கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

19 வயது கல்லூரி மாணவிக்கு ஒரு நாள் முதல்வர் வாய்ப்பு...

 உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக  ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற மாணவி ஜனவரி 24 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

தமிழில் வெளியான முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராகவும், இந்தியில் நாயக் திரைப்படத்தில் அனில்கபூர் ஒரு நாள் முதல்வராகவும் நடித்திருப்பதை பற்றி அறிவோம். அவர்கள் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க படத்தில் போராடுவார்கள். ஆனால், நிஜத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற 19 வயது மாணவி ஜனவரி 24 ஆம் தேதி பொறுபேற்க உள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஸ்ரீஸ்தி கோஸ்வாமி யார்?

ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் (Daulatpur ) மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, ரூர்கியில் (Roorkee) அமைந்துள்ள BSM PG கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக (Bal Vidhan Sabha) பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் இருக்கின்றனர்.


ஜனவரி 24-ல் ஸ்ரீஸ்தி கோஸ்வாமி மேற்கொள்ளும் பணிகள்:

ஜனவரி 24 ஆம் தேதி ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் (Gairsain) இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார். அப்போது, அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட  பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட உள்ளார்.

கோஸ்வாமி பதவியேற்புக்கு முன்பு உத்தரகாண்ட் அரசாங்கத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க உள்ளனர். குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் பங்கேற்று வருவதற்காக கோஸ்வாமிக்கு, ஒருநாள் முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து அம்மாநில அரசாங்கம் கவுரவித்துள்ளது. மேலும், ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அவர்களை ஊக்குவிக்கவும் மாநில அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.


பதவியேற்பு விழா:

அவர் பதவியேற்று, பொறுப்புகளை கவனிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோடைகால தலைநகரான கெய்சனில் உள்ள மாநில சட்டசபைக் கட்டிடத்தில் நடைபெறும் என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் உஷா நேகி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கூறியுள்ள அவர், மாணவி கோஸ்வாமி பதவியேற்பின்போது அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாநில முதலமைச்சராக பதவியேற்பது குறித்து பேசிய மாணவி கோஸ்வாமி, இதனை தன்னால் நம்பவே முடியவில்லை எனக் கூறியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னால் இயன்றதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும் என மாணவி கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns