கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசிதழ் எண்: 36, நாள்: 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை...

 அரசிதழ் எண்: 36, நாள்: 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை க.து.ந.க.எண்: இ4/00627/2019, நாள்: 16-11-2020...

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பாடவாரியாக காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு 01 / 01 / 2020 - ஐ மைய நாளாக கொண்டு உரிய தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டு தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது. 



பார்வை 2 ல் கண்டுள்ள அரசாணை எண். 720, பள்ளிக்கல்வித்துறை , நாள் : 28.04.1981 ல் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணியின்படி ( The Tamil Nadu Higher Secondary Educational Service ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை 50 % நேரடி நியமனம் மூலமும் , 50 % பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 



பார்வை 3ல் கண்டுள்ள தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறையின் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில் , “ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் ( same subject ) இளங்கலை பட்டம் ( Bacheler's degree ) மற்றும் முதுகலை பட்டம் ( Master's degree ) பெற்று இருக்க வேண்டும் " என்று கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...