கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)...
நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)...
1) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரிந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
2) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரியாத மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி ( RTE ) சட்டத்தின் படி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
3) 1 முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED School appல் Online மூலமாக தேர்வு நடத்தி பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
4) 4 முதல் 7ஆம் வகுப்பு வரை மூன்று பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
5) 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களில் A,B,C,D தரம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
6) 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
7) 8ஆம் வகுப்பில் முழுஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
8) 8ஆம் வகுப்பில் முழுஆண்டுத் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
>>> மாணவர் வருகை சதவீதம் கணக்கீடு...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தொடக்கப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Primary Schools 2022 - 2023)...
தொடக்கப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Primary Schools 2022 - 2023)...
1) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரிந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
2) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரியாத மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி ( RTE ) சட்டத்தின் படி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
3) 1 முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED School app ல் Online மூலமாக தேர்வு நடத்தி பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
4) 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
5) 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களில் A,B,C,D தரம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.
>>> மாணவர் வருகை சதவீதம் கணக்கீடு...
EMIS Websiteல் மாணவர்களை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவதற்கான (Students Promotion Procedure) வழிமுறைகள்...
STUDENTS PROMOTION பணியை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும்...
STUDENTS PROMOTION சார்ந்து EMIS TEAM வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்... 👇👇👇
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
1 முதல் 9ஆம் வகுப்புகள் வரை - தேர்ச்சி ஒப்புதல் பெறுதல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (1 to 9th Standard - Approval and Declaration of Examination Results - Proceedings of Thanjavur Chief Educational Officer) ந.க.எண்: 7595/அ3/2021, நாள்: 14-05-2022...
1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - புதுச்சேரி அரசு (All students are Pass from 1st to 9th Standard - Puducherry Government)...
1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - புதுச்சேரி அரசு (All students are Pass from 1st to 9th Standard - Puducherry Government)...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு...
செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...
EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிமுறைகள்...
EMIS Website - Students Promotion Steps...
>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிமுறைகள்...
தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் மதிப்பெண் நோட்டில் எழுத வேண்டிய தேர்ச்சி விதிகள் - Annual Results Format...
அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....
நமது மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவுபடியும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைபடியும் 2020-2021 கல்வி ஆண்டிற்கான 1-8 வகுப்புகள் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிட ஏதுவாக அனைத்து பதிவேடுகளையும் தயாராக வைக்க வேண்டும்
மதிப்பெண் நோட்டில் வகுப்பு வாரியாக மாணவர்பெயர் எழுத வேண்டும்
💐முதல் பருவம்
💐இரண்டாம் பருவம்
💐மூன்றாம் பருவம்
💐குறிப்பு என பிரித்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் நேரே குறிப்பில் தேர்ச்சி என்று எழுத வேண்டும்
தேர்ச்சி சுருக்கம்
வ.எண்
வகுப்பு
பதிவு
தேர்ச்சி
தேர்ச்சி விழுக்காடு என வகுப்பு வாரியாக அட்டவணை படுத்த வேண்டும்.
தேர்வு சுருக்கத்திற்கு கீழே அந்தந்த
வகுப்பு ஆசிரியர் கையொப்பம் இட வேண்டும்.
தலைமையாசிரியர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு சுருக்கம் எழுதவேண்டும்.
தேர்ச்சி விதிகள்
1.அரசாணை நிலை (எண்) 48 பள்ளிக்கல்வித் (அ.தே) துறை நாள் : 25.02.2021.
2. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009.
3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6 ந.க.எண்: 004010/ஜெ1/2020 நாள் : 31.05.2021.
🌹குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு–16 ன் படி அனைத்து மாணவர்களுக்கும் (1-8 வகுப்புகள்) தேர்ச்சி அளிக்கப்படுகிறது
என தேர்ச்சி விதிகள் எழுதி தலைமையாசிரியர் மற்றும் தேர்வு குழுவினர் கையொப்பம் இட வேண்டும்.
✏️மாணவர் வருகைப் பதிவேட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் மே மாதம் மாணவர் பெயர் எழுதி பெயருக்கு நேரே தேர்ச்சி என குறிப்பிட வேண்டும்.
✏️ இறுதியாக வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...
DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...
>>> தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் வழங்கும் முறை தயார் - அமைச்சர் மகேஷ்...
'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளி கல்வி துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: தினமும் துறை ரீதியான கூட்டம் நடக்கிறது. அதில், அதிகாரிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய அரசு விபரங்கள் கேட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வருடன் பேசி, இன்று கடிதம் அனுப்பப்படும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, தன்னார்வத்துடன் கொரோனா தடுப்பு பணிக்கு வந்துள்ளனர். அவர்களை முதல்வரே பாராட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் குழுவினர், உளவியல் கவுன்சிலிங் தருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், வீட்டில் இருந்து கல்வி கற்க வசதியான, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
>>> பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை...
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். SSLC மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது உள்ள சூழலில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதாக என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவது பற்றி அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தினசரி கொரோனா தொற்று 35 ஆயிரத்தை தாண்டகிறது. எனவே எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கொரானா விடுமுறை சார்ந்த தேர்ச்சி விதிகளுடன் கூடிய தேர்ச்சி ஒப்புதல் படிவங்கள் தொகுப்பு - 2020-2021 - PDF...
Collection of Result Acceptance Forms with Corona Holiday Result Rules to be submitted to the Block Educational Office - 2020-2021 - PDF ...
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி...
9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு என நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு.
அதே போல் ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது ,11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான குரூப்பை தேர்வு செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறையினை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியை கண்டறிய 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 வில் 'ஆல் பாஸ்?' கல்வி அதிகாரிகள் விளக்கம்...
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆண்டு முழுதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஜன., முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், ஆல் பாஸ் வழங்குவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. முழு ஆண்டு தேர்வு, பொது தேர்வு உட்பட எந்த தேர்வும் நடத்தப்படாது என, அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2க்கு மட்டும் மே, 3 முதல் பொது தேர்வு துவங்க உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 'பிளஸ் 2க்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என, அறிவித்தார். இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து, உயர்கல்விக்கு செல்ல, பிளஸ் 2 பொது தேர்வு மிக முக்கியம். அந்த தேர்வில் ஆல் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. பிளஸ் 2வில் பொது தேர்வு நடத்தாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்கள், தமிழக மாணவர்களை, இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என, எந்த படிப்பிலும் சேர்த்து கொள்ளாது. எனவே, பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான, எதிர்கால தேவை அடிப்படையில், அவர்களுக்கு பொது தேர்வு நடத்தி, மதிப்பெண் வழங்குவது கட்டாயம்.
பிளஸ் 1 வரை மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டது போல, பிளஸ் 2க்கு ஆல் பாஸ் சாத்தியமில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு...
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் தேர்ச்சி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளி சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
‘பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகளை ரத்து செய்வதற்கு முன்பு எந்த ஒரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தனித்தேர்வு
அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எனவே, எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற மனுதாரர் வாதத்தை ஏற்க முடியாது. மாணவர்கள் தேர்ச்சி தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய முடியாது.
அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...