கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 19.01.2021 (செவ்வாய்)...

 


🌹அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.!

🌹🌹அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.!!

🌹🌹🌹வாழ்க்கையில் துன்பமாகவே இருந்தால் வாழ்க்கை வெறுத்து விடும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருந்தால்

வாழ்க்கையின் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விடும்.

இன்பமும் துன்பமும் கலந்து இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளராக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

⛑⛑10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.

⛑⛑“பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் மருத்துவ குழு செல்லும்; மாணவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்யவே மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது!” - பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்

⛑⛑ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் வெளியீடு 

⛑⛑COVID- 19 ஊரடங்கிற்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான கற்றல் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டது -பள்ளிக் கல்வித் துறை

⛑⛑SMC & SMDC Training incomplete teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

⛑⛑தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

⛑⛑நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீக்சா கைது                                                                              

⛑⛑முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

⛑⛑பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

⛑⛑தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு.

⛑⛑பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

⛑⛑அமெரிக்க நிர்வாகத்தில் 20 இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி ஜோபைடன் கௌரவித்துள்ளார்.

⛑⛑அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் சினோவாக் பயோடெக் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ராஜெனிகா தடுப்பூசிக்கும் பிரேசில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

⛑⛑சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.

சசிகலா வருகை தொடர்பாக செயற்கையான மாயை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.

⛑⛑கொரோனா பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதே தமிழக அரசின் இலக்கு 

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

⛑⛑பாஜக - அதிமுக கூட்டணி துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுக்க முடியாது 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

⛑⛑புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார். புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு கிரண்பேடி தடையாக இருந்ததுதான் திமுகவின் வருத்தத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார். இதனையடுத்து, அவர் கூறியதாவது: முன் களப்பணியாளர்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

⛑⛑பிக்பாஸ்4 பயணத்தில் வெற்றி வாகை சூடினார் ஆரி அர்ஜூனன்.

⛑⛑தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்கள் நேற்று முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் : தமிழக அரசு

⛑⛑கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பக் கோளாறு

2வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தம்.

ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

⛑⛑தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 17-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது

⛑⛑மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்

உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதி

-பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்

⛑⛑ரஜினி மக்கள் மன்றத்தினர் ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம்- ரஜினி மக்கள் மன்றம்

⛑⛑அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்கிறது - சரத்குமார் அறிவிப்பு.

⛑⛑குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள மாபெரும் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

⛑⛑ "தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. 

ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் 21ஆம் தேதி ஆலோசனை

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க அழைப்பு.

- தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 

அறிவிப்பு

⛑⛑மாநில அந்துஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றியுள்ளது புதுச்சேரி சட்டப்பேரவை.

10வது முறையாக இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

⛑⛑வரும் சட்டப்பேரவை தேர்தலில், தனது அரசியல் வாழ்வில் முக்கிய திருப்புமுனையைக் கொடுத்த நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிடப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி அறிவிப்பு

⛑⛑தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் 20ம் தேதி  தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை

⛑⛑பத்மபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இருப்பதாக இளையராஜா கூறியிருக்கிறார்.

 - திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா பேட்டி.

⛑⛑கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார்.

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன்.

- புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன்.

⛑⛑பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி வாசிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு :

மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம்.

- உயர்நீதிமன்ற மதுரை கிளை.

⛑⛑பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 116 ஆகவே தொடர்கிறது - சுகாதார அமைச்சகம்

⛑⛑விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் நடிகர் விஜய்; தன் புகைப்படங்களை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு உத்தரவு.

⛑⛑டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதாக தகவல்

தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாக தகவல்

⛑⛑மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் டான்செட் தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! 

- அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு

⛑⛑அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும் ஜனவரி 21 முதல் மீண்டும் திறக்க பஞ்சாப் அரசு முடிவு

⛑⛑எம்.ஜி.ஆரின் பரம ரசிகன் நான்.எம்.ஜி.ஆர் படம் வந்தாலே தியேட்டருக்கு சென்று விடுவேன்- திமுக தலைவர் ஸ்டாலின்

⛑⛑இந்த தொடரில் இந்திய அணியினர் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. 

அவர்களின் போராட்ட குணம் இந்த தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்

ஆஸ்திரேலிய முன்னாள்கேப்டன் ரிக்கி பாண்டிங்,

⛑⛑இந்திய அணியின் மாற்று வீரர்கள் கூட திறமையானவர்கள் 

இந்திய அணியை ரவிசாஸ்திரி நிர்வகிக்கும் விதம் சிறப்பானது 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்

⛑⛑இந்த தொடரை சமன்  செய்தாலே போதும் நிச்சயம் இது தான் இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் தொடர்:

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்

தனது யூ டியூப் சேனலில் அவர் கூறியது, இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் காயத்தில் சிக்கியிருக்கின்றனர், ஆனால் அதில் தான் அழகு அடங்கியிருக்கிறது, இந்திய அணி சிறுவர்களுடன் ஆடி வருகிறது. ஆனால் இவர்கள் இது போன்ற ஒரு சூழலில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முழுமையான திறனுடன் களமிறங்கியிருக்கும் ஆஸி அணியின் தாக்குதலை பல சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது.

முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது என நான் நம்புகிறேன்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்களுக்குள் சுருண்டு வரலாற்று தோல்வி பெற்ற அவமானத்தில் இருந்து மீண்டு, இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற விதம், சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் அஸ்வினும், விஹாரியும் 50 ஓவர்களுக்கு மேல், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்று அந்த டெஸ்டை ட்ரா செய்தது ஜாம்பவான்களுக்கு உரித்தானது. இந்த டெஸ்டை டிரா செய்தால் இந்த பார்டர் - கவாஸ்கர் தொடர் தான் இந்தியாவின் எப்போதும் சிறந்த டெஸ்ட் தொடராக அமையும்.  

நீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன், இதனை பி-டீம் என்று அழைக்க மாட்டேன். தொடரை சமன்  செய்தாலே போதும் நிச்சயம் இது தான் இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும், என தெரிவித்துள்ளார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...