கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு - `வைட்டமின் மாத்திரைகளுடன் 25 மாணவர்களுக்கு மிகாமல்.!’ - ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கும்...

 


ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கும் நிலையில் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இடையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று அனுமதி வழங்கி, பிறகு எதிர்ப்புகளால் மீண்டும் அந்த அனுமதியை நாள் குறிப்பிடாமல் தள்ளிப்போட்டது அரசு. பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்தது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறைகள் முடிந்து வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிகள் அனைத்தும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும், ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கவும் அறிவுறத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...