பார்க்கும் போது கட்டுப்பாட்டை மீறிய கோபம் வந்து விடுகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அமல்படுத்தப்படுமா என்று முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

👉பூஜியம் கல்வி ஆண்டு என்பது

இந்த ஆண்டு படிக்கும்  அதே வகுப்பில் அடுத்த கல்வி ஆண்டும் படிக்க வேண்டும்.

🍒🍒எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வு துறை இயக்குனர் அறிவுரை

தேர்வு நடைபெறும் தேதி 21.1.2021

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 28.12.2020

🍒🍒கொரோனா காலத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான ஆயுட்கால சான்றிதழ் சமர்பிக்கும் அவகாசத்தை பிப்ரவரி வரை நீடிப்பதாக ஓய்வூதிய நலத்துறை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று உத்தரவு பிறப்பித்தார். 

🍒🍒மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு மாணவர்களை நேரில் வரவழைத்து தேர்வு நடத்தப்படுவதால் கொரோனோ பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

🍒🍒தமிழகத்தில், முதல்கட்டமாக ஐந்து லட்சம் சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா் 

🍒🍒கல்லுாரிகளில் இறுதியாண்டு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது. 

🍒🍒முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்டுத்த வேண்டும் இல்லையெனில், சிறை நிறப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது,

🍒🍒நாளை டிச.28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.

🍒🍒தினசரி கொரோனா வைரஸ் பரவல் சுமார் 1000 என்ற அளவுக்கு குறைந்த பிறகும் தினமும் 65,000 பேருக்கும் கூடுதலாக கொரோனா சோதனை நடத்தப்படுவது  மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ராமதாஸ்

தமிழக அரசை சில வாரங்களாக விமர்சித்து வந்த நிலையில், பாராட்டு.

🍒🍒உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர்.

- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு.

🍒🍒ரஜினி ,கமல் வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது; ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை

- மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டி

🍒🍒பிரதமர் மோடியுடன் காணொலிக் காட்சியின் மூலமாக வாதாட தயார். பிரதமர் இரட்டைவேடம் போடுகிறார்

- நாராயணசாமி அதிரடி

🍒🍒வேளாண் சட்டம் தொடர்பாக டிசம்பர் 29ம் தேதி மத்திய அரசுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

🍒🍒குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

- TNPSC அறிவிப்பு.

🍒🍒திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை. 

அறிகுறிகள் இல்லாத பக்தர்களை அனுமதிக்க வேண்டும் 

- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒TNPSC குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்வதாக TNPSC அறிவிப்பு

🍒🍒வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஒன்பது சதவீதம் விரிவடையும் என இங்கிலாந்து பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ள இந்தியா, மீண்டும்  இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஐந்தாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

2025-ம் ஆண்டு உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், 2030-ல் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா வளர்ச்சி பெறும் என அந்த அறிக்கை கூறுகிறது.

தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் ஒரு கட்டத்தில் பொருளாதார ரீதியில் அதிக வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக வைகோ அறிவிப்பு

🍒🍒CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து வரும் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் !

- மத்திய கல்வி அமைச்சர்

🍒🍒UV கதிர்களால் கொரானா வைரஸ் 30 விநாடிகளில் இறந்து விடும்.

LED பல்புகள் இதற்கு போதுமானது என்றும் கண்டு பிடிப்பு !

- இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

🍒🍒மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் எழும்  WeRejectADMK முழக்கம் கேட்டுப் பதறுகிறது அதிமுக அரசு

-மு.க.ஸ்டாலின் ட்வீட்

🍒🍒முதல்வர் தலைமையில் நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் புறக்கணித்தார்.

ஆட்சி முடியும் தருவாயில் அவசரமாக தேர்வு குழு கூட்டம் கூடி உள்ளது; இதில் பங்கேற்பது பயனற்றது என மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை போன்று இந்த ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றுள்ளது.

🍒🍒வேலை வாய்ப்பில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🍒🍒பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி விலகல்

🍒🍒கிராமசபை கூட்டம் நடத்தத் தடைவிதித்துள்ளது கருத்து மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு எதிரானது என தமிழக வாழ்வுரிமை கட்சி தெரிவித்துள்ளது.

திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி துணை நிற்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

🍒🍒ஆளுநர் தலையீட்டால் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியவில்லை :  

பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதில்

🍒🍒திருமண பதிவுக்கு வருவோரை அலையவிடக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல்

முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

🍒🍒உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பால் இதை சாத்தியமாக்கியுள்ள விஞ்ஞானிகளையும், குடியரசு துணைத் தலைவர் பாராட்டியுள்ளார்.

🍒🍒சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை மூலம் நேற்று முதன்முறையாக ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல்

🍒🍒தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். இந்த கூட்டணியில் யார் முதல்வர் என்று முருகனோ வானதி சீனிவாசனோ அறிவிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாள்களில் தமிழகத்திற்கு வருகை தரும் அவர் தேசிய கட்சி தலைவர் நட்டா தான் அறிவிப்பார் -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

🍒🍒காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே  ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

🍒🍒"காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு; மதச்சார்பின்மை என்ற ஒற்றை கொள்கை தான் எங்களை ஒற்றுமையாக வைத்துள்ளது!" - கே.எஸ்.அழகிரி

🍒🍒சென்னையில் வரும் 28ஆம் தேதி முதல் 90 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயங்கும்; புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு

🍒🍒அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் முதுமை காரணமாக காலமானார்.

🍒🍒வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்கள் மட்டுமே அஇஅதிமுக கூட்டணியில் தொடர முடியும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

🍒🍒“சமூக நீதியைக் காக்க தேர்தல் அரசியலில் இருந்து விலகவும் தயார்!” - திருமாவளவன் எம்.பி

🍒🍒சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்! - சீமான்

🍒🍒பொங்கல் பரிசு தொகை பெற நேற்று முதல் டோக்கன் விநியோகம்; 30ம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை.

🍒🍒புத்தாண்டு நள்ளிரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே கைது. குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு, கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - சென்னை மாநகர காவல்துறை.

🍒🍒30 கோடி பேருக்கு முன்னுரிமை

அடிப்படையில் கொரோனா தடுப்பூசி;

மத்திய அரசு தீவிர நடவடிக்கை.

🍒🍒மூன்று வேளாண் மசோதாக்களையும்

வாபஸ் பெற வேண்டும்; குடியரசு

தினத்தன்று டெல்லியில் பேரணியில்

ஈடுபடப் போவதாக விவசாயிகள் தகவல்.

🍒🍒அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அறிவுறுத்தல். 

🍒🍒நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

🍒🍒நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது- ஹைதராபாத் தனியார் மருத்துவமனை தகவல்.

ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று காலை முடிவு செய்யப்படும்.

பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை - மருத்துவமனை.

🍒🍒ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவிப்பு

வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🍒🍒ஒடிசா: நீட் தேர்வில் தேர்ச்சி - மருத்துவம் படிக்கும் 64 வயது மாணவர் - ஜெய கிஷோர் பிரதான்

🍒🍒மத்தியப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு - வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்.                                          

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...