கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்...


 தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மாணவர் தேர்ச்சி:

 தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மற்ற 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். ஆனால் இந்த ஆண்டில் பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டை பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்க வாய்ப்புகள் குறைவு.


இந்த கல்வியாண்டில் 75% வேலைநாட்கள் முடிவடைந்த நிலையில் இனிமேல் பள்ளிகளை திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்துவது கடினம், மேலும் உருமாறிய கொரோனா காரணமாகவும், தடுப்பூசிகள் குறித்த புரிதல் போன்ற காரணங்களால் பள்ளிகள் திறந்தாலும் 5 முதல் 12 வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை. எனவே மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்ச்சி வழங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Job satisfaction - Today's Short Story

  செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை  Job satisfaction - Today's Short Story  இன்று ஒரு சிறு கதை செய்யும் தொழில் மனத்திருப்தி...