கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வில்லங்க சான்றில் வரி பாக்கி குறிப்பிடப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

 வில்லங்க சான்றில் வரி பாக்கி குறிப்பிடப்பட வேண்டும் -  உயர்நீதிமன்றம் உத்தரவு... Encumbrance Certificates must reflect tax dues, says High Court...

மதுரை: 'மின் கட்டணம், உள்ளாட்சி வரி, வங்கிக் கடன் நிலுவை விபரங்களை வில்லங்கச் சான்றில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சொத்தை வாங்கும் அப்பாவிகள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை தெற்குவெளி வீதியில் ஒரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதியில் தெய்வானையம்மாள் என்பவர் குத்தகை அடிப்படையில் கட்டடம் கட்டியிருந்தார். இடத்தை காலி செய்தார். 'மின் மீட்டரை சேதப்படுத்தியதால், மின் நுகர்வை கணக்கிட முடியவில்லை.

மின்சாரத்தை திருட்டு நடந்துள்ளதால் தெய்வானையம்மாள் 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்,' என மின்வாரியம் உத்தரவிட்டது. தெய்வானை 2 லட்சத்து 8 ஆயிரத்து 437 ரூபாய் செலுத்தினார். மீதி தொகையை செலுத்துவதிலிருந்து விலக்குக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சம்பந்தப்பட்ட இடம் அருகே கதாரியா ஓரியண்டல் நர்சரி பள்ளி கட்டுமானத்திற்கு மின் இணைப்பு கோரி நிர்வாகம் விண்ணப்பித்தது. சுப்பிரமணியபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்),'அந்த இடத்தில் ஏற்கனவே கட்டுமானத்திற்கு மின் இணைப்பு பெற்றிருந்த தெய்வானை 3 லட்சத்து 12 ஆயிரத்து 656 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவில்லை. அதனால் புதிய மின் இணைப்பு வழங்க முடியாது,' என நிராகரித்தார்.பள்ளி தாளாளர் அலி அக்பர் உட்பட 2 பேர்,'ஏற்கனவே மின் இணைப்பு தெய்வானை பெயரில் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம்தான் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். அவர் கட்டணத்தை செலுத்தாதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: தெய்வானை அனுபவித்து வந்த இடத்திற்கு மனுதாரர்கள் மின் இணைப்பு கோரவில்லை. அருகிலுள்ள இடத்திற்குத்தான் கோரியுள்ளனர். இதை எப்படி மறுக்க முடியும்? தெய்வானை நிலுவைத் தொகையை செலுத்ததாதற்கு மனுதாரர்கள் எப்படி

பொறுப்பேற்க முடியும்?

இவ்வழக்கில் வாடகை ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளாக நிலுவைத் தொகையை வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. மனுதாரர்கள் அந்த மின் இணைப்பை பயன்படுத்தவில்லை. மனுதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.மின் கட்டண நிலுவை விபரம் பற்றி தமிழ்நாடு மின்வாரிய தலைவர் உடனடியாக பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு தெரிவிக்க வேண்டும். அவர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தெரிவித்து வில்லங்கச் சான்று பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் உள்ளாட்சி வரி, வங்கிக் கடன் நிலுவை விபரங்களையும் வில்லங்கச்சான்றில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சொத்தை வாங்கும் அப்பாவிகள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும் என்றார்..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...