பெற்றோரின் இசைவு கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வரும் 19 ஆம் தேதி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கப்படவுள்ளது. கடந்த நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவானது கைவிடப்பட்டது. தற்போது 98% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க சம்மதம் தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படஉள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “10, 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு திங்கள் முதல் சனி வரை பள்ளிகள் இயங்கும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் முக கவசம் அணிவிக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது.பெற்றோரின் இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமாக இசைவு அளித்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே 6 மீ இடைவெளி இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
>>> பெற்றோரின் இசைவு கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...