கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 16.01.2021(சனி)...

 


🌹சந்தோஷம் என்பது நீங்கள் வாழும் இடத்தில் இல்லை.

நீங்கள் வாழும் விதத்தில் தான் உள்ளது.!

🌹🌹காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை.!!

🌹🌹🌹கண்ணீர் சிந்தும்போது துடைக்க யாரும் வருவதில்லை.

கவலை கொள்ளும் போது சிரிக்க வைக்க எவரும் வருவதில்லை.ஆனால் அறியாமல் ஒரு தவறு செய்து பாருங்கள் 

உங்களை விமர்சிக்க இந்த உலகமே கூடி வருவார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு.

2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🌈🌈அஞ்சல் பணி தேர்வை தமிழிலும் எழுதலாம் - மத்திய அரசு அறிவிப்பு

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியிட்ட நிலையில் தற்சமயம் இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது

👉எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதில் 

"ரயில் தபால் 

சேவை கணக்கர் தேர்வும் தமிழிலும் நடத்தப்படும்"

🌈🌈பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு

🌈🌈10, 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு: ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது.

🌈🌈24.01.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 18.01.2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

🌈🌈பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

🌈🌈புதுசேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை மட்டுமே செயல்படும்

🌈🌈மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு, வரும், 31ம் தேதி, நாடு முழுதும் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய லாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

🌈🌈9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு

🌈🌈NEET - PG தேர்வு வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும்.

தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு.

🌈🌈இரண்டு வகை கோவிட்-19 தடுப்பூசிகளின் தன்மைகள் பற்றிய விளக்கங்களை மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் திரு மனோகர் அக்னானி, அனைத்து மாநில சுகாதார துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.

🌈🌈அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20ம் தேதி பதவியேற்கிறார் ஜோ பைடன்

🌈🌈உலகளாவிய கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை - மத்திய அரசு

🌈🌈தமிழகத்தில் இன்று முதல் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து; சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தகவல்

🌈🌈19-ம் தேதி பள்ளிகள் திறந்த உடன், மாணவர்களின் பாதுகாப்பு & ஆரோக்கியத்தில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த ஏதுவாக 6,173 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தலா ரூ.500 நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🌈🌈பிரபல சீன நிறுவனமான XIAOMI மற்றும் மேலும் 10 சீன நிறுவனங்களை பொருளாதார கருப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்க அரசு உத்தரவு 

சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி, தற்போதைய டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.

🌈🌈திரையரங்குகளில் அனுமதிக்கப் பட்டதை விட அதிகக் கூட்டம் கூட்டினால் திரையரங்கின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

🌈🌈"எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்" - இராணுவ தின உரையின் போது இராணுவ தளபதி MM நரவனே சீனாவுக்கு எச்சரிக்கை. 

300 முதல் 400 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவக் காத்திருக்கிறார்கள் - ராணுவ தளபதி.

🌈🌈தமிழக அரசியலில் தான் ஒரு கிங் மேக்கர் என குருமூர்த்தி பில்டப் செய்து வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

🌈🌈அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி

🌈🌈234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

🌈🌈மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தையில் நேற்று முடிவுகள் எட்டப்படாததால், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்.

🌈🌈தமிழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி,இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார் மக்கள்  நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலர் ராதாகிருஷ்ணன்.

🌈🌈மாநிலம் முழுவதும் பள்ளிகளில் 18 ஆம் தேதி ஆய்வு: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளில் இருக்க கல்வித்துறை உத்தரவு

👉கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

👉இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள உத்தரவில்,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் 19-ந் தேதி பள்ளிகளை திறக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

👉18-ந்தேதி பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் என்றும், அதனால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                 🌈🌈நாடு முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று முதல் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.                                                     

🌈🌈தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் ஞானதேசிகன்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.

கொரோனா தொற்று காரணமாக கடந்த நவம்பர் 11ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகன் சிகிச்சை பலனின்றி மரணம்.

🌈🌈3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என  விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுடன் நேற்று நடைபெற்ற 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 

வரும் 19-ம் தேதி 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🌈🌈மத்திய அரசு அனுமதித்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார்.

அனுமதி பெற்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது 

சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

🌈🌈மத்திய அரசுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மாஸ்க், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அது தவறு என அவர் கூறியுள்ளார். 

🌈🌈சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

🌈🌈இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் 

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

🌈🌈இன்று போடப்படும் தடுப்பூசி யாருக்கெல்லாம் கிடையாது.

👉18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரொனா தடுப்பூசி கிடையாது.

👉கர்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி கிடையாது

👉முதல் டோஸ் எந்த தடுப்பூசி போடப்படுகிறதோ இரண்டாவது டோஸ் அதே தடுப்பூசி தான் போடப்பட வேண்டும் தடுப்பூசிகள் கலப்பு நிச்சயம் கூடாது.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹பள்ளி திறக்கும் நாள் : 19.01.2021

👉செய்யக்கூடியவை (பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்):

 👉அனைவரும் முகக்கவசம் அணிதல்.

👉கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல்*

பள்ளிக்கு வரும்போதும், முற்பகல் இடைவேளை, மதிய உணவு இடைவேளை, பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும்.

👉சமூக இடைவெளி கடைபிடித்தல்

👉சமூக இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு தரையில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகள் வரைதல்,

👉ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல்.

👉தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER )கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதித்தல்

👉பல்ஸ் - ஆக்சிமீட்டர் பயன்படுத்த அறிந்திருத்தல்

👉வைட்டமின் மற்றும் துத்தநாக (ZINC ) மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல்

👉ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள

அட்டை அணிந்திருத்தல்

👉பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள கோவிட்-19 - SOP ஐ

ஆசிரியர்கள் முழுமையாக தெரிந்திருத்தல்

👉பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல். கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல்.               👉அருகாமையிலுள்ள சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்களை அறிந்திருத்தல்

👉வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும், அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல்

-------------------------------------------------

👉பள்ளி திறக்கும் நாள்: 19.012021

செய்யக்கூடாதவை

(விளையாட்டு தவிர்க்கப்பட வேண்டியவை)

 👉25 மாணவர்களுக்கு மேல் ஒருவகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது.                        👉பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது.

👉கழிவறை செல்லும் நேரம் உணவு இடைவேளைகளில் கூட்டம் கூடுதலை தவிர்த்தல்

👉உணவு, தண்ணீர் பாட்டில்கள் எழுதுபொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் கூடாது.

👉இறைவணக்கக் கூட்டம், கலாச்சார நிகழ்வுகள், உடற்கல்வி NSS.NCC

தவிர்க்கப்படவேண்டும்.

👉மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது

👉வகுப்பறையில் ஆசிரியர்கள், மாணவர்கள், முகக்கவசம் அகற்றுதல்

கூடாது.

👉முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது.மூடியவகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்தல், தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது.

கைக்குட்டை மெல்லிழைத்தாள் பயன்படுத்தாமல் பொதுவெளியில் இருமல், தும்மல் கூடாது.

👉பயோமெட்ரிக் (BIOMATRIC) கைரேகை பதிவு கூடாது,

👉குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது*

👉தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...